பித்தம் | | Tamil Best Beauty tips site | Laddu muttai பித்தம் சரியாக சித்த மற்றும் பாட்டி வைத்தியம்

பித்தம் சரியாக சித்த மற்றும் பாட்டி வைத்தியம்

1.கருவேப்பிலை துவையல் அல்லது கருவேப்பிலை பொடி தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர பைத்தியம் மாறும். பித்தம் தணியும். 2.காய்ந்த வேப்பம் பூவை சட்டியில் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு சிவக்க பொரிந்து சிறிது உப்பு போட்டு பிசைந்து 1 கரண்டி சாதத்தில் கலந்து சாப்பிட்டால் பித்தம் நீங்கும். 3.அரச மரத்தின் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும். 4.செங்கழுநீர் கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து இடித்து, சலித்து வைத்துக்கொண்டு சிறிது சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர உடல் சூடு, பித்தம் தணியும். 5.குறைய நல்ல பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்த சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டால் தாகம் பித்தம் குறையும். 6.தினசரி வாழைப்பழம் சாப்பிட்டு வர பித்தம் தணியும். 7.சிறுவெங்காயத்தைச் சிறிது வெல்லத்துடன் சேர்த்து நெய்விட்டு வதக்கிச் சாப்பிட பித்தம் குறையும். 8. அகத்தி கீரை சாப்பிடுவது பித்த கோளாறுகளை அகற்றும். உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். 9. செலவின்றி நிரந்தர தீர்வுக்காக தினமும் காலையில் வெறும் வயிற்றுடன், பல் துலக்கியவுடன் உடன் வாய் சுத்தம் செய்யும் போது விரல்களால் நாக்கின் அழுத்தித் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது உணவுக்குழாய் வழியே உள்ளே இருக்கும் பித்தநீர் முதலில் வெளியேறும். இந்த பித்த நீர் வெளியேற்றம் பல நோய்கள் உருவாவதைத் தவிர்க்கும். மேலும் சளியும் சிறிது சிறிதாக வெளியேறும். 10. சுக்கை தூள் பண்ணி எலுமிச்சம் பழச்சாறு கூட கலந்து குடித்து வரவும். 11. 100 கிராம் உலர்ந்த திராட்சை, 200 கிராம் கடுக்காயுடன் சேர்த்து அரைத்து தினசரி காலையில் 3 கிராம் அளவு சாப்பிட்டு வர, பித்தம், வாந்தி, வாய் கசப்பு தீரும். 12. சுக்கு, மிளகு, திப்பிலி, விளாமிச்சை வேர், கிராம்பு ஆகியவைகளை வகைக்கு 10 கிராம் வீதம் எடுத்து தூள் செய்து இந்த தூளை தினம் 2 வேளை 5 கிராம் வீதம் மூன்று அல்லது ஐந்து தினம் சாப்பிட்டு வர தலைச் சுற்றல் & பித்தம் குணமாகும். 13. திப்பிலி 5 கிராம், மிளகு 10 கிராம் எடுத்து தூளாக்கி அந்த தூள் விளாம்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பித்தம் மற்றும் தலை சுற்றல் குணமாகும்.




kadukkai-payangal

Tag : vegetable |

சித்த மருத்துவத்தில் கடுக்காய் என்பது மிகவும் முக்கியமான மருந்தாக கருதப்படுகிறது. பக்கவிளைவுகள் இல்லாத கடுக்காய் ஆனது பல நோய்களுக்கு காலனாக அமைகிறது. இவை பெரும்பாலும் நமது குடியிருப்புக்களின் அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். தேவையான அளவு கடுக்காயை வாங்கி அதனுள்ளிருக்கும் பருப்பை நீக்கிவிட வேண்டும் .அதன்பிறகு கடுக்காயை நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும். இதனை தினமும் ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவு அருந்திய பின்பு சாப்பிடவேண்டும். இவ்வாறு சாப்பிட்டு கொண்டு வருவதன் மூலமாக பின்வரும் நோய்கள் குணமாகும். 1. ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் 2. கண்பார்வை கோளாறுகள் 3. ரத்தக் கோளாறுகள் 4. காது கேளாமை 5. மூட்டுவலி 6. பித்தம் சம்பந்தமான நோய்கள் 7. உடல் பலவீனம் 8. சர்க்கரை நோய்கள் 9. இதய நோய்கள் 10. வாய்ப்புண் சரியாகும் 11. மூக்கில் உள்ள புண் சரியாகும் 12. இரத்தபேதி நிற்கும் 13. தொண்டை புண் சரியாகும் 14. அனைத்து மூலம் சம்பந்தமான நோய்களுக்கும் அருமருந்தாக அமையும் 15. இரைப்பை புண் சரியாகும் 16. மூல எரிச்சல் சரியாகும் 17. சுவையின்மை 18. குடலில் உள்ள புண்களை சரிசெய்யும் 19. மூத்திர எரிச்சல் மற்றும் கல்லடைப்பு குணமாகும் 20. ஆசன வாயில் உள்ள புண் சரியாகும் 21. மூத்திர குழாயில் உள்ள புண்கள் சரியாகும் 22. நாக்கில் உள்ள புண் சரியாகும் 23. வெள்ளைப் படுதல் நிற்கும் 24. உடல் உஷ்ணத்தை தணிக்கும் 25. உடல்பருமன் 26. தேமல் , படை போன்ற பாதிப்புகளை சரிசெய்யும் 27. அனைத்து விதமான தோல் நோய்களையும் சரி செய்யும்
Laddu Muttai | 12-06-2020
weight-loss-in-tamil

Tag : Weight-loss |

பலருக்கு உடல் பருமனாகும் மிகவும் கவலை தரக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. உடல் இளைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் பலரால் உடற்பயிற்சி தினந்தோறும் மேற்கொள்ள முடிவதில்லை. ஆனாலும் உடல் இளைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் இருப்பது என்னவோ உண்மைதான். உடற்பயிற்சியும் செய்யாமல் விரைவாக உடல் இளைக்க வைக்க பாட்டி வைத்தியத்தில் வழி இருக்கிறது. பெரும்பாலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் மற்றும் நச்சுப் பொருட்கள் உடலில் சேர்வதாலேயே உடல் பருமன் ஆகிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதன் மூலமாக உடலினை இலைக்க வைக்கலாம். இப்படிப்பட்ட நச்சுகளை நீக்குவதற்காக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஒரு கசாயம் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பானத்தில் சோம்பு, மல்லி ,சீரகம் ஆகிய ஒன்று சேர்த்து பருகுவதன் மூலமாக உடல் எடையை குறைக்க முடியும். மேலும் இவை ஆரோக்கியமான உடலையும் மென்மையான சருமத்தையும் கொடுக்கவல்லது. கஷாயம் தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: அரை டீஸ்பூன் சோம்பு அரை டீஸ்பூன் மல்லி அரை டீஸ்பூன் சீரகம் தண்ணீர் ஒரு டம்ளர் இவை அனைத்தையும் இரவு தூங்கும் முன்பு ஒரு டம்ளர் நீரில் ஊற வைக்க வேண்டும். காலை எழுந்தவுடன் முதல் வேலையாக அந்த நீரை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். பின்பு அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்து விட்டு, தேவைக்கு ஏற்ப தேன் சேர்த்த பிறகு குடிக்க வேண்டும். இதனை தொடர்ச்சியாக சாப்பிட்டு வர பத்து நாட்களிலேயே உடல் எடையில் மாற்றம் தெரிவதை நம்மால் காண முடியும். குறிப்பு: கண்டிப்பாக காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில்தான் சாப்பிட வேண்டும்.
Laddu Muttai | 12-06-2020
atthi-pazham-payangal

Tag : Fruit-facts |

1. தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வருவதன் மூலமாக உடம்பில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடல் எடை கூட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பவர்கள் தினசரி இரண்டு அத்திப்பழங்களை வருவதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும். 2. மலச்சிக்கல்: தினமும் உணவு அருந்திய பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிட வந்தால் மலச்சிக்கலை நீக்கும், மேலும் இரவு தூங்குவதற்கு முன்பாக ஐந்து அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் தீராத மலச்சிக்கல் குணமடையும். 3. அத்திபழத்தில் பல வளமான வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்கள் இருப்பதனால் தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வருவதன் மூலமாக உடலானது வளமாக காணப்படும். 4. நாட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வருவதன் மூலமாக வெண்குஷ்டம் வெண்புள்ளிகள் தோலின் நிறமாற்றம் ஆகியவை சரியாகும் இதனை பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசிவர அவை சரியாகும். 5. ஆண்மை: உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வருவதன் மூலமாக அளவற்ற ஆண்மை வலிமையை பெறலாம். மேலும் இவற்றினை பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும். தினமும் 5 முதல் 10 வரை அத்திப்பழத்தை காலை மாலை என இரண்டு வேளையும் சாப்பிட்டு விட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். 6. அத்திப்பழம்மானது எளிதில் ஜீரணம் அடைய கூடிய ஒன்றாகும். இதனால் கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை சுறுசுறுப்புடன் வைத்திருக்க அத்தி பழம் உதவுகிறது. பெருங்குடலில் ஆங்காங்கே சேர்ந்துள்ள இறுகிய கழிவுப் பொருட்களை சிறிது சிறிதாக பக்குவப்படுத்தி இளக்கி வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை கொஞ்சம்கொஞ்சமாக சுத்தம் செய்கிறது.
Laddu Muttai | 12-06-2020
orithal-thaamarai

Tag : plant-facts |

1. உணவு, பொருளாதாரம் மற்றும் சூழல் காரணமாக சில இளைஞர்கள் இளம்வயதிலேயே வயதானவர்களை போல தோற்றமளிப்பார்கள். அவர்கள் இந்த ஓரிதழ் தாமரை, கீழாநெல்லி உருண்டைகளைச் சாப்பிட்டு வந்தால் முதுமை தோற்றம் மறைந்து நல்ல முன்னேற்றம் தெரியும். 2. ஆஸ்துமா நோயாளிகளுக்கும் ஓரிதழ்தாமரையின் கஷாயம் நல்லதொரு மருந்தாகும். உடல் எடையை குறைக்க சிகிச்சை எடுப்பவர்கள் இந்த கஷாயத்தை அருந்தி வருவதன் மூலமாக விரைவாக குறைந்த கட்டுடலை பெறலாம். 3. ஓரிதழ்தாமரையுடன் சம அளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து சிறு சிறு மாத்திரைகளாக்கி தினமும் அதிகாலை சாப்பிட்டு வந்தால் உடலிற்கு நல்லது. 4. ஆண்மை குறைபாட்டால் அவதிப்படும் ஆண்களுக்கு இந்த ஓரிதழ்தாமரை ஒரு புதையல் என்றே தான் குறிப்பிட வேண்டும் . ஆண்மை சக்தி அவ்வளவு சிறந்தது இந்த ஓரிதழ்தாமரை.
Laddu Muttai | 12-06-2020
anmai-athigarika-paati-vaithiyam

Tag : aanmai |

ஓரிதழ் தாமரையானது ஆணைகளுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷமாகும். இந்த செடியின் இலை முதல் வேர் வரை ஆண்களுக்கு எண்ணிலடங்கா பலன்களை அளிக்க கூடியது. நம்ம பசங்க சிறு வயதில் கட்டுக்கடங்காத உணர்ச்சி வெளிப்பாடுகளால் செய்யும் சில செயல்களால் ஆண்மை பாதிப்புக்குள்ளாகும். இதனால் சிலர் திருமண வயதை எட்டும்போது அவர்களால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியாத ஒரு நிலை ஏற்படும். இப்படிப்பட்டவர்களுக்கு ஓரிதழ் தாமரையானது நல்ல பலனை தரும். 1. ஓரிதழ்தாமரையின் இலைகளை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு, பால் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதேபோல், ஓரிதழ் தாமரையின் இல்லை மட்டுமல்லாது வேர் முதல் பூ வரை உண்டு வரலாம். இதனால் உங்கள் ஆண்மையில் ஏற்படும் மாற்றத்தினை நீஎங்கள் விரைவாக அறியலாம். 2. ஓரிதழ்தாமரையின் வேர், இலை, பூ, தண்டு, காய் என அனைத்தையும் நிழலில் உலர்த்திப் பொடி செய்து இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க செல்வதற்கு முன் பாலில் கலந்து சாப்பிட வேண்டும். இதைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடனடி பலன் கிடைக்கும். 3. ஆண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளை ஒழுக்கு, அடி வயிறு வலி போன்றவை சரியாக வேர் முதல் பூ வரை அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து கொண்டு அதனை பசும்பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தாலே போதும். 4. ஓரிதழ் தாமரையின் இலை , வேர் , பூ ஆகிய அனைத்தையும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு 50 மில்லி ஆட்டுப்பால் குடித்து வருவதன் மூலம் இழந்த ஆண்மை சக்தி திரும்பக் கிடைக்கும். இதனை மொத்தம் 21 நாட்கள் குறைந்தது தொடர்ந்து சாப்பிட வேண்டும். பிரச்சனை உள்ளவர்கள் தாமதிக்காமல் உடனே அருகிலுள்ள நாட்டு மருந்து கடையை அணுகி. இதனை சாப்பிட்டு உடம்பை தேற்றவும் இல்லைனா பொண்டாட்டி முன்னாடி புஸ்ஸுன்னு போய்டும்.
Laddu Muttai | 12-06-2020
pazhangalin-payangal-maruthuva-gunangal

Tag : Fruit-facts |

1. ஸ்ட்ராபெரி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நம் உடம்பிற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அது அளிக்கிறது. 2. உடலில் ரத்தம் குறைவாக உள்ளவர்களுக்கு உடல் ரத்தம் உற்பத்தியை அதிகரிக்க இவை பயன்படுகின்றன. 3. ஸ்ட்ராபெரியை தொடர்ந்து உணவில் சேர்த்து கொள்வதன் மூலமாக இருதயம் சமந்தமான அணைத்து நோய்களிலிருந்தும் நிரந்தர நிவாரணம் பெறலாம். ஸ்ட்ராபெர்ரியை சாப்பிடுவதன் மூலமாக உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அகலும். 4. நமது உடலில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் ஸ்ட்ராபெரிக்கு முக்கிய பங்கு உள்ளது. 5. புற்றுநோய் உருவாக காரணமாக இருக்கும் செல்களை வர விடாமல் தடுக்கும் ஆற்றல் ஆனது ஸ்ட்ராபெரி பழத்திற்கு உண்டு. 6. ஸ்ட்ராபெரி பழத்தின் சாறினை தினமும் அருந்தி வருவதால் அவை பற்களின் ஆரோக்கியத்தை காக்கிறது. இதில் இருக்கும் அமிலங்கள் காரணமாக பற்களில் இருக்கும் கரைகளை சாப்பிடும்பொழுதே அகற்றும் தன்மை இதற்க்கு உண்டு, மேலும் வாய் துர் நாற்றத்தையும் போக்கும். 7. குடல் இயக்கத்தை சீராக்கும் சக்தியானது ஸ்ட்ராபெரி பழத்திற்கு உண்டு. குடல் நோய் மற்றும் குடலில் ஏற்படும் புண்களை அனைத்தையும் அகற்றும் .ஸ்ட்ராபெரி பழங்களில் நார்ச்சத்து இருப்பதால் வயிற்று பிரச்சனை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மட்டுமல்லாது செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்யும். 8. அதிகப்படியான வெப்பத்தினால் ஏற்படும் ஆண்மைக்குறைவை போக்கி ஆடவர்கள் இன்றியமையாத ஆண்மை சக்தியை அதிகரிக்கும் திறனானது ஸ்ட்ராபெரி பழத்திற்கு உண்டு. இதில் இருக்கும் குளிர்ச்சித் தன்மை உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் .
Laddu Muttai | 12-06-2020
verkuru-sariyaga
வேர்க்குரு மற்றும் அதன் எரிச்சலுக்கு காரணம் உடல் வெப்பம் தான் , உடல் குளிர்ச்சியடைந்தால் வேர்க்குரு நம்மை அண்டாது. 1. நுங்கு தோலை தடவி வர எரிச்சல் அடங்கும். 2. வேர்க்குரு உள்ள இடத்தில தயிர் தடவி வந்தால் எரிச்சல் நிற்கும். 3. மஞ்சள் வெப்ப இலை கலந்து அரைத்து தொடர்ந்து பயன்படுத்தவும் எரிச்சலும் அடங்கும் மேலும் வேர்க்குரு வராமல் தடுக்கும். 4.கற்றாழை சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் தணிந்து உடல் குளிச்சியடையும் வேர்க்குரு பிரச்னையிலிருந்து விடுபடலாம். 5. வேப்பிலையை நன்றாக அரைத்து தண்ணீரில் கலந்து குளித்து வர எரிச்சல் அடங்கும். 6. சாப்பாடு வடித்த கஞ்சியை குளிப்பதற்கு 10 நிமிடத்திற்கு முன் உடலில் பூசி பின்பு குளித்தால் வேர்க்குரு எரிச்சல் குணமாகும். 7. வெள்ளரிக்காயை நன்றாக அரைத்து உடலில் பூசி 30 நிமிடம் கழித்து குளித்தால் உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சியடையும். வேர்க்குரு எரிச்சல் உடனடியாக நிற்கும். 8. குப்பைமேனி இலையையும் மற்றும் விரலிமஞ்சலையும் ஒன்று சேர்த்து அரைத்து உடம்பில் பூசி வந்தால் எரிச்சல் குணமாகும். 9. சந்தன கட்டை உரசி வைத்தால் உடல் குளிர்ச்சியடையும் , எரிச்சல் அடங்கும். குறிப்பு: ஒவ்வொருவரின் உடல்வாகும் தனித்தன்மை கொண்டது. மேற்கண்ட அனைத்தும் உங்கள் உடல் உபாதைக்கு செயல்படாது , எனவே உங்களில் உடல் வாகின் நிலையை கருத்தில் கொண்டு வைத்தியத்தை பின்பற்றவும்.
Laddu Muttai | 12-06-2020