பலருக்கு உடல் பருமனாகும் மிகவும் கவலை தரக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. உடல் இளைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் பலரால் உடற்பயிற்சி தினந்தோறும் மேற்கொள்ள முடிவதில்லை. ஆனாலும் உடல் இளைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் இருப்பது என்னவோ உண்மைதான். உடற்பயிற்சியும் செய்யாமல் விரைவாக உடல் இளைக்க வைக்க பாட்டி வைத்தியத்தில் வழி இருக்கிறது. பெரும்பாலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் மற்றும் நச்சுப் பொருட்கள் உடலில் சேர்வதாலேயே உடல் பருமன் ஆகிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதன் மூலமாக உடலினை இலைக்க வைக்கலாம். இப்படிப்பட்ட நச்சுகளை நீக்குவதற்காக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஒரு கசாயம் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பானத்தில் சோம்பு, மல்லி ,சீரகம் ஆகிய ஒன்று சேர்த்து பருகுவதன் மூலமாக உடல் எடையை குறைக்க முடியும். மேலும் இவை ஆரோக்கியமான உடலையும் மென்மையான சருமத்தையும் கொடுக்கவல்லது. கஷாயம் தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: அரை டீஸ்பூன் சோம்பு அரை டீஸ்பூன் மல்லி அரை டீஸ்பூன் சீரகம் தண்ணீர் ஒரு டம்ளர் இவை அனைத்தையும் இரவு தூங்கும் முன்பு ஒரு டம்ளர் நீரில் ஊற வைக்க வேண்டும். காலை எழுந்தவுடன் முதல் வேலையாக அந்த நீரை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். பின்பு அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்து விட்டு, தேவைக்கு ஏற்ப தேன் சேர்த்த பிறகு குடிக்க வேண்டும். இதனை தொடர்ச்சியாக சாப்பிட்டு வர பத்து நாட்களிலேயே உடல் எடையில் மாற்றம் தெரிவதை நம்மால் காண முடியும். குறிப்பு: கண்டிப்பாக காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில்தான் சாப்பிட வேண்டும்.