வாய்வு பிடிப்பு உடனடியாக சரியாக என்ன செய்ய வேண்டும்? தாங்கி கொள்ள முடியாத வலிகளில் முக்கியமான ஒன்று தான் வாய்வு பிடிப்பு. எவ்வளவு பெரிய தைரியசாலியாக மனம் திடம் உள்ளவனாக இருந்தாலும் வாய்வு பிடிப்பு ஏற்பட்டால் அவர்களால் அதை தாங்கி கொள்ள முடிவதில்லை. எப்படியாவது உடனடியாக அந்த வலியிலிருந்து வெளியே வர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இருக்கும். சில கை வைத்திய முறைகளை பின்பற்றுவதாலே வாய்வு பிடிப்பிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும். 1. 7-10 பல் நாட்டுப்பூண்டை எடுத்து கொள்ளவும் , அதை எண்ணெய் எதுவும் ஊற்றாமல் வானல் சட்டியில் போட்டு நன்றாக பொன்னிறம் ஆகும் வரை வறுக்கவும், அதை வேறு தட்டில் போட்டு தோலை உரித்து விடவும் (வறுத்த பின்பு உறிப்பதற்கு சுலபமாக இருக்கும்). சூடு சிறிது ஆறியதும் அனைத்தையும் உடனடியாக சாப்பிடவும். சுவையானது வறுத்த கடலையை சாப்பிடுவதை போன்று தான் இருக்கும் .சாப்பிட்டு சிறிது நேரத்திற்குள் வாய்வு பிடிப்பு வலியானது சரியாகிவிடும்.
முக்கிய குறிப்பு:
எக்காரணம் கொண்டு வறுக்காமல் பச்சையாக சாப்பிட கூடாது. அதையும் மீறி சாப்பிட்டால் வாய் தொண்டை மற்றும் வயிற்றில் எரிச்சல் மற்றும் காயம் உண்டாகும் 2. ஒன்றரை டம்ளர் பாலில் சர்க்கரை போடாமல் 5 முதல் 6 நாட்டுபூண்டு உறித்து போட்டு நன்றாக ஒரு டம்ளர் ஆகும் வரை கொதிக்க விடவும். கண்டிப்பாக சர்க்கரை சேர்க்க கூடாது. பால் கொதித்ததும் ஆற வைத்து அதனை சாப்பிடவும்(குடிக்க சற்று சிரமமாகத்தான் இருக்கும்). சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாய்வு பிடிப்பினால் ஏற்பட்ட வலியானது உடனடியாக சரியாகும். 3. கை வைத்தியம் தயாராகும் வரை யாரையாவது வலி இருக்கும் இடத்தில சிறிது பலமாக குத்த சொல்லவும்(நெஞ்சில் வாய்வு பிடிப்பு இருந்தால் குத்துவதை தவிர்க்கவும்), அப்படி குத்துவதால் வலியிலிருந்து சிறிது நிவாரணம் கிடைக்கும். சில நேரங்களில் வலி குறைந்து நின்றுவிடும். 4. ஒருவேளை இதையெல்லாம் பின்பற்றியும் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகவும்.