1. பீட்ரூட்: சிறிதளவு பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும். காலையில் உணவுக்கு முன் மட்டும் சாப்பிட வேண்டும். 2. வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் மேலும் சிறுநீரில் கல் இருந்தாலும் அதனை குணமாகும். சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலத் தை அகற்றும் தன்மையும் இதற்கு உண்டு. 3. வெங்காயம்: 500 மில்லி லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் 6 கிராம் வெங்காயத்தை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரானது பாதியளவு கொதித்து முடித்தபின் முற்றிலுமாக ஆறிய பிறகு குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் அவதிப்பட்டு கொண்டிருப்பவர் முற்றிலுமாக குணமடைவார். 4. பசலைக்கீரை: இளநீருடன் பசலைக் கீரையின் சாற்றையும் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை அளவு குடித்து வந்தால் உடலில் சிறுநீரானது அதிகரிக்கும். 5. தக்காளி: தொடர்ந்து தக்காளி சாப்பிட்டு கொண்டிருப்பதன் மூலமாக சிறுநீரில் உள்ள அமிலங்களின் அளவை கட்டுக்குள் வைக்கும். எனவே சுற்றுக்கான வாய்ப்பு மிகவும் குறைவு. தினமும் காலையில் ஒரு தக்காளி சாப்பிட்டு வர சிறுநீரி பாதையில் கல் தோன்றுவதை தடுக்கலாம்.