உங்கள் ஆதார் தனித்துவமான Password கொண்டு பாதுகாக்கப்பட்டது. ஒவ்வொரு தனி நபருக்கும் வேறு வேறு பாஸ்வேர்ட் உள்ளது , எனவே ஒருவரின் பாஸ்வேர்ட் மற்றொருவரின் ஆதார் அட்டைக்கு பயன்படாது.
1. உங்களின் பாஸ்வேர்ட் 8 இலக்கங்கள் கொண்டதாகும்.
2.முதல் நான்கு இலக்கங்களுக்கு உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்துக்களை எடுத்துக்கொள்ளவும் , உதாரணமாக உங்கள் பெயர் sharvesh என்றால் நீங்கள் எடுத்துக்கொள்ளவேண்டிய எழுத்துக்கள் SHAR (பாஸ்வேர்ட் போடும் பொழுது கண்டிப்பாக capital letter இல் உள்ளிடவும்) . ஆதாரில் உள்ள பெயராக கண்டிப்பாக இருக்க வேண்டும்.
3.அடுத்த நான்கு இலக்கங்களுக்கு உங்கள் பிறந்த வருடத்தை முழுமையாக எடுத்துக்கொள்ளவும் , உதாரணமாக 2020.
4.உங்கள் ஆதாரின் ரகசிய எழுத்தானது காண்பதற்கு இப்படி இருக்கும் "SHAR2020"
குறிப்பு : அரசாங்கம் எப்போது வேண்டுமானாலும் இந்த முறையை மாற்றி அமைக்க வாய்ப்பு உள்ளது , அப்படி இருப்பின் நமது தளத்தை படித்து தெரிந்துகொண்டு பயன்பெறவும்.
ஆன்லைனில் ஆதார் கார்டு பதிவிறக்கம் செய்ய அரசாங்கம் சுலபமான வழிமுறைகளை வழங்கியுள்ளது , பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி உங்கள் ஆதாரை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
1. முதலில் நீங்கள் அரசின் அதிகாரபூர்வ இணையதளமான https://uidai.gov.in/ என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
2.அதில் Get Aadhaar என்ற பகுதிக்கு கீழே Download Aadhaar என்ற இணைப்பு இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
3.பின்பு , உங்கள் 12 இலக்க ஆதார் நம்பர் உள்ளிடவும்.
4. அதை தொடர்ந்து Captcha Verification பகுதியில் புகைப்படத்தில் உள்ள எண் மற்றும் எழுத்தை நீங்கள் பிழை இல்லாமல் உள்ளிடவும்.
5. கடைசியாக Send OTP பொத்தானை அழுத்தவும் , பின்பு உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அரசு தரப்பிலிருந்து அனுப்பி வைக்கப்படும்.
6.அந்த OTP யை இணையத்தில் பதிவிட்டு , survey பகுதியில் முதலில் YES அடுத்து 6-10 days கிளிக் செய்து விட்டு , Verify and Download பொத்தானை அழுத்தினால் , உங்கள் ஆதார் கார்டு டவுன்லோட் ஆகிவிடும்.
குறிப்பு : உங்கள் ஆதார் தனித்துவமான Password கொண்டு பாதுகாக்கப்பட்டது , password பற்றிய தகவலுக்கு கீழே இருக்கும் அடுத்த பதிவினை படிக்கவும்.