ஆன்லைனில் ஆதார் கார்டு பதிவிறக்கம் செய்ய அரசாங்கம் சுலபமான வழிமுறைகளை வழங்கியுள்ளது , பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி உங்கள் ஆதாரை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 1. முதலில் நீங்கள் அரசின் அதிகாரபூர்வ இணையதளமான https://uidai.gov.in/ என்ற தளத்திற்கு செல்ல வேண்டும். 2.அதில் Get Aadhaar என்ற பகுதிக்கு கீழே Download Aadhaar என்ற இணைப்பு இருக்கும் அதை கிளிக் செய்யவும். 3.பின்பு , உங்கள் 12 இலக்க ஆதார் நம்பர் உள்ளிடவும். 4. அதை தொடர்ந்து Captcha Verification பகுதியில் புகைப்படத்தில் உள்ள எண் மற்றும் எழுத்தை நீங்கள் பிழை இல்லாமல் உள்ளிடவும். 5. கடைசியாக Send OTP பொத்தானை அழுத்தவும் , பின்பு உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அரசு தரப்பிலிருந்து அனுப்பி வைக்கப்படும். 6.அந்த OTP யை இணையத்தில் பதிவிட்டு , survey பகுதியில் முதலில் YES அடுத்து 6-10 days கிளிக் செய்து விட்டு , Verify and Download பொத்தானை அழுத்தினால் , உங்கள் ஆதார் கார்டு டவுன்லோட் ஆகிவிடும். குறிப்பு : உங்கள் ஆதார் தனித்துவமான Password கொண்டு பாதுகாக்கப்பட்டது , password பற்றிய தகவலுக்கு கீழே இருக்கும் அடுத்த பதிவினை படிக்கவும்.