நீங்கள் விறைப்புத்தன்மையை அடையவோ, விறைப்புத்தன்மையை பராமரிக்கவோ அல்லது சீரான அடிப்படையில் விந்து வெளியேறவோ முடியாவிட்டால் உங்களுக்கு ஆண்மைக் குறைவு இருப்பதற்கான வாய்ப்பு கண்டிப்பாக உள்ளது . உணர்ச்சி, மனநிலை மற்றும் உடல் ரீதியான கோளாறுகள் உங்களின் ஆண்மைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றை சீராக வைத்துக்கொள்வதனால் ஆண்மை குறைவினை சரி செய்ய முடியும்.
ஆண்மைக் குறைவு இருந்தால் வாழ்க்கையில் நீங்கள் பெரும் சவால்களை சந்திக்க நேரிடும் குறிப்பாக கல்யாணம் ஆனவர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை வாழ்க்கையில் உண்டாக்கும், இதனால் மனச்சோர்வு, மன அழுத்தம் மற்றும் குறைந்த சுயமரியாதையை ஏற்படுத்தும். நீங்கள் ஏன் இந்த நிலையை அனுபவிக்கிறீர்கள் என்பதற்கான சாத்தியமான காரணங்களைப் புரிந்துகொள்வது உங்கள் பிரச்னையை அடையாளம் காணவும், சரி செய்யவும் உதவும்.
நீங்கள் விறைப்புத்தன்மை மற்றும் ஆண்மை குறைவினால் அவதிப்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வது நன்று. சிலருக்கு மருந்து மற்றும் சிகிச்சை எதுவும் இல்லாமலேயே மருத்துவரை பார்ப்பதால் உங்கள் பிரச்சனை விரைவில் குணமடையும். ஒரு சிலருக்கு மருந்துகளும் , சிகிச்சையும் தேவைபடும்.
<h2 class="sub_heading backlink">விறைப்புத்தன்மைக்கான உடல் ரீதியான காரணங்கள்:</h2>
<p class="patthi">பல சந்தர்ப்பங்களில் ஆண்மை குறைவு உடல் ரீதியான ஏதோ ஒரு பிரச்னையாலும் ஏற்படுகிறது. பொதுவான காரணங்கள் பின்வருமாறு,
1. உடல் பருமன்
2. நீரிழிவு நோய்
3. அதிக கொழுப்புச்ச்த்து
4. ஆண்குறியின் உள்ளே வடு திசுக்களின் வளர்ச்சி
5. நீங்கள் ஏற்கனவே எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துகள்
6. தூக்கக் கோளாறுகள்
7. இடுப்பு பகுதி அல்லது முதுகெலும்பை பாதிக்கும் அறுவை சிகிச்சைகள்
8. புகையிலை பயன்பாடு
9. அடைபட்ட இரத்த நாளங்கள்
10.குடிப்பழக்கம்
11.இருதய நோய்
12.அதிகரித்த இரத்த அழுத்தம், அதிக இன்சுலின் அளவு, இடுப்பைச் சுற்றியுள்ள உடல் கொழுப்பு
13.உயர் இரத்த அழுத்தம்</p>
<h2 class="sub_heading backlink">விறைப்புத்தன்மைக்கான மனநிலை ரீதியான காரணங்கள்:</h2>
<p class="patthi">உணர்ச்சி ஆரமிப்பதில் தொடங்கி , விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும் தொடர்ச்சியான உடல் நிகழ்வுகளைத் தூண்டுவதில் மூளை முக்கிய பங்கு வகிக்கிறது.சில மனா ரீதியான காரணங்களால் மூளை செயல்பாடுகள் செயல்படாமல் உணர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்கள் சுரப்பதில்லை . இதனால் விறைப்பு தன்மை அடைவதில் சிரமம் உணர்கிறீர்கள். இதற்கான பொதுவான காரணங்கள்,
1.மனச்சோர்வு
2.பதற்றம்
3.மன அழுத்தம்
4.பிற கவலைகள்
இவற்றை சரி செய்தல் மட்டுமே உங்களுக்கு உடல் ஒத்துழைக்கும் எனவே மனதை முதலில் சரியாக வைத்துக்கொள்வது முக்கியம்.</p>
பொதுவாக ஆண்மை குறைவிற்கு பெரும்பாலும் யாரும் மருத்துவமனைக்கு செல்வதில்லை . அப்படிப்பட்டவர்களுக்கான பதிவு இது. பின்வரும் மருந்துகள் அனைத்தும் உங்கள் பகுதியிலுள்ள நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கி உண்டு பயன்பெறுங்கள்.
1. அஸ்வகந்தா பவுடர் - ஆண்குறி விறைப்பு தன்மைக்கு உதவுகிறது.
2. ஓரிதல்தாமரை - ஆண்மையை அதிகரிக்கும் தன்மையுடையது.
3. பூனைகாலி - விந்து அல்லது உயிரணுக்களை அதிகரிப்பதில் மிக்க வல்லது.
4. ஜாதிக்காய் - ஆண்குறியின் விறைப்பு தன்மையை அதிகரிக்கும் திறனுடையது.
5. நீர்முள்ளி விதை - விந்துவை கெட்டி பட வைக்கும் ஆற்றலுடையது.
6. தண்ணீர்விட்டான் கிழங்கு - ஆண்மையை அதிகரிக்க செய்யும்.
ஆண்குறி விரைப்புதன்மைக்கு மருந்து
1. 10 அல்லது 15 நீர்முள்ளி வித்துக்களை எடுத்துக்கொண்டு இரவு தூங்குவதற்கு முன்பாக ஒரு செவ்வாழை பழத்தில் ஊசி இறக்குவதுபோல் பதித்து , மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவதன் மூலமாக ஆண்குறி விறைப்புத்தன்மை சார்ந்த அணைத்து பிரச்சனைகளும் குணமடையும். கண்டிப்பாக இதனை தொடர்ந்து 30 நாட்களாவது சாப்பிட்டு வர வேண்டும். நீர்முள்ளி வித்து அணைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அப்புறம் என்ன நீங்க கொடி புடிசிட்டே திரியலாம்.
2. உடனடியாக விறைப்பு தன்மை தெரிய இந்த சூரணத்தை சாப்பிடுங்கள்.
தேவையான பொருட்கள்:
1. ஜாதிக்காய்
2. அஸ்வகந்தா பவுடர்
3. ஓரிதல்தாமரை
4. பூனைகாலி
5. நீர்முள்ளி விதை
6. தண்ணீர்விட்டான் கிழங்கு
இவைகள் அனைத்தும் அருகிலுள்ள நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். மேலுள்ள அனைத்தையும் பவுடர் செய்து வைத்துக்கொள்ளவும். பின்பு தேனில் கட்டியாக பதம் வரும் வரை குழைத்து , தினமும் காலை மற்றும் மாலை கோலிக்குண்டு அளவிற்கு சாப்பிட்டு வருவதன் மூலமாக உடனடியாக விறைப்பு தன்மையில் மாற்றம் தெரியும்.
விந்து உற்பத்தியை அதிகரிக்க செய்ய வேண்டியவை:
தேவையான பொருட்கள்:
1. கசகசா - 10 கிராம்
2. பால்
3. நீர்முள்ளி - 30 கிராம்
4. பாதாம்பருப்பு - 10 கிராம்
இவற்றை தேவையான அளவு எடுத்துக்கொண்டு 1 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பின்பு அவற்றை எடுத்து பாலுடன் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
உடலில் உள்ள அமிலங்களை சீராக வைப்பதன் மூலமாக தூக்கத்தில் விந்து வெளிப்படுவதை நாம் நிறுத்த முடியும். இந்த லேகியத்தை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் தூக்கத்தில் விந்து வெளிப்படுவதை அறவே தவிர்க்க முடியும்.
1. ஏலக்காய் 50 கிராம்
2. அமுக்கரா 50 கிராம்
3. பாதாம் பிசின் 50 கிராம்
4. உளுந்து 100 கிராம்
5. எள் 100 கிராம்
6. கசகசா 50 கிராம்
7. சுக்கு மிளகு திப்பிலி தலா 50 கிராம்
8. நெல்லிக்கணி 50 கிராம்
9. பூசணி விதை 50 கிராம்
10. துவரம் பருப்பு நூறு கிராம்
11. பாதாம் பிஸ்தா மற்றும் முந்திரி தலா 50 கிராம்
இவற்றையெல்லாம் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு பின்பு தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பேரிச்சம் பழம் 100 கிராம் மற்றும் கருப்பு திராட்சை 100 கிராம் எடுத்துக் கொண்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 2 கிலோ தேனை நன்றாக கொதிக்கவைத்து நுரை அடங்கிய பின் அரைத்து வைத்திருக்கும் திராட்சை மற்றும் பேரீச்சம் பழத்தை கலந்து நாம் தூள் செய்து வைத்துள்ளவற்றையும் அதில் கொட்டி வைக்க வேண்டும். இதனை தினமும் இரவு தூங்குவதற்கு முன்பாக 5 கிராம் அளவிற்கு சாப்பிட்டுவர தூக்கத்தில் விந்து வெளிப்படும் பிரச்சனையானது அறவே நீங்கும் மேலும் விந்து கெட்டிப்படும் ஆண்மையும் பெருகும்.
குறிப்பு: மேலே குறிப்பிட்ட பொருட்களை உங்களின் தேவைக்கு ஏற்ப குறைத்துக் கொண்டு இதனை உங்களால் தயாரிக்க முடியும்.
தூக்கத்தில் விந்து வெளியானால் என்ன செய்ய வேண்டும்
தூக்கத்தில் விந்து வெளிப்படுதல் என்பது இயற்கையான நிகழ்வு பயம் கொள்ள வேண்டாம். இப்பொழுதும் தூக்கத்தில் விந்து வெளியானவுடன் தூக்கம் கலைந்து எழுந்து விடுவீர்கள். எழுந்தவுடன் சென்று சிறுநீர் கழித்துவிட்டு பின்பு உங்கள் ஆணுறுப்பை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பின்பு சுத்தமான துணி ஒன்றை எடுத்துக் கொண்டு நன்கு உலர்வாக துடைத்துக் கொள்ளவேண்டும். கழுவாமல் உண்பதன் மூலம் இன்ஃபெக்ஷன் வர நேரிடும். அல்லது கழுவிவிட்டு ஈரமாக விடுவதன் மூலமாகவும் இன்ஸ்பெக்சன் வரலாம். எனது கழுவிய பின்பு உலர்வாக வைத்துக்கொள்வது என்பது மிக முக்கியமான ஒன்று.
இயற்கையாக சில விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் தூக்கத்தில் விந்து வெளியேறுவதை தவிர்க்கலாம்...
(உணவு மூலம் சரி செய்ய அடுத்த பதிவினை படிக்கவும்)
1. காலை 15 நிமிடம் உடற்பயிற்சி செய்வது.
2. தூங்குவதற்கு முன்பாக குறைந்தது 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பாக செக்ஸ் படம் பார்ப்பது கதைகளைப் படிப்பது காம எண்ணங்களில் வைப்பது போன்றவற்றை தவிர்க்கவும்.
3. நல்ல காற்றோட்டமான அறையில் தூங்க வேண்டும்.
4. இரவு நேரங்களில் எண்ணெய் கொழுப்புள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது.
5. தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக உணவினை சாப்பிட்டு விடுங்கள். கழுத்துவரை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
6. உடல் உழைப்பு அதிகம் இல்லாத வேலை செய்பவராக இருப்பின் மாலை நேரங்களில் குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்தல் நன்று.
7. தொடர்ந்து வெளியேறும் பட்சத்தில் சேராத உணவு வகைகளை குறித்து வைத்துக்கொண்டு அவற்றை சாப்பிடாமல் தவிர்ப்பதன் மூலம் இரவு நேரங்களில் தினமும் வெளிப்படுவதை தவிர்க்கலாம்.
8. மாதம் ஒரு முறையாவது எண்ணை குளியல் போடுங்கள். இது உடல் சூட்டைத் தணித்து நம்மை சீராக வைக்கும்.
தூக்கத்தில் கனவு ஏற்படுவது மூலமாக விந்து வெளிப்படுவது என்பது மிகவும் சாதாரணமான ஒரு விஷயமாகும். பல ஆண்கள் இதை ஒரு நோயாகவும் தங்களுக்கு உள்ள குறைபாடவும் கருதி வருகின்றனர். இந்த விஷத்தை வைத்து சிலர் பணம் பார்த்தும் வருகின்றனர். அனால் உண்மையில் ஆணின் ஆணுறுப்பு மற்றும் விதைப்பை சிறப்பாக செயல்படுவதின் அறிகுறிகள் தான் இவை . அளவுக்கு அதிகமாக உடலானது வெப்பமடையும் பொழுது வியர்வையை வெளியேற்றி உடலை குளிர்ச்சியடைய செய்யும்.
அதே போல் தான் விந்து வெளிப்படும் நிகழ்வும். நாம் உடல் உறவு செய்யாமல் இருக்கும் பொழுது, உணர்ச்சி கட்டுக்குள் இருக்க விந்துவை வெளியேற்றி நமது உடலை ஆரோக்கியமாக இருக்க வழி வகை செய்கிறது. பல ஆண்களுக்கு இதை பற்றிய சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் சிலர் அந்த பயத்தை பயன்படுத்தி பணம் சம்பாதித்து வருகின்றனர் . ஆகையால் தூக்கத்தில் விந்து வெளிவருவது இயற்கையான மற்றும் ஆரோக்கியமான நிகழ்வு என்பதை நாம் அறிய வேண்டும். தூக்கத்தில் வெளியான அடுத்த 3 நாட்களில் விதைப்பை விந்துவை முழுமையாக சுரக்க செய்யும். இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து பயன்பெற செய்யுங்கள்.
ஓரிதழ் தாமரையானது ஆணைகளுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷமாகும். இந்த செடியின் இலை முதல் வேர் வரை ஆண்களுக்கு எண்ணிலடங்கா பலன்களை அளிக்க கூடியது. நம்ம பசங்க சிறு வயதில் கட்டுக்கடங்காத உணர்ச்சி வெளிப்பாடுகளால் செய்யும் சில செயல்களால் ஆண்மை பாதிப்புக்குள்ளாகும். இதனால் சிலர் திருமண வயதை எட்டும்போது அவர்களால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியாத ஒரு நிலை ஏற்படும். இப்படிப்பட்டவர்களுக்கு ஓரிதழ் தாமரையானது நல்ல பலனை தரும்.
1. ஓரிதழ்தாமரையின் இலைகளை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு, பால் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதேபோல், ஓரிதழ் தாமரையின் இல்லை மட்டுமல்லாது வேர் முதல் பூ வரை உண்டு வரலாம். இதனால் உங்கள் ஆண்மையில் ஏற்படும் மாற்றத்தினை நீஎங்கள் விரைவாக அறியலாம்.
2. ஓரிதழ்தாமரையின் வேர், இலை, பூ, தண்டு, காய் என அனைத்தையும் நிழலில் உலர்த்திப் பொடி செய்து இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க செல்வதற்கு முன் பாலில் கலந்து சாப்பிட வேண்டும். இதைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடனடி பலன் கிடைக்கும்.
3. ஆண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளை ஒழுக்கு, அடி வயிறு வலி போன்றவை சரியாக வேர் முதல் பூ வரை அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து கொண்டு அதனை பசும்பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தாலே போதும்.
4. ஓரிதழ் தாமரையின் இலை , வேர் , பூ ஆகிய அனைத்தையும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு 50 மில்லி ஆட்டுப்பால் குடித்து வருவதன் மூலம் இழந்த ஆண்மை சக்தி திரும்பக் கிடைக்கும். இதனை மொத்தம் 21 நாட்கள் குறைந்தது தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
பிரச்சனை உள்ளவர்கள் தாமதிக்காமல் உடனே அருகிலுள்ள நாட்டு மருந்து கடையை அணுகி. இதனை சாப்பிட்டு உடம்பை தேற்றவும் இல்லைனா பொண்டாட்டி முன்னாடி புஸ்ஸுன்னு போய்டும்.