தூக்கத்தில் விந்து வெளியானால் என்ன செய்ய வேண்டும் தூக்கத்தில் விந்து வெளிப்படுதல் என்பது இயற்கையான நிகழ்வு பயம் கொள்ள வேண்டாம். இப்பொழுதும் தூக்கத்தில் விந்து வெளியானவுடன் தூக்கம் கலைந்து எழுந்து விடுவீர்கள். எழுந்தவுடன் சென்று சிறுநீர் கழித்துவிட்டு பின்பு உங்கள் ஆணுறுப்பை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பின்பு சுத்தமான துணி ஒன்றை எடுத்துக் கொண்டு நன்கு உலர்வாக துடைத்துக் கொள்ளவேண்டும். கழுவாமல் உண்பதன் மூலம் இன்ஃபெக்ஷன் வர நேரிடும். அல்லது கழுவிவிட்டு ஈரமாக விடுவதன் மூலமாகவும் இன்ஸ்பெக்சன் வரலாம். எனது கழுவிய பின்பு உலர்வாக வைத்துக்கொள்வது என்பது மிக முக்கியமான ஒன்று. இயற்கையாக சில விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் தூக்கத்தில் விந்து வெளியேறுவதை தவிர்க்கலாம்... (உணவு மூலம் சரி செய்ய அடுத்த பதிவினை படிக்கவும்) 1. காலை 15 நிமிடம் உடற்பயிற்சி செய்வது. 2. தூங்குவதற்கு முன்பாக குறைந்தது 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பாக செக்ஸ் படம் பார்ப்பது கதைகளைப் படிப்பது காம எண்ணங்களில் வைப்பது போன்றவற்றை தவிர்க்கவும். 3. நல்ல காற்றோட்டமான அறையில் தூங்க வேண்டும். 4. இரவு நேரங்களில் எண்ணெய் கொழுப்புள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. 5. தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக உணவினை சாப்பிட்டு விடுங்கள். கழுத்துவரை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. 6. உடல் உழைப்பு அதிகம் இல்லாத வேலை செய்பவராக இருப்பின் மாலை நேரங்களில் குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்தல் நன்று. 7. தொடர்ந்து வெளியேறும் பட்சத்தில் சேராத உணவு வகைகளை குறித்து வைத்துக்கொண்டு அவற்றை சாப்பிடாமல் தவிர்ப்பதன் மூலம் இரவு நேரங்களில் தினமும் வெளிப்படுவதை தவிர்க்கலாம். 8. மாதம் ஒரு முறையாவது எண்ணை குளியல் போடுங்கள். இது உடல் சூட்டைத் தணித்து நம்மை சீராக வைக்கும்.