தூக்கத்தில் கனவு ஏற்படுவது மூலமாக விந்து வெளிப்படுவது என்பது மிகவும் சாதாரணமான ஒரு விஷயமாகும். பல ஆண்கள் இதை ஒரு நோயாகவும் தங்களுக்கு உள்ள குறைபாடவும் கருதி வருகின்றனர். இந்த விஷத்தை வைத்து சிலர் பணம் பார்த்தும் வருகின்றனர். அனால் உண்மையில் ஆணின் ஆணுறுப்பு மற்றும் விதைப்பை சிறப்பாக செயல்படுவதின் அறிகுறிகள் தான் இவை . அளவுக்கு அதிகமாக உடலானது வெப்பமடையும் பொழுது வியர்வையை வெளியேற்றி உடலை குளிர்ச்சியடைய செய்யும். அதே போல் தான் விந்து வெளிப்படும் நிகழ்வும். நாம் உடல் உறவு செய்யாமல் இருக்கும் பொழுது, உணர்ச்சி கட்டுக்குள் இருக்க விந்துவை வெளியேற்றி நமது உடலை ஆரோக்கியமாக இருக்க வழி வகை செய்கிறது. பல ஆண்களுக்கு இதை பற்றிய சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் சிலர் அந்த பயத்தை பயன்படுத்தி பணம் சம்பாதித்து வருகின்றனர் . ஆகையால் தூக்கத்தில் விந்து வெளிவருவது இயற்கையான மற்றும் ஆரோக்கியமான நிகழ்வு என்பதை நாம் அறிய வேண்டும். தூக்கத்தில் வெளியான அடுத்த 3 நாட்களில் விதைப்பை விந்துவை முழுமையாக சுரக்க செய்யும். இந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து பயன்பெற செய்யுங்கள்.