உடலில் உள்ள அமிலங்களை சீராக வைப்பதன் மூலமாக தூக்கத்தில் விந்து வெளிப்படுவதை நாம் நிறுத்த முடியும். இந்த லேகியத்தை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் தூக்கத்தில் விந்து வெளிப்படுவதை அறவே தவிர்க்க முடியும். 1. ஏலக்காய் 50 கிராம் 2. அமுக்கரா 50 கிராம் 3. பாதாம் பிசின் 50 கிராம் 4. உளுந்து 100 கிராம் 5. எள் 100 கிராம் 6. கசகசா 50 கிராம் 7. சுக்கு மிளகு திப்பிலி தலா 50 கிராம் 8. நெல்லிக்கணி 50 கிராம் 9. பூசணி விதை 50 கிராம் 10. துவரம் பருப்பு நூறு கிராம் 11. பாதாம் பிஸ்தா மற்றும் முந்திரி தலா 50 கிராம் இவற்றையெல்லாம் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு பின்பு தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பேரிச்சம் பழம் 100 கிராம் மற்றும் கருப்பு திராட்சை 100 கிராம் எடுத்துக் கொண்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 2 கிலோ தேனை நன்றாக கொதிக்கவைத்து நுரை அடங்கிய பின் அரைத்து வைத்திருக்கும் திராட்சை மற்றும் பேரீச்சம் பழத்தை கலந்து நாம் தூள் செய்து வைத்துள்ளவற்றையும் அதில் கொட்டி வைக்க வேண்டும். இதனை தினமும் இரவு தூங்குவதற்கு முன்பாக 5 கிராம் அளவிற்கு சாப்பிட்டுவர தூக்கத்தில் விந்து வெளிப்படும் பிரச்சனையானது அறவே நீங்கும் மேலும் விந்து கெட்டிப்படும் ஆண்மையும் பெருகும். குறிப்பு: மேலே குறிப்பிட்ட பொருட்களை உங்களின் தேவைக்கு ஏற்ப குறைத்துக் கொண்டு இதனை உங்களால் தயாரிக்க முடியும்.