நீங்கள் விறைப்புத்தன்மையை அடையவோ, விறைப்புத்தன்மையை பராமரிக்கவோ அல்லது சீரான அடிப்படையில் விந்து வெளியேறவோ முடியாவிட்டால் உங்களுக்கு ஆண்மைக் குறைவு இருப்பதற்கான வாய்ப்பு கண்டிப்பாக உள்ளது . உணர்ச்சி, மனநிலை மற்றும் உடல் ரீதியான கோளாறுகள் உங்களின் ஆண்மைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றை சீராக வைத்துக்கொள்வதனால் ஆண்மை குறைவினை சரி செய்ய முடியும். ஆண்மைக் குறைவு இருந்தால் வாழ்க்கையில் நீங்கள் பெரும் சவால்களை சந்திக்க நேரிடும் குறிப்பாக கல்யாணம் ஆனவர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை வாழ்க்கையில் உண்டாக்கும், இதனால் மனச்சோர்வு, மன அழுத்தம் மற்றும் குறைந்த சுயமரியாதையை ஏற்படுத்தும். நீங்கள் ஏன் இந்த நிலையை அனுபவிக்கிறீர்கள் என்பதற்கான சாத்தியமான காரணங்களைப் புரிந்துகொள்வது உங்கள் பிரச்னையை அடையாளம் காணவும், சரி செய்யவும் உதவும். நீங்கள் விறைப்புத்தன்மை மற்றும் ஆண்மை குறைவினால் அவதிப்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வது நன்று. சிலருக்கு மருந்து மற்றும் சிகிச்சை எதுவும் இல்லாமலேயே மருத்துவரை பார்ப்பதால் உங்கள் பிரச்சனை விரைவில் குணமடையும். ஒரு சிலருக்கு மருந்துகளும் , சிகிச்சையும் தேவைபடும்.
பல சந்தர்ப்பங்களில் ஆண்மை குறைவு உடல் ரீதியான ஏதோ ஒரு பிரச்னையாலும் ஏற்படுகிறது. பொதுவான காரணங்கள் பின்வருமாறு, 1. உடல் பருமன் 2. நீரிழிவு நோய் 3. அதிக கொழுப்புச்ச்த்து 4. ஆண்குறியின் உள்ளே வடு திசுக்களின் வளர்ச்சி 5. நீங்கள் ஏற்கனவே எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துகள் 6. தூக்கக் கோளாறுகள் 7. இடுப்பு பகுதி அல்லது முதுகெலும்பை பாதிக்கும் அறுவை சிகிச்சைகள் 8. புகையிலை பயன்பாடு 9. அடைபட்ட இரத்த நாளங்கள் 10.குடிப்பழக்கம் 11.இருதய நோய் 12.அதிகரித்த இரத்த அழுத்தம், அதிக இன்சுலின் அளவு, இடுப்பைச் சுற்றியுள்ள உடல் கொழுப்பு 13.உயர் இரத்த அழுத்தம்
உணர்ச்சி ஆரமிப்பதில் தொடங்கி , விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும் தொடர்ச்சியான உடல் நிகழ்வுகளைத் தூண்டுவதில் மூளை முக்கிய பங்கு வகிக்கிறது.சில மனா ரீதியான காரணங்களால் மூளை செயல்பாடுகள் செயல்படாமல் உணர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்கள் சுரப்பதில்லை . இதனால் விறைப்பு தன்மை அடைவதில் சிரமம் உணர்கிறீர்கள். இதற்கான பொதுவான காரணங்கள், 1.மனச்சோர்வு 2.பதற்றம் 3.மன அழுத்தம் 4.பிற கவலைகள் இவற்றை சரி செய்தல் மட்டுமே உங்களுக்கு உடல் ஒத்துழைக்கும் எனவே மனதை முதலில் சரியாக வைத்துக்கொள்வது முக்கியம்.