1. உணவு, பொருளாதாரம் மற்றும் சூழல் காரணமாக சில இளைஞர்கள் இளம்வயதிலேயே வயதானவர்களை போல தோற்றமளிப்பார்கள். அவர்கள் இந்த ஓரிதழ் தாமரை, கீழாநெல்லி உருண்டைகளைச் சாப்பிட்டு வந்தால் முதுமை தோற்றம் மறைந்து நல்ல முன்னேற்றம் தெரியும். 2. ஆஸ்துமா நோயாளிகளுக்கும் ஓரிதழ்தாமரையின் கஷாயம் நல்லதொரு மருந்தாகும். உடல் எடையை குறைக்க சிகிச்சை எடுப்பவர்கள் இந்த கஷாயத்தை அருந்தி வருவதன் மூலமாக விரைவாக குறைந்த கட்டுடலை பெறலாம். 3. ஓரிதழ்தாமரையுடன் சம அளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து சிறு சிறு மாத்திரைகளாக்கி தினமும் அதிகாலை சாப்பிட்டு வந்தால் உடலிற்கு நல்லது. 4. ஆண்மை குறைபாட்டால் அவதிப்படும் ஆண்களுக்கு இந்த ஓரிதழ்தாமரை ஒரு புதையல் என்றே தான் குறிப்பிட வேண்டும் . ஆண்மை சக்தி அவ்வளவு சிறந்தது இந்த ஓரிதழ்தாமரை.