plant-facts | | Tamil Best Beauty tips site | Laddu muttai ஓரிதழ்தாமரையின் மருத்துவ பயன்கள் orithal-thaamarai

ஓரிதழ்தாமரையின் மருத்துவ பயன்கள்

orithal-thaamarai

1. உணவு, பொருளாதாரம் மற்றும் சூழல் காரணமாக சில இளைஞர்கள் இளம்வயதிலேயே வயதானவர்களை போல தோற்றமளிப்பார்கள். அவர்கள் இந்த ஓரிதழ் தாமரை, கீழாநெல்லி உருண்டைகளைச் சாப்பிட்டு வந்தால் முதுமை தோற்றம் மறைந்து நல்ல முன்னேற்றம் தெரியும். 2. ஆஸ்துமா நோயாளிகளுக்கும் ஓரிதழ்தாமரையின் கஷாயம் நல்லதொரு மருந்தாகும். உடல் எடையை குறைக்க சிகிச்சை எடுப்பவர்கள் இந்த கஷாயத்தை அருந்தி வருவதன் மூலமாக விரைவாக குறைந்த கட்டுடலை பெறலாம். 3. ஓரிதழ்தாமரையுடன் சம அளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து சிறு சிறு மாத்திரைகளாக்கி தினமும் அதிகாலை சாப்பிட்டு வந்தால் உடலிற்கு நல்லது. 4. ஆண்மை குறைபாட்டால் அவதிப்படும் ஆண்களுக்கு இந்த ஓரிதழ்தாமரை ஒரு புதையல் என்றே தான் குறிப்பிட வேண்டும் . ஆண்மை சக்தி அவ்வளவு சிறந்தது இந்த ஓரிதழ்தாமரை.




vallarai-keerai-payangal

Tag : vegetable |

வல்லாரை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்: 1. மேனிக்கு அழகு தரும் 2. ஞாபக சக்தியை அதிகரிக்கும் 3. குரலை அழகாக்கும் 4. மலமிளக்கியாக செயல்படும் 5. சிறுநீரைப் பெருக்கும் 6. தலைவலி மற்றும் காய்ச்சலுக்கு உகந்தது 7. மூளை மற்றும் இதயத்திற்கு வலிமை தரும் 8. காச நோய் மற்றும் சிறுநீரக கோளாறு சிகிச்சையிலும் வல்லாரையானது பயன்படும். 9. வல்லாரைக் கீரையைக் கொண்டு பற்களை சுத்தம் செய்து வந்தால் பற்கள் வெண்மை அடையும் பளிச்சென மாறும். 10. காய்ச்சல் விலக: வல்லாரை இலைகளுடன் துளசி இலை மிளகு ஆகியவற்றை சரியான அளவு எடுத்து அதனை அரைத்து மாத்திரைகளாக வைத்துக் கொள்ளவும் தினமும் காலை மற்றும் மாலை இந்த மாத்திரைகளை உட்கொண்டு வந்தால் காய்ச்சல் விலகிவிடும். 11. முடி வளர்ச்சிக்கு: வல்லாரை இலையை நன்றாக அரைத்து வைத்துக்கொண்டு தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். 12. தலைவலிக்கு : வல்லாரை இலைகளை உலர்த்தி வைத்துக்கொண்டு பொடி செய்து அதனுடன் கொத்தமல்லி பொடி சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் தலைவலியிலிருந்து பூரணகுணம் பெறலாம். தினமும் மூன்று வேலை சாப்பாட்டிற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக சாப்பிட்டு வந்தால் தலைவலி அண்டாது. 13. ஞாபக சக்தி பெருக: வல்லாரைக் கீரைக்கு இயற்கையாகவே ஞாபக சக்தியை பெருக்கும் திறன் அதிகளவில் இருக்கிறது வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு பொடி செய்து தினமும் ஒரு சிட்டிகை அளவு பாலில் கலந்து பருகி வர நினைவாற்றல் பெருகும். இதனை குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம்.
Laddu Muttai | 11-06-2020
sovsov-maruthuva-payangal

Tag : vegetable |

1. சௌசௌ காயினில் கால்சியம் சத்து மிகவும் அதிகமாக காணப்படுவதால் பல் சார்ந்த அனைத்து நோய்களிலிருந்தும் நம்மை காக்கிறது. 2. மனித உடலிலுள்ள எலும்புகளுக்கு முக்கிய உரமாக சௌசௌ ஆனது கருதப்படுகிறது. 3. சௌசௌ காயை கூட்டு செய்து சாப்பிட்டு வர வாயில் உள்ள புண்கள் அனைத்தும் சரியாகும் மேலும் ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் மூக்கில் ஏற்படும் சுவாச அடைப்புகளைப் போக்கும் சக்தியும் இதற்கு உண்டு. 4. மேலும் வயிற்று வலி மற்றும் வயிற்று எரிச்சலுக்கு முக்கியமான நிவாரணியாக கருதப்படுகிறது கபகட்டுகளை நீக்கும்.
Laddu Muttai | 11-06-2020
milagai-maruthuva-payangal

Tag : vegetable |

மிளகாய் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் மிளகாய் ஆனது அதிகமாக காரத்தன்மை மிக்கது எனவே அதனை சாப்பாட்டில் மிகவும் இதமான வரைதான் பயன்படுத்த வேண்டும் அதிகமாக சாப்பிட்டால் பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். அவை, 1. ஆசனக்கடுப்பு 2. சிறுநீர் போக்கில் எரிச்சல் 3. வயிற்றில் புண் 4. மூலம் சார்ந்த நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மிளகாயை பயன்படுத்தவே கூடாது. மருத்துவ பயன்கள் 1. ஜலதோஷத்தால் அவதிப்படுபவர்களுக்கு மிளகாயானது நல்ல நிவாரணியாக செயல்படும் அஜீரண கோளாறு உள்ளவர்கள் மிளகாய் சாப்பிட்டால் அஜீரணத்தில் இருந்து விடுபடலாம். 2. இரைப்பையை வலுப்படுத்தவும் தன்மையானது மிளகாய்க்கு உண்டு உடலுக்கு இதம் தரும் ஆனால் விதமான அளவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை மறக்கக்கூடாது அளவுக்கு மீறி பயன்படுத்தினால் உடலில் புண்கள் உண்டு செய்யும்.
Laddu Muttai | 11-06-2020
ilaneer-maruthuva-payangal

Tag : vegetable |

பொதுவாக உடல் சூட்டை தணிக்கும் தன்மை இளநீருக்கு உண்டு என்பதை அனைவரும் அறிந்ததே . முற்றிய தேங்காய்கள் மற்றும் முத்தாக தேங்காய்கள் தனித்தனியாக பலன்களை கொண்டுள்ளன. 1. முற்றிய தேங்காயில் உள்ள இளநீருக்கு சிறுநீரை பெருக்கும் ஆற்றலானது அதிக அளவில் உண்டு. இதன் தேங்காய் குடல்புண் மற்றும் தொண்டை புண்ணை சரிசெய்யவதில் பெரும் பங்காற்றுகின்றன. கபத்தையும் வெளிப்படுத்தும். 2. முற்றாத தேங்காயில் உள்ள நீரானது வாந்தி பித்தம் ஆகியவற்றை போக்கும் வெயிலில் ஏற்படும் மயக்கத்தை முற்றிலுமாக சரிசெய்யும். சிறுநீரக கோளாறுகளை சரி செய்யும் ஆற்றலானது இவற்றிற்கு உண்டு. உடலில் ரத்தத்தை சுத்திகரிப்பு செய்வதோடு, பயணத்தின்போது ஏற்படும் குமட்டலை தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு. 3. தேங்காய்ப் பாலில் சிறிது கற்கண்டு அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகிவந்தால் உடலானது உறுதி பெறும். இதனை தொடர்ந்து 45 நாட்களுக்கு பயன்படுத்தி வந்தால் மேனி பொலிவு பெறும். 4. கபம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் காய்ச்சிய தேங்காய் பாலில் பனங்கற்கண்டு மிளகு சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலனைக் கொடுக்கும். 5. பித்தம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் காய்ச்சிய தேங்காய் பாலில் பனங்கற்கண்டு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 6. வாதம் சார்ந்த பிரச்சினை உடையவர்கள் தேங்காய் பாலை காய்ச்சும்போது இஞ்சியை மேல் தோலை சீவி விட்டு நறுக்கி காய்ச்சிய அல்லது காய்ச்சிய தேங்காய் பாலில் சுக்குத்தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Laddu Muttai | 11-06-2020
suraikai-maruthuva-payangal

Tag : vegetable |

1. சுரைக்காயை அன்றாடம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் தாராளமாக வெளியேற்றுவதற்கு பெரிதும் பயன்படும். மேலும் ஒரு சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படும். 2. பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனையை சரிசெய்ய சுரைக்காய் ஆனது பயன்படுகிறது. 3. இருதயம் மற்றும் ஈரல் ஆகியவற்றை பலப்படுத்தும் .வெப்பமான உடல்வாகு கொண்டவர்களுக்கு இரத்தத்தை விருத்தி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. 4. வாதம் மற்றும் பித்தம் உள்ளவர்கள் அளவாக உண்ண வேண்டிய பொருட்களில் சுரக்காயும் ஒன்று. உடல் சூட்டை சமன் செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. 5. சுரைக்காயின் சாற்றை யும் நல்லெண்ணெயையும் சரியான அளவில் எடுத்துக்கொண்டு தைலம் தயாரித்துக் கொள்ளலாம். இந்த தைலத்தை வாரத்திற்கு இரண்டு முறை தேய்த்து குளித்து வந்தால் கண்களில் ஏற்படும் பிரச்சனைகள் அடியோடு அகன்று பார்வை தெளிவு பெறும்.
Laddu Muttai | 11-06-2020
mulaikeerai-maruthuva-payangal

Tag : vegetable |

1. முளைக் கீரையில் வைட்டமின் ஏ ,வைட்டமின் சி , புரதம் மற்றும் தாதுக்கள் அதிகம் காணப்படுகிறது. முளைக்கீரையின் தண்டில் பச்சை மற்றும் சிவப்பு வகைகள் உள்ளன. 2. பச்சை கீரைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் நீர் சுருக்கு மற்றும் நீர் கட்டுக்கு மருந்தாக அமையும். சிவப்பு நிற தண்டுகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பத்தை தணிப்பதோடு பித்தத்தையும் கட்டுப்படுத்தும் .மேலும் முகம் பளபளப்பாக இருக்க அயராது பாடுபடும். 3. முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள புண்களை குணப்படுத்தும் தன்மையுடையது மேலும் இது ஒரு சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது கண் பிரச்சனை அதிகம் உடையவர்கள் முறை கீரைகளை சாப்பிடவேண்டும் எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும்.
Laddu Muttai | 11-06-2020
peerkankaai-maruthuva-payangal

Tag : vegetable |

1. வாதம் ,பித்தம் மற்றும் கபம் ஆகிய சார்ந்த பிரச்சனைகளை அதிகரிக்கும் திறனானது இதற்கு உண்டு .ஆதலால் மூன்று பிரச்சினைகள் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. 2. பீர்க்கங்காய் ஆனது மனித உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். குடலில் உள்ள புழுக்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல் பசி உணர்வைத் தூண்டும் ஆற்றலானது பீர்க்கங்காய்க்கு உண்டு. காசம் இருமல் போன்ற உபாதைகளால் அவதிப்படுபவர்கள் சாப்பிடலாம். 3. பீர்க்கங்காய் கூட்டு கல்லீரல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் ஆற்றலும் இதற்கு உண்டு . மூலநோய் உள்ளவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை அளிக்கும்.
Laddu Muttai | 11-06-2020