பொதுவாக உடல் சூட்டை தணிக்கும் தன்மை இளநீருக்கு உண்டு என்பதை அனைவரும் அறிந்ததே . முற்றிய தேங்காய்கள் மற்றும் முத்தாக தேங்காய்கள் தனித்தனியாக பலன்களை கொண்டுள்ளன. 1. முற்றிய தேங்காயில் உள்ள இளநீருக்கு சிறுநீரை பெருக்கும் ஆற்றலானது அதிக அளவில் உண்டு. இதன் தேங்காய் குடல்புண் மற்றும் தொண்டை புண்ணை சரிசெய்யவதில் பெரும் பங்காற்றுகின்றன. கபத்தையும் வெளிப்படுத்தும். 2. முற்றாத தேங்காயில் உள்ள நீரானது வாந்தி பித்தம் ஆகியவற்றை போக்கும் வெயிலில் ஏற்படும் மயக்கத்தை முற்றிலுமாக சரிசெய்யும். சிறுநீரக கோளாறுகளை சரி செய்யும் ஆற்றலானது இவற்றிற்கு உண்டு. உடலில் ரத்தத்தை சுத்திகரிப்பு செய்வதோடு, பயணத்தின்போது ஏற்படும் குமட்டலை தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு. 3. தேங்காய்ப் பாலில் சிறிது கற்கண்டு அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகிவந்தால் உடலானது உறுதி பெறும். இதனை தொடர்ந்து 45 நாட்களுக்கு பயன்படுத்தி வந்தால் மேனி பொலிவு பெறும். 4. கபம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் காய்ச்சிய தேங்காய் பாலில் பனங்கற்கண்டு மிளகு சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலனைக் கொடுக்கும். 5. பித்தம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் காய்ச்சிய தேங்காய் பாலில் பனங்கற்கண்டு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 6. வாதம் சார்ந்த பிரச்சினை உடையவர்கள் தேங்காய் பாலை காய்ச்சும்போது இஞ்சியை மேல் தோலை சீவி விட்டு நறுக்கி காய்ச்சிய அல்லது காய்ச்சிய தேங்காய் பாலில் சுக்குத்தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.