1. சண்டிக்கீரை: சண்டிக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான ஹீமோகுளோபின் சப்ளையானது சரியாக இருக்கும். 2. பசலைக்கீரை: பசலைக்கீரையில் உள்ள சத்துக்களை நமது உடலானது கிரகித்துக் கொண்டு உடலிற்கு தேவையான ஹீமோகுளோபினை உருவாக்கும். சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் ஆனது பசலைக் கீரைக்கு உண்டு. இவ்வாறு செயல்படுவதன் மூலமாக ரத்தசோகையை அறவே தடுக்கும். 3. சோயா பீன்ஸ்: சோயாபீன்ஸ் ஆனது எளிதில் ஜீரணம் அடையக்கூடிய ஒன்று எனவே ரத்த சோகை சிகிச்சை அளிப்பவர்கள் நோயாளிகளுக்கு இதனை பரிந்துரைக்கின்றனர். 4. வெங்காயம்: தினமும் 100 கிராம் அளவிற்கு வெங்காயத்தை சாப்பிட்டுவந்தால் உயர் ரத்த அழுத்த நோய்கள் கட்டுப்படும். மேலும் இது நோய் வராமல் பாதுகாக்கும் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலும் சரியாகும்.