சித்த மருத்துவத்தில் கடுக்காய் என்பது மிகவும் முக்கியமான மருந்தாக கருதப்படுகிறது. பக்கவிளைவுகள் இல்லாத கடுக்காய் ஆனது பல நோய்களுக்கு காலனாக அமைகிறது. இவை பெரும்பாலும் நமது குடியிருப்புக்களின் அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். தேவையான அளவு கடுக்காயை வாங்கி அதனுள்ளிருக்கும் பருப்பை நீக்கிவிட வேண்டும் .அதன்பிறகு கடுக்காயை நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும். இதனை தினமும் ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவு அருந்திய பின்பு சாப்பிடவேண்டும். இவ்வாறு சாப்பிட்டு கொண்டு வருவதன் மூலமாக பின்வரும் நோய்கள் குணமாகும். 1. ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் 2. கண்பார்வை கோளாறுகள் 3. ரத்தக் கோளாறுகள் 4. காது கேளாமை 5. மூட்டுவலி 6. பித்தம் சம்பந்தமான நோய்கள் 7. உடல் பலவீனம் 8. சர்க்கரை நோய்கள் 9. இதய நோய்கள் 10. வாய்ப்புண் சரியாகும் 11. மூக்கில் உள்ள புண் சரியாகும் 12. இரத்தபேதி நிற்கும் 13. தொண்டை புண் சரியாகும் 14. அனைத்து மூலம் சம்பந்தமான நோய்களுக்கும் அருமருந்தாக அமையும் 15. இரைப்பை புண் சரியாகும் 16. மூல எரிச்சல் சரியாகும் 17. சுவையின்மை 18. குடலில் உள்ள புண்களை சரிசெய்யும் 19. மூத்திர எரிச்சல் மற்றும் கல்லடைப்பு குணமாகும் 20. ஆசன வாயில் உள்ள புண் சரியாகும் 21. மூத்திர குழாயில் உள்ள புண்கள் சரியாகும் 22. நாக்கில் உள்ள புண் சரியாகும் 23. வெள்ளைப் படுதல் நிற்கும் 24. உடல் உஷ்ணத்தை தணிக்கும் 25. உடல்பருமன் 26. தேமல் , படை போன்ற பாதிப்புகளை சரிசெய்யும் 27. அனைத்து விதமான தோல் நோய்களையும் சரி செய்யும்