வல்லாரை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்: 1. மேனிக்கு அழகு தரும் 2. ஞாபக சக்தியை அதிகரிக்கும் 3. குரலை அழகாக்கும் 4. மலமிளக்கியாக செயல்படும் 5. சிறுநீரைப் பெருக்கும் 6. தலைவலி மற்றும் காய்ச்சலுக்கு உகந்தது 7. மூளை மற்றும் இதயத்திற்கு வலிமை தரும் 8. காச நோய் மற்றும் சிறுநீரக கோளாறு சிகிச்சையிலும் வல்லாரையானது பயன்படும். 9. வல்லாரைக் கீரையைக் கொண்டு பற்களை சுத்தம் செய்து வந்தால் பற்கள் வெண்மை அடையும் பளிச்சென மாறும். 10. காய்ச்சல் விலக: வல்லாரை இலைகளுடன் துளசி இலை மிளகு ஆகியவற்றை சரியான அளவு எடுத்து அதனை அரைத்து மாத்திரைகளாக வைத்துக் கொள்ளவும் தினமும் காலை மற்றும் மாலை இந்த மாத்திரைகளை உட்கொண்டு வந்தால் காய்ச்சல் விலகிவிடும். 11. முடி வளர்ச்சிக்கு: வல்லாரை இலையை நன்றாக அரைத்து வைத்துக்கொண்டு தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். 12. தலைவலிக்கு : வல்லாரை இலைகளை உலர்த்தி வைத்துக்கொண்டு பொடி செய்து அதனுடன் கொத்தமல்லி பொடி சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் தலைவலியிலிருந்து பூரணகுணம் பெறலாம். தினமும் மூன்று வேலை சாப்பாட்டிற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக சாப்பிட்டு வந்தால் தலைவலி அண்டாது. 13. ஞாபக சக்தி பெருக: வல்லாரைக் கீரைக்கு இயற்கையாகவே ஞாபக சக்தியை பெருக்கும் திறன் அதிகளவில் இருக்கிறது வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு பொடி செய்து தினமும் ஒரு சிட்டிகை அளவு பாலில் கலந்து பருகி வர நினைவாற்றல் பெருகும். இதனை குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம்.