சித்த மருத்துவத்தில் கடுக்காய் என்பது மிகவும் முக்கியமான மருந்தாக கருதப்படுகிறது. பக்கவிளைவுகள் இல்லாத கடுக்காய் ஆனது பல நோய்களுக்கு காலனாக அமைகிறது. இவை பெரும்பாலும் நமது குடியிருப்புக்களின் அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். தேவையான அளவு கடுக்காயை வாங்கி அதனுள்ளிருக்கும் பருப்பை நீக்கிவிட வேண்டும் .அதன்பிறகு கடுக்காயை நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும். இதனை தினமும் ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவு அருந்திய பின்பு சாப்பிடவேண்டும். இவ்வாறு சாப்பிட்டு கொண்டு வருவதன் மூலமாக பின்வரும் நோய்கள் குணமாகும்.
1. ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள்
2. கண்பார்வை கோளாறுகள்
3. ரத்தக் கோளாறுகள்
4. காது கேளாமை
5. மூட்டுவலி
6. பித்தம் சம்பந்தமான நோய்கள்
7. உடல் பலவீனம்
8. சர்க்கரை நோய்கள்
9. இதய நோய்கள்
10. வாய்ப்புண் சரியாகும்
11. மூக்கில் உள்ள புண் சரியாகும்
12. இரத்தபேதி நிற்கும்
13. தொண்டை புண் சரியாகும்
14. அனைத்து மூலம் சம்பந்தமான நோய்களுக்கும் அருமருந்தாக அமையும்
15. இரைப்பை புண் சரியாகும்
16. மூல எரிச்சல் சரியாகும்
17. சுவையின்மை
18. குடலில் உள்ள புண்களை சரிசெய்யும்
19. மூத்திர எரிச்சல் மற்றும் கல்லடைப்பு குணமாகும்
20. ஆசன வாயில் உள்ள புண் சரியாகும்
21. மூத்திர குழாயில் உள்ள புண்கள் சரியாகும்
22. நாக்கில் உள்ள புண் சரியாகும்
23. வெள்ளைப் படுதல் நிற்கும்
24. உடல் உஷ்ணத்தை தணிக்கும்
25. உடல்பருமன்
26. தேமல் , படை போன்ற பாதிப்புகளை சரிசெய்யும்
27. அனைத்து விதமான தோல் நோய்களையும் சரி செய்யும்
1. பீட்ரூட்:
பீட்ரூட் சாறுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பருகிவர அனைத்து குடல் சம்பந்தமான கோளாறுகளும் சரியாகும். ஜீரணக் கோளறும் முற்றிலுமாக நீங்கும்.
2. கேரட்:
கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் அஜீரண கோளாறில் இருந்து முற்றிலுமாக விடை பெறலாம். ஜீரணத்தை துரிதப்படுத்தும் சக்தியானது கேரட்டிற்கு உண்டு.
3. இஞ்சி :
தினமும் சாப்பிட்டு முடித்தபிறகு சிறிய அளவிலான இஞ்சியை மென்று முனங்கினாள் ஜீரணக்கோளாறு எப்போதும் ஏற்படாது.
4. புதினா:
புதினா இலைச் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டுவர அஜீரணம் சரியாகும். தினமும் குடிக்கும் தேநீரில் இரண்டு புதினா இலைகளை போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் சரியாகும்.
5. உருளைக்கிழங்கு:
தினமும் மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு முன்பாக அரை கப் அளவிற்கு உருளைக்கிழங்கு சாறு பருகி வந்தால் அஜீரணக் கோளாறுகள் இருந்து மூலமாக விடை பெறலாம்.
1. பாகற்காய் :
பொதுவாகவே சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவங்களில் பாகற்காய் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாக பயன்படுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு குடித்து வர நீரிழிவு நோயானது கட்டுக்குள் இருப்பதோடு பூரண குணமடையும் உதவிசெய்யும்.
2. சண்டிக்கீரை:
சில கீரை வகைகளை நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது என்று கூறுவார்கள். ஆனால் சண்டி கீரையை நீரிழிவு நோய்க்காரர்கள் தாராளமாக சாப்பிடலாம். இதில் கார்போஹைட்ரேட் 3 கிராமுக்கு குறைவாக உள்ளதால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாது.
3. சோயா பீன்ஸ்:
சோயா பீன்ஸில் கணிசமான அளவு மட்டுமே கார்போஹைட்ரேட் உண்டு எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் சோயாபீன்ஸ் தாராளமாக சாப்பிடலாம்.
4. தக்காளி: நீரிழிவு
நோய் உள்ளவர்களுக்கு சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மையானது தக்காளிக்கு உண்டு. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் கட்டாயம் தக்காளி சாப்பிட வேண்டும்.
1. முட்டைகோஸ்:
முட்டைக்கோசை சிறு துண்டுகளாக அரிந்து கொண்டு அதனுடன் சிறிதளவு உப்பு மிளகு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து உண்ண வேண்டும். இவ்வாறு உண்பதன் மூலம் மலச்சிக்கல் சரியாகும்.
2. கேரட்:
250 மில்லி கேரட் சாறுடன் 50 மில்லி பசலைக் கீரையின் சாறு மற்றும் சிறிது எலுமிச்சை சாறும் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும் பசலைக்கீரைக்கு குடலை சுத்தம் செய்யும் தன்மை உண்டு. குடித்தவுடன் சுமாராக இரண்டு மாதங்கள் வரை இந்த சாறு குடலில் தங்கியிருந்து மலச்சிக்கல் வராமல் பாதுகாக்கும்.
3. வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நம்மை அண்டவே அண்டாது.
4. சண்டிக்கீரை:
சண்டிக் கீரையில் உள்ள செல்லுலோஸ் என்னும் சத்தானது தொடர்ந்து சாப்பிட்டு வர பல நாளாக மலச்சிக்கலால் அவதிப்படுவர் அதில் இருந்து மீண்டு வரலாம்.
5. பசலைக்கீரை:
நமது வயிற்றின் ஜீரண பாதையில் எங்கு கழிவுகள் தேங்கி இருந்தாலும் பசலைக்கீரை சாப்பிடுவதன் மூலமாக அந்த கழிவுகளை வெளியேற்றி புத்துணர்ச்சி அளிக்கும். எதிர்காலத்தில் மலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் இது செயல்படும்.
1. சண்டிக்கீரை:
சண்டிக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான ஹீமோகுளோபின் சப்ளையானது சரியாக இருக்கும்.
2. பசலைக்கீரை:
பசலைக்கீரையில் உள்ள சத்துக்களை நமது உடலானது கிரகித்துக் கொண்டு உடலிற்கு தேவையான ஹீமோகுளோபினை உருவாக்கும். சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் ஆனது பசலைக் கீரைக்கு உண்டு. இவ்வாறு செயல்படுவதன் மூலமாக ரத்தசோகையை அறவே தடுக்கும்.
3. சோயா பீன்ஸ்:
சோயாபீன்ஸ் ஆனது எளிதில் ஜீரணம் அடையக்கூடிய ஒன்று எனவே ரத்த சோகை சிகிச்சை அளிப்பவர்கள் நோயாளிகளுக்கு இதனை பரிந்துரைக்கின்றனர்.
4. வெங்காயம்:
தினமும் 100 கிராம் அளவிற்கு வெங்காயத்தை சாப்பிட்டுவந்தால் உயர் ரத்த அழுத்த நோய்கள் கட்டுப்படும். மேலும் இது நோய் வராமல் பாதுகாக்கும் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலும் சரியாகும்.
வல்லாரை சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்:
1. மேனிக்கு அழகு தரும்
2. ஞாபக சக்தியை அதிகரிக்கும்
3. குரலை அழகாக்கும்
4. மலமிளக்கியாக செயல்படும்
5. சிறுநீரைப் பெருக்கும்
6. தலைவலி மற்றும் காய்ச்சலுக்கு உகந்தது
7. மூளை மற்றும் இதயத்திற்கு வலிமை தரும்
8. காச நோய் மற்றும் சிறுநீரக கோளாறு சிகிச்சையிலும் வல்லாரையானது பயன்படும்.
9. வல்லாரைக் கீரையைக் கொண்டு பற்களை சுத்தம் செய்து வந்தால் பற்கள் வெண்மை அடையும் பளிச்சென மாறும்.
10. காய்ச்சல் விலக:
வல்லாரை இலைகளுடன் துளசி இலை மிளகு ஆகியவற்றை சரியான அளவு எடுத்து அதனை அரைத்து மாத்திரைகளாக வைத்துக் கொள்ளவும் தினமும் காலை மற்றும் மாலை இந்த மாத்திரைகளை உட்கொண்டு வந்தால் காய்ச்சல் விலகிவிடும்.
11. முடி வளர்ச்சிக்கு:
வல்லாரை இலையை நன்றாக அரைத்து வைத்துக்கொண்டு தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
12. தலைவலிக்கு :
வல்லாரை இலைகளை உலர்த்தி வைத்துக்கொண்டு பொடி செய்து அதனுடன் கொத்தமல்லி பொடி சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் தலைவலியிலிருந்து பூரணகுணம் பெறலாம். தினமும் மூன்று வேலை சாப்பாட்டிற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக சாப்பிட்டு வந்தால் தலைவலி அண்டாது.
13. ஞாபக சக்தி பெருக:
வல்லாரைக் கீரைக்கு இயற்கையாகவே ஞாபக சக்தியை பெருக்கும் திறன் அதிகளவில் இருக்கிறது வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு பொடி செய்து தினமும் ஒரு சிட்டிகை அளவு பாலில் கலந்து பருகி வர நினைவாற்றல் பெருகும். இதனை குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம்.
1. சௌசௌ காயினில் கால்சியம் சத்து மிகவும் அதிகமாக காணப்படுவதால் பல் சார்ந்த அனைத்து நோய்களிலிருந்தும் நம்மை காக்கிறது.
2. மனித உடலிலுள்ள எலும்புகளுக்கு முக்கிய உரமாக சௌசௌ ஆனது கருதப்படுகிறது.
3. சௌசௌ காயை கூட்டு செய்து சாப்பிட்டு வர வாயில் உள்ள புண்கள் அனைத்தும் சரியாகும் மேலும் ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் மூக்கில் ஏற்படும் சுவாச அடைப்புகளைப் போக்கும் சக்தியும் இதற்கு உண்டு.
4. மேலும் வயிற்று வலி மற்றும் வயிற்று எரிச்சலுக்கு முக்கியமான நிவாரணியாக கருதப்படுகிறது கபகட்டுகளை நீக்கும்.