1. கோவைக்காய் அல்லது கோவை பழத்தின் வேர்கிழங்குகள் இனவிருத்திக்கு பயன்படுகின்றன.
2. கோவைக்கிழங்கு சாற்றை 1 அல்லது 3 கரண்டி தர நீரிழிவு நோயானது கட்டுக்குள் இருக்கும்.
3. கோவைக்காயை மோரில் ஊற வைத்து வற்றலாகக் செய்து சாப்பிட்டு வர சிறுநீர் கோளாறுகள் சரியாகும்.
4. கோவைக்காய் கூட்டு அல்லது பொரியல் செய்து சாப்பிட்டு வர நாக்கிலுள்ள வெடிப்புகள் மற்றும் வாயில் எங்கு புண் இருந்தாலும் விரைவாக குணம் அடையும்.
5. கோவை இலை சாறுடன் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு பருகிவர உடல் சூடு தணியும் உடம்பில் உள்ள குறைகளை அகற்றும் நிலை நிறுத்தும் ஆற்றலானது கோவை சாற்றுக்கு உண்டு.
1. கொத்தவரங்காய்க்கு எப்பொழுதும் நோய் தீர்க்கும் தன்மையானது குறைவு. பத்தியம் இருந்து சாப்பிடுவோர் கொத்தவரங்காயை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் பத்தியம் முறிவு உண்டாகும் எடுத்துக்கொண்ட மருந்து வேலை செய்யாமல் போகும்.
2. வாதம் மற்றும் பித்தம் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை இது அதிகப்படுத்தும். அதனால் அதை விட்டு எட்டக்க இருப்பதே சிறந்தது.
3. கொத்தவரங்காய் சாப்பிட்டுவர எலும்பு மற்றும் பல்லானது உறுதிப்படும் .பித்தமயக்கம் ஏற்படுவதை தடுக்கும் மாலைக்கண் நோயை குணப்படுத்தும்.
காலிஃப்ளவர் எப்பொழுதும் சமைக்காமல் சாப்பிடக்கூடாது, எப்பொழுதும் சமைத்து சாப்பிடுவதே சிறந்தது. பெரும்பாலும் முட்டைகோஸில் உள்ள அதே சத்துக்கள் காலிபிளவரிலும் உண்டு.காலிஃப்ளவரை எப்பொழுதும் பிரதான உணவாக எடுத்துக் கொள்ளக்கூடாது அதையும் மீறி சாப்பிட்டால் குரல்வளையில் வீக்கம் உண்டாகும் இயல்பான அளவு சாப்பிடும் போது மட்டும்தான் அதற்குண்டான நற்பயன்கள் அனைத்தும் உடலுக்கு கிடைக்கும்.
காளிபிளவர் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள்
1. குடல் பாதையை சுத்தப்படுத்தும்
2. மலச்சிக்கலை சரிசெய்யும்
3. வயிற்றுப்புண்ணை ஆற்றும்
4. எடை குறைப்பிற்கு பயன்படுகிறது
5. சர்ம கோளாறுகளை சரி செய்கிறது
1. கருணைக்கிழங்கை வாங்கும்போது புதிய கிழங்காக வாங்கக்கூடாது. ஏனென்றால் கருணைக்கிழங்கானது நமைச்சல் உள்ளது. புதிய கிழங்கை வாங்கும்போது நமைச்சல் அதிகமாகும்.
2. சொறி, சிரங்கு ,கரப்பான் போன்ற சரும பிரச்சனைகளை சரி செய்யும் ஆற்றல் கருணைக்கிழங்கு உண்டு
3. கருணைக்கிழங்கை லேகியம் செய்து சாப்பிட்டு வர மூலம் நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படும்.
4. கருணைக்கிழங்கானது ரத்தத்தை விருத்தி செய்யவும் ,ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தவும், மலச்சிக்கல், வயிற்று எரிச்சல் ,வயிற்றுவலி, மூலம் ஆகிய வியாதிகளுக்கு சரியான மருந்தாக அமையும்.
1. கத்திரிக்காயை எப்போதும் அதிகமாக உட்கொள்ளக் கூடாது ஏனெனில் உடம்பில் சொறி அரிப்பு மற்றும் சிரங்கு உண்டாகும்.
2. கத்திரிக்காயில் உடம்பில் பசியை தூண்டும் ஆற்றலானது அதிக அளவில் உள்ளது. இது ரத்தத்தை சுத்திகரிப்பது மட்டுமல்லாமல் சிறுநீர் கழிக்கும்போது கடுகடுப்பு இருந்தால் அதை சரி செய்யும். தொடர்ந்து சாப்பிட்டுவர இருமலுக்கு சிறந்தது.
3. வெப்ப காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலுக்கு கத்திரிக்காய் ஆனது சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது பிள்ளைகளை ஈன்ர கர்ப்பிணிப் பெண்கள் பத்திய உணவிற்காக கத்திரிக்காயை சேர்த்து கொள்ளலாம்.
4. வாதம் பித்தம் கப தோஷங்கள் ஆகியவற்றால் வரும் தொந்தரவுகளை நீக்கி உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் .நாள்பட்ட கோடழ கட்டு எளிதில் குணமாக கத்திரிக்காயானது உதவும்.
1. தக்காளியானது நம்முடைய சிறுநீரகத்தை மென்மையாக மற்றும் இயல்பாக நிலைக்கு ஊக்குவிக்கிறது.
2. உடம்பில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற பயன்படுகிறது.
3. வயிற்றுக்கடுப்பு பிரச்சனைக்கு பூண்டு மற்றும் எலுமிச்சை சாற்றுடன் தக்காளியை சேர்த்து உட்கொள்ள வேண்டும்.
4. தக்காளியானது உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடிய ஒன்றாகும் வயிற்றுக் கோளாறு மற்றும் ஈரல் சம்பந்தமான கோளாறுகளில் மிக்க குணம் அளிப்பதாக செயல்படுகிறது.
5. தக்காளியை அதிகம் சேர்த்துக் கொண்டு வந்தால் உடல் உறவில் நாட்டம் குறைந்துவிடும்.
6. தக்காளியானது வயிற்றில் ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை சீர்படுத்தும் நாள்பட்ட வயிற்று நோய்களை சரி செய்யும் பலமானது தக்காளிக்கு உண்டு மேலும் ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்யும்.
7. மந்தமான ஈரலை ஊக்குவிப்பதற்கு தக்காளியில் உள்ள அயன் சத்தும் பொட்டாசியம உப்புக்களும் பெரும் பங்காற்றுகின்றன அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு உபாதைகளை சரிசெய்யும்.
8. தக்காளியை சாறு பிழிந்து அதனுடன் தேன் கலந்து பருக உடலில் ரத்தம் சுத்தம் படம்.
9. தக்காளி நன்றாக வேகவைத்து காயம்பட்ட இடத்தில் வைத்துக் கட்டி வர காயமானது விரைவில் குணமாகும்.
10. இதில் விட்டமின் ஏ சத்துக்கள் அதிகம் நிறைந்திருப்பதால் கண் சம்பந்தமான எந்த பிரச்சினை உள்ளவர்களும் இதை பயன்படுத்துவதால் பிரச்சினைகளிலிருந்து விடுபட வாய்ப்பு அதிகம்.
1. தூதுவளையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நினைவாற்றலை அதிகரிக்கச்செய்யும் இருமல் மற்றும் கபம் ஆகியவற்றை நீக்கும்.
2. உடலானது இளைத்துப் போய் கொண்டிருந்தால் தூதுவளையை நசியம் செய்து சாப்பிட்டு வர சரியாகும்.
3. பால்வினை நோயான மேக நோய்க்கு இது சிறந்த மருந்தாகும். எலும்புருக்கி நோயை குணப்படுத்த தூதுவளை அளவு பயன்படுகிறது.
4. பசி உணர்வு தூண்டப்படும் எதற்கு பயன்படுகிறது
5. ஆஸ்துமா குணமாக தீர்க்கும் பயன்படுகிறது
6. காசம் மற்றும் இருமல் அதிலிருந்து விடுபட தூதுவளை இலை கசாயம் தயாரித்து சாப்பிட்டு வர சரியாகும்
7. காது அடைப்பு நீங்குவதற்கு தூதுவளை இலை சாற்றை பிழிந்து காதில் விட்டு வர காது அடைப்பு சரியாகும்
8. உடம்பின் வலியை நீக்குவதோடு தூதுவளை இலை ஜீரணத்தை எளிதாக்கும் சக்தி அதற்கு உண்டு