1. சுரைக்காயை அன்றாடம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் தாராளமாக வெளியேற்றுவதற்கு பெரிதும் பயன்படும். மேலும் ஒரு சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படும். 2. பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனையை சரிசெய்ய சுரைக்காய் ஆனது பயன்படுகிறது. 3. இருதயம் மற்றும் ஈரல் ஆகியவற்றை பலப்படுத்தும் .வெப்பமான உடல்வாகு கொண்டவர்களுக்கு இரத்தத்தை விருத்தி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. 4. வாதம் மற்றும் பித்தம் உள்ளவர்கள் அளவாக உண்ண வேண்டிய பொருட்களில் சுரக்காயும் ஒன்று. உடல் சூட்டை சமன் செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. 5. சுரைக்காயின் சாற்றை யும் நல்லெண்ணெயையும் சரியான அளவில் எடுத்துக்கொண்டு தைலம் தயாரித்துக் கொள்ளலாம். இந்த தைலத்தை வாரத்திற்கு இரண்டு முறை தேய்த்து குளித்து வந்தால் கண்களில் ஏற்படும் பிரச்சனைகள் அடியோடு அகன்று பார்வை தெளிவு பெறும்.