1. முளைக் கீரையில் வைட்டமின் ஏ ,வைட்டமின் சி , புரதம் மற்றும் தாதுக்கள் அதிகம் காணப்படுகிறது. முளைக்கீரையின் தண்டில் பச்சை மற்றும் சிவப்பு வகைகள் உள்ளன. 2. பச்சை கீரைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் நீர் சுருக்கு மற்றும் நீர் கட்டுக்கு மருந்தாக அமையும். சிவப்பு நிற தண்டுகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பத்தை தணிப்பதோடு பித்தத்தையும் கட்டுப்படுத்தும் .மேலும் முகம் பளபளப்பாக இருக்க அயராது பாடுபடும். 3. முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள புண்களை குணப்படுத்தும் தன்மையுடையது மேலும் இது ஒரு சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது கண் பிரச்சனை அதிகம் உடையவர்கள் முறை கீரைகளை சாப்பிடவேண்டும் எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும்.