வேர்க்குரு மற்றும் அதன் எரிச்சலுக்கு காரணம் உடல் வெப்பம் தான் , உடல் குளிர்ச்சியடைந்தால் வேர்க்குரு நம்மை அண்டாது. 1. நுங்கு தோலை தடவி வர எரிச்சல் அடங்கும். 2. வேர்க்குரு உள்ள இடத்தில தயிர் தடவி வந்தால் எரிச்சல் நிற்கும். 3. மஞ்சள் வெப்ப இலை கலந்து அரைத்து தொடர்ந்து பயன்படுத்தவும் எரிச்சலும் அடங்கும் மேலும் வேர்க்குரு வராமல் தடுக்கும். 4.கற்றாழை சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் தணிந்து உடல் குளிச்சியடையும் வேர்க்குரு பிரச்னையிலிருந்து விடுபடலாம். 5. வேப்பிலையை நன்றாக அரைத்து தண்ணீரில் கலந்து குளித்து வர எரிச்சல் அடங்கும். 6. சாப்பாடு வடித்த கஞ்சியை குளிப்பதற்கு 10 நிமிடத்திற்கு முன் உடலில் பூசி பின்பு குளித்தால் வேர்க்குரு எரிச்சல் குணமாகும். 7. வெள்ளரிக்காயை நன்றாக அரைத்து உடலில் பூசி 30 நிமிடம் கழித்து குளித்தால் உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சியடையும். வேர்க்குரு எரிச்சல் உடனடியாக நிற்கும். 8. குப்பைமேனி இலையையும் மற்றும் விரலிமஞ்சலையும் ஒன்று சேர்த்து அரைத்து உடம்பில் பூசி வந்தால் எரிச்சல் குணமாகும். 9. சந்தன கட்டை உரசி வைத்தால் உடல் குளிர்ச்சியடையும் , எரிச்சல் அடங்கும். குறிப்பு: ஒவ்வொருவரின் உடல்வாகும் தனித்தன்மை கொண்டது. மேற்கண்ட அனைத்தும் உங்கள் உடல் உபாதைக்கு செயல்படாது , எனவே உங்களில் உடல் வாகின் நிலையை கருத்தில் கொண்டு வைத்தியத்தை பின்பற்றவும்.