மோர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள் வெயில் காலத்தில் நிறைய பேருக்கு உடல் சூட்டினால் பல உபாதைகள் ஏற்படும் , உடம்பில் நீர் சத்து குறைபாடு போன்ற நிறைய பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதற்கு ஒரே தீர்வு வெயில் காலத்தில் நாம் மோர் குடிப்பது தான். 1. வெளியில் சென்று வருபவருக்கு வெயில் காலத்தில் உடம்பில் உள்ள நீர்ச்சத்து குறைந்து அதிகபடியாக தாகம் எடுக்கும் அந்த நேரத்தில் மோரை குடித்த பின்பு தாகம் தணிந்து வெயில் களைப்பு நீங்கி புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். நிறைய தண்ணீர் குடித்தாலும் நீர்சத்து அவ்வளவு எளிதாக உடம்பில் அதிகமாகாது. தினமும் மாலையில் அல்லது மதியத்தில் மோர் குடிப்பதால் உடலில் நீர்சத்து எப்பொழுதும் குறையாமல் உடம்பு வலுப்பெற்று நன்றாக புத்துணர்ச்சியுடன் இருக்கும். 2. வயிறு அதிகமாக எரிச்சலாக இருக்கும் நபர்கள் மோரைக் குடிப்பதனால் வயிறு குளிர்ச்சி அடைகிறது, மேலும் கண் எரிச்சலை தணிக்கிறது.வயிறு உப்புசம் உள்ளவர்கள் வெதுவெதுப்பான நீரில் மோர் கலக்கி அதில் பெருங்காயத்தூள் சேர்த்து குடிப்பதால் வயிறு உப்பசம் குறையும் நன்றாக ஏப்பம் வருவதோடு வயிறு லேசாக உணர்வீர்கள். தாளித்த மோர் கொடுப்பதினால் ஜலதோஷம் சளி இவற்றை ஏற்படுவதை தவிர்த்து உடலை குளிர்ச்சியாக நீர்சத்து குறையாமல் வைத்துக் கொள்ளலாம். 3. கர்ப்பிணிப் பெண்கள் பனிக்குட நீர் குறையாமல் பார்த்துக்கொள்ள மோர் அதிகம் குடிக்கலாம். வாந்தி மயக்கம் உள்ள கர்ப்பிணி பெண்கள் தண்ணீர் குடிக்க முடியவில்லை என்றாலும் மோர் அவங்களுக்கு குடிப்பது எளிமையானதாகவும் வாந்தி வராமலும் இருக்கும் வெயில் காலத்தில் கர்ப்பிணி பெண்கள் மோர் குடிப்பது மிகவும் நல்லது. 4. பெண்களுக்கு வெள்ளைப்படுதல் வெயில் காலத்தில் சிலருக்கு அதிகமாக இருக்கும் அவர்கள் அதிக தண்ணீர் குடிப்பதை நாளுக்கு நாள் அதிகரித்து கொள்வதினால் உடல் சூடு தணிந்து வெள்ளைப்படுதல் கட்டுப்படும் இதனால் உடல் எடை குறையாமல் இருக்கும். 5. ஒரு சிலருக்கு உடலில் அதிக வேர்வை வரும் அத்தகையவர் நாக்கு வறண்டு தண்ணீர் அதிகமாக எடுத்தாலும் அவர்களால் தண்ணீர் குடிக்க முடியாது காரணம் அவர்களுக்கு சட்டென்று தண்ணீர் குடித்தவுடன் சளி பிடித்துக் கொள்ளும் அத்தகையோர் தாளித்த மோர் குடிப்பதனால் தாகம் அடங்கி சளியும் வராமல் தடுக்கலாம். 6. பால் டீ காஃபி குடிக்க விரும்பாதோர் மோரை குடிக்கலாம் இதில் அதிக அளவு புரோட்டின் விட்டமின் பி செரிமானத்திற்கு தேவையான பாக்டீரியா அதிகம் உள்ளது பாலிலுள்ள கால்சியம் மோர் குடிப்பதனால் உடலுக்குத் தேவையான கால்சியம் சென்றடையும். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான வைட்டமின்கள் மோரில் உள்ளது அவர்கள் அதிகமாக குடிப்பது நல்லது மோர் குடிப்பதால் விட்டமின் குறைபாடு இல்லாமல் இருக்கலாம். 7. பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்லுபவர்கள் வெளியில் பெரியோர்கள் வயதானவர்கள் தண்ணீரை உடன் எடுத்து செல்லும் வழக்கத்தை பழக்கமாக வைத்துக் கொள்பவர்கள் வெயில்காலத்தில் மோரையும் ஒரு பாட்டில் எடுத்துச் சென்று மதியவேளையில் குடிக்கலாம் இது உடலுக்கு குளிர்ச்சி தந்து உடல் உபாதைகள் ஏற்படுவதை தடுக்கும். யாரெல்லாம் மோர் குடிக்க கூடாது: 1. வெயில் காலத்துல எண்ணெய் தேய்த்து நிறைய பேர் குளிப்பாங்க. அப்படி எண்ணை தேய்த்து புதிதாக குளிப்பவர்களாக இருந்தாலும் சரி தினமும் குளிப்பவர்களானாலும் சரி அந்த நாள் முழுக்க மோர் குடிக்கக்கூடாது. காரணம் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது உடலில் உள்ள சூடு வெளியில் வந்து கொண்டிருக்கும் அந்த நேரத்தில் நாம் குளிர்ச்சியான பொருளும் முழு குடிக்கும் பொழுது சட்டென்று ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும் இதனால் எண்ணெய் தேய்த்து குளிப்பவர்கள் மோர் குடிக்க கூடாது. 2. ஜலதோஷம் பிடித்தவர்களும் குடிக்கக்கூடாது வெயில் காலத்தில் ஜலதோஷம் சரியான பிறகு மோர் குடிக்கலாம்.சில ஆண்களுக்கு அல்லது பெண்களுக்கு குளிர்ச்சியான பொருள் மற்றும் அதிக தண்ணீர் குடித்தாலே சளி பிடித்துக் கொள்ளும் அத்தகையவர் தாளித்த மோரை குடிக்கலாம். இது சளி பிடிக்காது உடலையும் பாதுகாக்கும். பிறந்த குழந்தைகளுக்கு மோர் குடுக்க கூடாது.