எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நாட்கள்: இப்போ இருக்கிற காலகட்டத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்கிறதுக்கு நேரம் இல்லாம தனக்கு எப்போது ஓய்வு கிடைக்குதோ அந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கிறார்கள்.. பண்டிகை,தீபாவளி இந்த மாதிரி வருஷத்துக்கு வர ஒரு பண்டிகைக்கு மட்டும் எண்ணை தேய்த்து குளிக்கிறது நடைமுறை வாழ்க்கையில் வழக்கமாய் இருக்கிறது.. ஆனால் வாரத்துக்கு இரண்டு முறை ஒரு முறை இப்படி குளித்து வந்தால் உடம்பில் உஷ்ண நிலை சமநிலையை பெற்று புத்துணர்ச்சி ஆரோக்கியத்தை உடலும் மனதும் பெறுகிறது.... எள் எண்ணெய் அதாவது நல்லெண்ணெய் உடம்பில் தேய்த்துக் குளிக்க உகந்த எண்ணெய். இந்த எண்ணெயை வாரத்தில் இருமுறை அல்லது ஒருமுறை தேய்த்து குளித்து வந்தால் உடல் எலும்பு வலுப்பெற்று உற்சாகம் ஆரோக்கியத்தை தருகிறது நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க உகந்த எண்ணெய்.
நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க உகந்த நேரம் காலை எட்டு மணியிலிருந்து மாலை 5 மணிக்குள் எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும், அதிகாலை குளிக்கக்கூடாது.... நல்லெண்ணெய் உடல் சூட்டை தனித்து சமநிலையில் வைக்கிறது எட்டு மணிக்கு முன் குளிப்பதால் உடல் குளிர்ந்து ஜலதோஷம் உடல் நலம் குறைவு ஏற்படுகிறது... 8 மணிக்கு மேல் மாலை 5 மணிக்குள் நல்லெண்ணை தேய்த்து குளிப்பது நல்லது.
1. ஆண்களுக்கு சனிக்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய நாட்களில் நல்லெண்ணை தேய்த்து குளிப்பது நலன் மற்றும் பலனைத்தரும். 2. பெண்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நல்லெண்ணை தேய்த்து குளிப்பது நலம் தரும். குறிப்பாக சுமங்கலி பெண்கள் நல்லெண்ணை தேய்த்து குளித்து முடிக்கும் போது கடைசியாக மஞ்சள் தூள் தேய்த்து குளிக்க வேண்டும்.
1. பிறந்தநாள் 2. அமாவாசை 3. பௌர்ணமி 4. பிறந்த நட்சத்திர நாட்கள் 5. விரத தினங்கள் போன்ற நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் வெளியே சென்ற பின் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.
நல்லெண்ணெய் சூரிய உதயத்திற்குப் பின் உடல் முழுவதும் தேய்த்து அரை மணி நேரம் உடலில் நல்லெண்ணெய் ஊற வைக்கவும். நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாட்களில் கண்டிப்பாக சுடுநீரில் குளிக்க வேண்டும் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது.
1. நல்லெண்ணை தேய்த்து குளித்த பின் உறங்கக்கூடாது. 2. மோர்,ஜூஸ்,இளநீர்,குளிர்பானங்கள் தவிர்ப்பது நலம் இதனை சாப்பிடவே கூடாது. அன்று தாம்பத்திய உறவு கொள்ளக் கூடாது. 3. பழைய சாதம் சாப்பிட கூடாது. 4. பெண்கள் மாதவிலக்கு அன்று நல்லெண்ணை தேய்த்து குளிக்க கூடாது.
1. நல்லெண்ணை தேய்த்து குளிப்பதனால் உடல் உள்ள உஷ்ணம் சம நிலையை அடைகிறது. 2. தோல் பளபளப்பு ஆகிறது. 3. மூட்டு வலி கால் வலி நோய் வராமல் தடுக்கிறது. 4. வறண்ட சருமம் உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தோல் வெடிப்புகள் குணமாகிறது. 5. மனம் புத்துணர்ச்சி அடைகிறது அன்று சோர்வாக இருந்தாலும் வரும் நாட்களில் சுறுசுறுப்பாக உணர்வீர்கள். 6. கண் குளிர்ச்சியடைந்து கண் பார்வை கூடுகிறது.