1. தோலை உலர்த்தி ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து பிடித்து பல்பொடியாக பயன்படுத்தினால் ஈறுகள் உறுதிபடுவதுடன் பற்கள் வெண்மையாகும் பல் நோய் வராது.
2. இப்பழச்சாறு தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் சொத்தைப் பல்லை குணமாகி பற்பூச்சை (எனாமலை) பாதுகாக்கிறது, மேலும் பல்வலி, ஈறுவீக்கம், ரத்தக் கசிவை குணமாகும்.
3. இப்பழத்தின் வெண்ணிறத் தோல் நார்ச்சத்து நிரம்பியது. அது பழத்துடன் சேர்ந்து சாப்பிட்டால் உடலை தூய்மையாக்கி மலச்சிக்கலைப் போக்கும்.
4. இப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்கும். இதுபோல் தோல் நுரையீரல், மார்பகம் குறித்து பல்வேறு புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது.
5. தூக்கம் இல்லாமல் அவதிபடுபவர்கள் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
6. ஆரஞ்சு பழச்சாற்றை ஒரு மண்டல தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சத்தி அதிகரித்து உடல் பலமடையும். நரம்புகள் பலம் பெரும்.
7. தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம் பளபளப்புடன் நோயின் தாக்குதலின்றியும் இருக்கும்.
8. இதேபோல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் மற்றும் சிறுநீரக கல் உருவாவதற்கான வாய்ப்பும் குறையும், இதயத்தின் சிறப்பாக செயல்படுத்த உதவும் பொட்டாசியம், தாது உப்பு இதில் அதிகமாக இருக்கிறது.
1. மலச்சிக்கல்
வாழைப்பழம் மலச்சிக்கலை சரிசெய்யும் என்பது நம்மில் பலரும் அறிந்த ஒன்றே மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் , வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் குடலின் இயக்கமானது சீராக இயங்க ஆரமிக்கும் , எனவே மலச்சிக்கல் பிரச்சனையானது விரைவாக சரியாகும்.
2. ஆற்றல் பெருக்கு
வாழைப்பழத்தில் சுக்ரோஸ் , குளுக்கோஸ், மற்றும் ஃபுருக்டோஸ் ஆகிய சத்துக்களானது மனித உடலுக்கு உடனடியாக ஆற்றலை பெருக்கும் சக்தி கொண்டது.
3. மூளை செயல்பாடு
வாழைப்பழத்தில் பொட்டாசயிம் சத்து அதிக அளவில் உள்ளது , இதனை சாப்பிடுவதன் மூலம் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும். ஆகையால் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வருவதால் அன்றைய நாள் புத்துணர்ச்சியுடன் இயங்கும்.
4. சிறுநீரக பிரச்சனை:
வாழைப்பழத்தில் தேவைக்கு ஏற்ப புரோட்டீன் மற்றும் உப்பு உள்ளது. இவை சிறுநீரகத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை சரிசெய்யும் தன்மை உடையது. மூன்று நாட்கள் இடைவிடாது ஒரு நாளுக்கு 10 பழங்கள் வீதம் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்.
5. எடை குறைக்க:
எடை குறைக்கும் எண்ணம் கொண்டவர்கள் டயட்டில் அன்றாடம் வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்வதன் மூலமாக எடைக்குறைப்பில் நல்ல பலனைப் பெறலாம்.
6. இதய நோய்:
உடலிலுள்ள நீர் செல்களை சீராக வைத்து ரத்த அழுத்தத்தை குறைப்பதன் மூலம் ரத்த அழுத்தம் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கும்.தினசரி வாழைப்பழம் சாப்பிட்டு வர பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவு.
7. ரத்த சோகை:
வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்பு சத்துக்கள் உள்ளது. எனவே தினசரி வாழைப்பழம் சாப்பிட்டு வர ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ரத்த சோகை நீங்கும்.
8. வயிற்றுக்கடுப்பு:
நன்கு மசித்த வாழைப்பழத்தில் சிறிதளவு உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வர வயிற்று கடுப்பு உடனடியாக நிற்கும்.
9.குடல் கோளாறு:
தினமும் நன்கு கனிந்த வாழைப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலமாக குடலில் ஏற்படும் கோளாறுகள் நீங்கிவிடும். மேலும் குடலில் உள்ள புண்கள் குணமாகும். பிறகு செரிமான இயக்கம் இயல்பு நிலை திரும்பும்.
1. தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வருவதன் மூலமாக உடம்பில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடல் எடை கூட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பவர்கள் தினசரி இரண்டு அத்திப்பழங்களை வருவதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும்.
2. மலச்சிக்கல்: தினமும் உணவு அருந்திய பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிட வந்தால் மலச்சிக்கலை நீக்கும், மேலும் இரவு தூங்குவதற்கு முன்பாக ஐந்து அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் தீராத மலச்சிக்கல் குணமடையும்.
3. அத்திபழத்தில் பல வளமான வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்கள் இருப்பதனால் தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வருவதன் மூலமாக உடலானது வளமாக காணப்படும்.
4. நாட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வருவதன் மூலமாக வெண்குஷ்டம் வெண்புள்ளிகள் தோலின் நிறமாற்றம் ஆகியவை சரியாகும் இதனை பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசிவர அவை சரியாகும்.
5. ஆண்மை: உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வருவதன் மூலமாக அளவற்ற ஆண்மை வலிமையை பெறலாம். மேலும் இவற்றினை பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும். தினமும் 5 முதல் 10 வரை அத்திப்பழத்தை காலை மாலை என இரண்டு வேளையும் சாப்பிட்டு விட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும்.
6. அத்திப்பழம்மானது எளிதில் ஜீரணம் அடைய கூடிய ஒன்றாகும். இதனால் கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை சுறுசுறுப்புடன் வைத்திருக்க அத்தி பழம் உதவுகிறது. பெருங்குடலில் ஆங்காங்கே சேர்ந்துள்ள இறுகிய கழிவுப் பொருட்களை சிறிது சிறிதாக பக்குவப்படுத்தி இளக்கி வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை கொஞ்சம்கொஞ்சமாக சுத்தம் செய்கிறது.
1. ஸ்ட்ராபெரி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நம் உடம்பிற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அது அளிக்கிறது.
2. உடலில் ரத்தம் குறைவாக உள்ளவர்களுக்கு உடல் ரத்தம் உற்பத்தியை அதிகரிக்க இவை பயன்படுகின்றன.
3. ஸ்ட்ராபெரியை தொடர்ந்து உணவில் சேர்த்து கொள்வதன் மூலமாக இருதயம் சமந்தமான அணைத்து நோய்களிலிருந்தும் நிரந்தர நிவாரணம் பெறலாம். ஸ்ட்ராபெர்ரியை சாப்பிடுவதன் மூலமாக உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அகலும்.
4. நமது உடலில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் ஸ்ட்ராபெரிக்கு முக்கிய பங்கு உள்ளது.
5. புற்றுநோய் உருவாக காரணமாக இருக்கும் செல்களை வர விடாமல் தடுக்கும் ஆற்றல் ஆனது ஸ்ட்ராபெரி பழத்திற்கு உண்டு.
6. ஸ்ட்ராபெரி பழத்தின் சாறினை தினமும் அருந்தி வருவதால் அவை பற்களின் ஆரோக்கியத்தை காக்கிறது. இதில் இருக்கும் அமிலங்கள் காரணமாக பற்களில் இருக்கும் கரைகளை சாப்பிடும்பொழுதே அகற்றும் தன்மை இதற்க்கு உண்டு, மேலும் வாய் துர் நாற்றத்தையும் போக்கும்.
7. குடல் இயக்கத்தை சீராக்கும் சக்தியானது ஸ்ட்ராபெரி பழத்திற்கு உண்டு. குடல் நோய் மற்றும் குடலில் ஏற்படும் புண்களை அனைத்தையும் அகற்றும் .ஸ்ட்ராபெரி பழங்களில் நார்ச்சத்து இருப்பதால் வயிற்று பிரச்சனை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மட்டுமல்லாது செரிமான பிரச்சனைகளையும் சரிசெய்யும்.
8. அதிகப்படியான வெப்பத்தினால் ஏற்படும் ஆண்மைக்குறைவை போக்கி ஆடவர்கள் இன்றியமையாத ஆண்மை சக்தியை அதிகரிக்கும் திறனானது ஸ்ட்ராபெரி பழத்திற்கு உண்டு. இதில் இருக்கும் குளிர்ச்சித் தன்மை உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் .
பப்பாளி பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் எ ,காப்பர் பாஸ்பரஸ் பொட்டாசியம் இரும்பு நார்ச்சத்துகள் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.
பப்பாளி பழத்தை நாம் உண்பதனால் செரிமான நோய்களை குணப்படுத்துவதோடு மலச்சிக்கலைப் போக்கும் ஆற்றல் வாய்ந்தது.
இந்த பப்பாளி பழம் ரத்த சோகை என்னும் நோயை குணப்படுத்தும்.
வயிற்றுப்போக்கு, நெஞ்சு எரிச்சல், அல்சர், சர்க்கரை வியாதி, கண் பார்வை கோளாறு போன்றவற்றிற்கு சிறந்த மருந்து.
வறண்ட மேல் தோலை அகற்றி புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி இதற்கு உண்டு.
முகம் பளபளப்பாக இருக்கவும் இந்த பழம் மிகவும் பயன்படுகிறது.
குழந்தைகளுக்கு பப்பாளிப் பழத்தை உண்ண கொடுப்பதனால் எலும்புகள் , பற்கள் உறுதியாகிறது.
பெண்கள் இதை உண்பதனால் மாதவிலக்கு சீராகும். ஆண்களின் உயிரணு உற்பத்தி திறனை அதிகரிக்கும் அற்புத சக்தி இப்பழத்திற்கு உண்டு.
குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த பழத்தை உண்ண கூடாது.