1. மலச்சிக்கல் வாழைப்பழம் மலச்சிக்கலை சரிசெய்யும் என்பது நம்மில் பலரும் அறிந்த ஒன்றே மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் , வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் குடலின் இயக்கமானது சீராக இயங்க ஆரமிக்கும் , எனவே மலச்சிக்கல் பிரச்சனையானது விரைவாக சரியாகும். 2. ஆற்றல் பெருக்கு வாழைப்பழத்தில் சுக்ரோஸ் , குளுக்கோஸ், மற்றும் ஃபுருக்டோஸ் ஆகிய சத்துக்களானது மனித உடலுக்கு உடனடியாக ஆற்றலை பெருக்கும் சக்தி கொண்டது. 3. மூளை செயல்பாடு வாழைப்பழத்தில் பொட்டாசயிம் சத்து அதிக அளவில் உள்ளது , இதனை சாப்பிடுவதன் மூலம் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும். ஆகையால் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வருவதால் அன்றைய நாள் புத்துணர்ச்சியுடன் இயங்கும். 4. சிறுநீரக பிரச்சனை: வாழைப்பழத்தில் தேவைக்கு ஏற்ப புரோட்டீன் மற்றும் உப்பு உள்ளது. இவை சிறுநீரகத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை சரிசெய்யும் தன்மை உடையது. மூன்று நாட்கள் இடைவிடாது ஒரு நாளுக்கு 10 பழங்கள் வீதம் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும். 5. எடை குறைக்க: எடை குறைக்கும் எண்ணம் கொண்டவர்கள் டயட்டில் அன்றாடம் வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்வதன் மூலமாக எடைக்குறைப்பில் நல்ல பலனைப் பெறலாம். 6. இதய நோய்: உடலிலுள்ள நீர் செல்களை சீராக வைத்து ரத்த அழுத்தத்தை குறைப்பதன் மூலம் ரத்த அழுத்தம் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கும்.தினசரி வாழைப்பழம் சாப்பிட்டு வர பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவு. 7. ரத்த சோகை: வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்பு சத்துக்கள் உள்ளது. எனவே தினசரி வாழைப்பழம் சாப்பிட்டு வர ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ரத்த சோகை நீங்கும். 8. வயிற்றுக்கடுப்பு: நன்கு மசித்த வாழைப்பழத்தில் சிறிதளவு உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வர வயிற்று கடுப்பு உடனடியாக நிற்கும். 9.குடல் கோளாறு: தினமும் நன்கு கனிந்த வாழைப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலமாக குடலில் ஏற்படும் கோளாறுகள் நீங்கிவிடும். மேலும் குடலில் உள்ள புண்கள் குணமாகும். பிறகு செரிமான இயக்கம் இயல்பு நிலை திரும்பும்.