Weight-loss | ஜலதோஷம் | இருமல் | காய்ச்சல் | சர்க்கரை-நோய் | சளி | சுளுக்கு | தலைசுற்றல் | தலைவலி | நரம்பு-தளர்ச்சி | மஞ்சள்-காமாலை | கட்டிகள் | முகப்பரு | மூலம் | ஞாபக-சக்தி | தாய்ப்பால் | தீப்புண் | வாந்தி | காது-வலி | பல்-வலி | பித்தம் | மலச்சிக்கல் | நெஞ்சுவலி | மாதவிடாய் | வாயுத்-தொல்லை | மாலைக்கண் | முடி | ஆண்மை | ஆஸ்துமா | இடுப்பு | வயிறு | இரத்த-சோகை | கல்லீரல் | குடல் | சீதபேதி | மூட்டு | விக்கல் | வியர்வை | வீக்கம் | Fruit-facts | pregnancy-care | skin-care | vegetable | moolam | first-aid | paati-vaithiyam | aanmai | plant-facts | | Tamil Best Beauty tips site | Laddu muttai
1. குப்பைமேனி சாறு தடவ தலைவலி குணமாகும். 2. அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவ தலைவலி குணமாகும். 3. முள்ளங்கி சாறு சாப்பிட தலைவலி, இருமல் குணமாகும். 4. திருநீற்று பச்சிலை சாறு, தும்பை சாறு இரண்டையும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து மூக்கில் உறிஞ்ச மண்டையடி தீரும். தலைவலி பாரம் குணமாகும். 5. வெற்றிலை காம்பு, லவங்கம், ஆலரிசி சமஅளவு பால் கலந்து அரைத்து சூடாக்கி நெற்றி பொட்டில் உச்சந்தலையில் தடவ தலைவலி குணமாகும். 6. விரலி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி அகலும். 7. எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணெய் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றை தலைவலி போகும். 8. தேத்தாங் கொட்டையுடன், பச்சை கற்பூரத்தையும் சேர்த்து தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்றுபோட ஒற்றை தலைவலி குணமாகும். 9. மருக்கொழுந்து செடியின் பூவை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி தலைவலி உள்ள இடத்தில் வைத்துக் கட்டுப்போட உடனே தலைவலி நிற்கும். 10. மருதாணி இலையைப் பறித்து சுத்தம் செய்து தாய்ப்பால் விட்டு மைய அரைத்து நெற்றியில் பற்றுப்போட தலைவலி உடனே குணமாகும். 11. மிளகை மைய தேய்த்து எடுத்து அதை எலுமிச்சம் பழச் சாற்றில் நெற்றியில் பற்று போட தலைவலி குறையும். 12. குங்குமப்பூ வாங்கி வந்து தாய்ப்பால் விட்டு மைய உரைத்து நெற்றியில் பற்றுப்போட தலைவலி உடனே நிற்கும். 13. முற்றிய வெற்றிலையின் நுனி பகுதியை சிறிது எடுத்து நெற்றிப்பொட்டின் இருபுறமும் ஒட்டினால் தலைவலி குணமாகும். 14. எட்டிக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணெய் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றைத் தலைவலி குணமாகும். 15. நாட்டு வெங்காயம் இரண்டு, மூன்று மட்டும் பச்சையாகவே உரித்து சாப்பிட்டால் , கொண்டைக் கடலையை லேசா வறுத்து மென்று சாப்பிட்ட பின் பால் அருந்தி வர, தலைவலி, தலைபாரம், இருமல் தீரும். 16. பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு மழை மற்றும் குளிர் காலங்களில் ஏற்படும் ஜலதோஷம் காய்ச்சல் மற்றும் தலைவலி தீரும் 17. துளசி இலையை அரைத்து விழுதை நெற்றியில் பற்றுபோட தலைவலி குணமாகும். 18. துளசி இலைசாறு, வில்வ இலை சாறு வகைக்கு 100 மிலி எடுத்து, அத்துடன் 200 மிலி தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ச்சி, சாறு சுண்டியபின் இறக்கி வடிகட்டி தினசரி தலைக்கு தேய்த்து வர சைனஸ் & தலைவலி தொல்லை தீரும். 19. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் பயப்படாமல் உண்ணலாம் என்ற பழமொழிக்கு இணங்க ஒரு டம்ளர் பசும்பாலில் 10 மிளகை உடைத்துப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, இதனை இரவில் தூங்கப் போகிறதுக்கு முன்பே மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தாலே இருமல், தலைவலி உடனே போய்விடும் 20. எளிமையான மருந்து மிளகு ஊசியால் குத்தி தீயில் கட்டு அதனுடைய புகையை மூக்கு மூலம் உள்ளுக்கு இழுத்தாலே ஜலதோஷம், தலைவலி போய்விடும். 21. இஞ்சிச் சாறு 50 கிராம், நல்லெண்ணெய் 50 கிராம் எடுத்து ஒன்று சேர்த்துக் காய்ச்சி, சீசாவில் பத்திரப் படுத்திக் கொள்ளுங்கள். இந்த தைலத்தை நன்றாகத் தேய்த்து 20 நிமிடம் ஊறியதும், பயத்தமாவு & அரப்புத் தூள் தேய்த்து வெந்நீரில் குளித்தால் தலைவலி இந்தத் தைலம் குணப்படுத்தும்.
Laddu Muttai | 19-04-2020
1. சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகளை 5 கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை மாலை, 1/2 கரண்டி சாப்பிட்டு வர தலைசுற்றல் குணமாகும். 2. தலைசுற்றல் எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் ஒரு அவுன்ஸ் நெல்லிக்காய் சாறு குடித்த சிறிது நேரத்திலேயே குணம் கிடைக்கும். 3. பச்சை இஞ்சி சாறு, தேன் கலந்து தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டு வர தலைசுற்றல் குணமாகும்.
Laddu Muttai | 19-04-2020
1. வெள்ளை பூண்டு உப்பு சேர்த்து இடித்து சுளுக்கு பட்ட இடத்தில் தடவி வர சுளுக்கு குணமாகும். 2. புளிய இலையை அவித்து சூட்டுடன் சுளுக்கு உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும். அப்படியே கட்டவும். 3. மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு இம்மூன்றையும் வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடுசெய்து சுளுக்கு மீது பற்று போட சுளுக்கு உடல் குணமாகும். 4. புளி, உப்பு கரைத்து கொதிக்க வைத்து பின் இறக்கி ஆறிய உடன் பற்று போட வீக்கம், ரத்தக் கட்டு குணமாகும்.
Laddu Muttai | 19-04-2020

Tag : சளி |

1. சளி மூக்கடைப்பு தீர கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளி மூக்கடைப்பு குணமாகும். 2. மாதுளம் பழச் சாறு, எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் சளி தொல்லை குணமாகும். 3. முசுமுசுக்கை இலையை சாப்பிட்டு வர மழைக்காலங்களில் சளி இருமல் வராமல் தடுக்க முடியும். 4. கற்பூரவள்ளி இலையை சூடாக்கி நெற்றியில் பற்று போட்டால் சளி உடனே குணமாகும். 5. 1 கரண்டி இஞ்சிச்சாறு வெதுவெதுப்பான சூட்டில் குடித்தால் சளி வெளியாகி நுரையீரல் வலி குணமாகும். 6. அதிமதுரம் பொடி ஒரு கிராம் காலை, மாலை சர்க்கரை சேர்த்து உண்ண சளி, இருமல் தொண்டை வலி குணமாகும். 7. ஏலப்பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்பு சளி குணமாகும். 8. அருகம்புல் சாறு பருகி வர சளித்தொல்லை நீங்கும். 9. தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து சுடவைத்து நெஞ்சில் தடவ நெஞ்சு சளி குணமாகும். 10. சிறிது மிளகுத் தேனை சேர்த்து நெல்லிக்காய்ச்சாற்றில் சாப்பிட்டு வர சளி மற்றும் மூக்கடைப்பு நீங்கும். 11. புதிய ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கிவிடும். 12. நொச்சி இலையை தலையணைக்குள்ளே பரப்பி வைத்துத் தூங்கினாலே நிம்மதியான தூக்கம் வருவதுடன் தலைபாரம் இறங்கி, சளிப்பிரச்சனையும் விலகி விடும். 13. திப்பிலி ஒரு பங்கு & துளசி இலை 3 பங்கு என்ற அளவில் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட சளி அகலும் 14. மாசிக்காயை பொன் வறுவலாக வறுத்து, இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் ஒரு சிட்டிகை எடுத்து தேன் கலந்து சாப்பிட சளி அகலும். 15. தும்பை பூவுடன் மிளகு சேர்த்து தூளாக்கி காலை மாலை 2 நாட்கள் சாப்பிட சளி அகலும். 16. சூடான சுக்கு, மல்லி காப்பியில் சிறிது தேன் கலந்து குடிக்க சளி கரையும். 17. தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது 99 சதவீத தவறு. தயிரில் உள்ள "புரோபயோடிக் என்னும் சத்து குடலுக்கு மிக நல்லது. அலர்ஜி வராமல் தடுக்கும். 18. கற்பூரவள்ளி இலை சாறுடன் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி சாறு வற்றியதும் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மூக்கடைப்பு & (சைனஸ்) சளி தொந்தரவு அகலும். 19. தும்பை இலைச்சாற்றை மூக்கில் பிழிய சளி கரைந்து வெளிப்படும். உடலுக்கு ஊட்டம் தரும். 20. சூடான சுக்கு காப்பியில் சிறிது தேன் கலந்து குடித்தால் சளி முறிந்து மூக்கடைப்பு நீங்கும். 21. தூதுவளை 3 இலையை நெய் அல்லது வெண்ணெய் வதக்கி சாறு எடுத்து உள்ளுக்கு கொடுத்து வந்தால் நெஞ்சு சளி பட்டென்று விலகும். 22. சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம் சம அளவு எடுத்து பொன் வறுவலாக வறுத்து கரணம் பண்ணி அத்துடன் சரிரமமாக பனங்கற்கண்டு சேர்த்து காலை & மாலை 1 தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சளி மற்றும் ஆஸ்துமா சரியாகம். 23. பசு நெய்யில் ஏலக்காயை உடைத்து போட்டு காய்ச்சி ஆறிய பிறகு மூக்கில் நீர் வடிதல் மற்றும் சளித் தொந்தரவு அகலும்.
Laddu Muttai | 19-04-2020
1. கோவை பழம் தினசரி 1 சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படுத்தும். 2. தினசரி 5 ஆவாரம் பூ மென்று சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குணமாகும். 3. மாவிங்க இலையை அரைத்து உள்ளங்கால், உள்ளங்கைகளில் பற்றுபோட சர்க்கரை நோயில் காணப்படும் எரிச்சல் நீங்கும். 4. பாகற்காய் சாப்பிட குணமாகும். சிறுகுறிஞ்சான் இலை பொடி செய்து சாப்பிட சர்க்கரை நோய் குணமாகும். 5. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நெல்லிக்காய் பொடியை 1/2 கரண்டி தினசரி சாப்பிட்டு வர சர்க்கரை வியாதி கட்டுப்படும் அல்லது தினசரி 3 நெல்லிக்காய் சாப்பிடலாம். 6. வேப்பம் பூ, நெல்லிக்காய் பவுடர், துளசி பவுடர், நாவல் கொட்டை பவுடர் சேர்த்து தினசரி 12 ஸ்பூன் சாப்பிட்டு வர 3 மாதத்தில் நீரழிவு குணமாகும். 7. தினசரி காலை அல்லது இரவு இட்லியை உணவாக உட்கொண்டால் நீரிழிவு நோய் குணமாகும். இட்லியில் உள்ள உளுந்து சர்க்கரை நோய் குணப்படுத்தும் தன்மை உடையது. 8. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினசரி மூன்று நெல்லிக்காயைச் சாப்பிட்டு வர அதிலிருந்து விடுபடலாம். 9. வாழைப்பூ, வேக வைத்து அல்லது பொரியல் செய்து சாப்பிடுவதினால் அஜிரணம் நீரழிவு நோய் குணமாகும். 10. ஆவாரம்பூ, கருவேப்பிலை, நெல்லி சேர்த்து பருக நீரழிவு குணமாகும். 11. ஆவாரை வேர், கொன்றை வேர், நாவல்பட்டை, கோரை கிழங்கு, கோஷ்டம் சம அளவு இடித்து பொடி செய்து கஷாயம் செய்து குடிநீரில் கலந்து குடித்து வர நீரழிவு குணமாகும். 12. மரமஞ்சள் தூள் பொடி செய்து பாலுடன் கலந்து குடித்துவர நீரிழிவு, அரிப்பு நோய் குணமாகும். 13. மாமரத்தின் கொழுந்து இலைகளை, துவரம்பருப்புடன் சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரை குடித்தால் நீரழிவு கட்டுப்படும்.
Laddu Muttai | 19-04-2020
1. கோரைக்கிழங்கை கழுவி சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி குடித்தால் கடுங்காய்ச்சல் குணமாகும். 2. வேப்பிலையை வறுத்து சூட்டோடு தலைக்கு வைத்து தூங்கினால் காய்ச்சல் நீங்கும். நிம்மதியான தூக்கம் வரும். 3. மிளகு, சீரகம் சேர்த்து சாப்பிட்டுவந்தால் மலேரியாகாய்ச்சல் நீங்கும். 4. இத்தங்காய் செடி இலைகளை கஷாயம் செய்து குடிக்க காய்ச்சல் குணமாகும். 5. மிளகு, திப்பிலி, சுக்கு சம அளவு பொடி தேனில் சாப்பிட காய்ச்சல் குணமாகும். 6. எலுமிச்சம் பழச்சாறு தேன் கலந்து 100 மில்லி சாப்பிட்டு வந்தால் மலேரியாகாய்ச்சல் குணமாகும். 7. வல்லாரை இலை, உத்தாமனி இலை, மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுக்க காய்ச்சல் குணமாகும். 8. வேலிபருத்தி செடியின் இலையை அரைத்து 2 தேக்கரண்டி சாறு எடுத்து சமஅளவு தேனுடன் கலந்து காய்ச்சல் வரும் போது கொடுக்க குளிர் காய்ச்சல் குணம் ஆகும். 9. கோரை கிழங்கை காய்ச்சி கஷாயம் குடித்தால் எப்படி பட்ட காய்ச்சலும் குணமாகும். 10. அரச இலை கொழுந்தை பசும் பாலில் போட்டு காய்ச்சி சர்க்கரை சேர்த்து குடிக்க காய்ச்சல் குணமாகும். 11. ஈர பசையுடன் உள்ள முற்றிய வேப்ப மரத்தின் போட்டு இடித்து 1/4 பங்கு குணமாகும். பட்டையை உரலில் சீரக பொடி கலந்து பசும்பாலில் சாப்பிட குணமாகும். 12. நாய்த்துளசி வேருடன் பிடுங்கி வந்து நீரில் போட்டு கஷாயமாக காய்ச்சி குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும். 13. நெய், தேன். வேப்ப இலை இம்மூன்றையும் எடுத்து ஒன்றாக கலந்து புகை மூட்டம் போட்டால் காய்ச்சல் உடனே நிற்கும். 14. தண்ணீரைக் கொதிக்க வைத்து வெண் நொச்சி இலைகளை போட்டு நீராவி பிடிக்க வியர்வை வெளியேறும். சிறிது நேரத்தில் காய்ச்சல் காய்ச்சல் நிற்கும். 15. வில்வ இலையை நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை குடித்தால் வாதக் காய்ச்சல் குணமாகும்.
Laddu Muttai | 19-04-2020
1. எலுமிச்சம் பழச்சாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும். 2. கடுக்காய், சித்தரத்தை இரண்டையும் சிவக்க வறுத்து பொடி செய்து வாயில் போட்டு அடக்கி கொண்டால் வரட்டு இருமல் குணமாகும் . 3.கருவேல மரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குறையும். 4.மிளகு, திப்பிலி, சுக்கு சம அளவு, பொடி செய்து 2 கிராம் தேனில் கலந்து 3 வேளை சாப்பிட இருமல், தொண்டை வலி குணமாகும். 5.கடுக்காய் தோலை சுட்டு ஒரு துண்டை வாயில் அடக்கி கொண்டிருந்தால் வறட்டு இருமல் குணமாகும். 6.குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமல் குணமாக கண்டங்கத்திரி வேரை மைய அரைத்து வெள்ளாட்டுப் பாலில் காய்ச்சி கொடுக்க தொடர் இருமல் உடனே நிற்கும். 7. விஷ்ணு கிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இளைப்பு, இருமல் குணமாகும். 8. வெந்தயக்கீரையை வாங்கி சமைத்துச் சாப்பிட்டுவர இருமல் உடனே குறையும். 9. படிகாரத்தைப் பொடித்து அலுமினியப்பாத்திரத்தில் வைத்துக்கொண்டு தினசரி குன்றிமணி அளவு மூன்று முறை சாப்பிட்டு வர கக்குவான் இருமல் குணமாகும். 10. இருமல் நிற்க முற்றிய வெண்டைக்காய் சூப் செய்து குடித்துவந்தால் இருமல் உடனே நிற்கும். 11. கணை இருமல் இருக்கும் குழந்தைகளுக்கு துளசி இலையை இடித்து சாறு எடுத்து இரண்டு ஸ்பூன் கொடுத்தால் கணை இருமல் குணமாகும். 12. சோடா உப்பை தண்ணீரில் கலந்து குடிக்கக் கொடுத்தால் இருமல் வேகம் குறையும். 13. காலையில் ஏற்படும் இருமலுக்கு, கடுகை மைய இடித்து தூள் செய்து வைத்துக் கொண்டு இருமல் இருக்கும் போது ஒரு சிட்டிகைத் தூளுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட இருமல் குறைந்து நிவாரணம் கிடைக்கும். 14. மஞ்சள் தூளுடன் சிறிது மிளகை தூள் செய்து சேர்த்து இந்த இரண்டையும் காய்ச்சி பசும்பாலில் சேர்த்து இனிப்புக்கு பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட இருமல் குணமாகும்.
Laddu Muttai | 19-04-2020