Weight-loss | ஜலதோஷம் | இருமல் | காய்ச்சல் | சர்க்கரை-நோய் | சளி | சுளுக்கு | தலைசுற்றல் | தலைவலி | நரம்பு-தளர்ச்சி | மஞ்சள்-காமாலை | கட்டிகள் | முகப்பரு | மூலம் | ஞாபக-சக்தி | தாய்ப்பால் | தீப்புண் | வாந்தி | காது-வலி | பல்-வலி | பித்தம் | மலச்சிக்கல் | நெஞ்சுவலி | மாதவிடாய் | வாயுத்-தொல்லை | மாலைக்கண் | முடி | ஆண்மை | ஆஸ்துமா | இடுப்பு | வயிறு | இரத்த-சோகை | கல்லீரல் | குடல் | சீதபேதி | மூட்டு | விக்கல் | வியர்வை | வீக்கம் | Fruit-facts | pregnancy-care | skin-care | vegetable | moolam | first-aid | paati-vaithiyam | aanmai | plant-facts | | Tamil Best Beauty tips site | Laddu muttai
1. தாய்மார்கள் அன்றாடம் உணவு பதார்த்தத்துடன் பப்பாளி சேர்த்து சமைத்துச் சாபிட்டுவர தாய்ப்பால் அதிகம் சுரக்கும். 2. சீரகத்தை வறுத்து பொடியாக்கி சம அளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும். 3. முருங்கை கீரை சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும். 4. இளம்பிஞ்சு நூல்கோலை சமைத்து சாப்பிட பால் நன்றாக சுரக்கும். 5. அஸ்வகந்தா செடியின் இலைகளை கஷாயம் செய்து குடிக்க அதிகமான பால் கறக்கும். 6. குழந்தை பிறப்பதற்கு முன்னும், குழந்தை பிறந்த பின்னும் பேரிச்சம்பழம் சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் குழந்தையும் நன்கு வளரும். 7. கேழ்வரகு மாவு, எள்ளு சிறிது வெல்லம் சேர்த்து இடித்து அடை செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு வேண்டிய தாய்ப்பால் சுரக்கும். 8. பாகற்காயின் இலையை அரைத்து, மார்பகங்களின் மேல் பற்று போட பால் சுரக்கும். 9. ஒரு லிட்டர் தண்ணீரில் சந்திரவள்ளிக்கிழங்கைப் போட்டு கொதிக்க வைத்து அந்த நீருடன் சுத்தமான பசும்பால் கலந்து சிறிது கற்கண்டையும் சேர்த்து சாப்பிட்டு வர தாய்ப்பால் அதிகரிக்கும். 10. அம்மான் பச்சரிசி கீரையின் பூக்களை 40 கிராம் எடுத்து சுத்தம் செய்து மைய அரைத்து பாலுடன் கலந்து குடித்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். 11. தாய்ப்பால் சுரக்க ஆலமரத்தின் விதையையும் ஆலமரத்தின் கொழுந்து இலையையும் அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட தாய்ப்பால் அதிகமாகும்.
Laddu Muttai | 19-04-2020
1. தினமும் காலையில் சாப்பிட்டவுடன் வெந்நீரில் தேன் கலந்து குடித்து வர ஞாபக சக்தி அதிகமாகும். 2. வல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம் பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட ஞாபக சக்தி பெருகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். 3. மாதுளம் பழம் சாப்பிட்டு வர அறிவு விருத்தி, ஞாபகசக்தி, எலும்பு வளர்ச்சி, பற்கள் உறுதி, பித்த சம்பந்தமான வியாதி நீங்கும். 4. பாதாம் பருப்பு வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி இவைகளை தினமும் சாப்பிட ஞாபக சக்தி பெருகும். 5. பப்பாளிப்பழத்தை தினசரி சிறு அளவு சாப்பிட்டு வர ஞாபக சக்தி பெருகும். 6. மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி பெருகும். 7. வல்லாரை மூலிகை சாப்பிட்டு வர, நினைவாற்றல் அதிகரிக்கும்.
Laddu Muttai | 19-04-2020
1. வயிற்று கடுப்பு நீங்க அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்றுக் கடுப்பு குணமாகும். 2. பப்பாளிப் பழத்தை வெட்டி மாம்பழத்தையும் வெட்டி தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும். 3. பப்பாளி பழம் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கி மூலத்தை குணப்படுத்தும். 4. சுக்கு மிளகு, கடுக்காய், வெள்ளைப்பூண்டு, பிரண்டை கற்றாளை வேர், நீர்முள்ளி சமஅளவு எடுத்து அரைத்து புளித்த மோரில் குடித்தால் உள் மூலம் குணமாகும். 5. ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி அருகம்புல் வேர் எடுத்து உலர்த்தி பொடிசெய்து ஒரு ஸ்பூன் அளவு பசு நெய்யுடன் சாப்பிட்டு வர மூலம் குணமாகும். 6. மூலத்திற்கு பருப்புடன், துத்தி இலையும் வேக வைத்து சாப்பிட மூலம் குணமாகும். 7. மூலச்சூடு குறைய ரோஜா பூவை வைத்து சர்பத் தயாரித்து விற்கப்படுகின்றது. அதை நாம் குடித்து வர மூலச்சூடு நிவாரணம் கிடைக்கும். 8. காட்டுத் துளசியின் விதைகளை காய வைத்து இடித்து தூள் செய்து அரை டீஸ்பூன் தூளை பாலுடன் கலந்து குடித்தால் உள்புறம் உள்ள மூலம் குணமாகும். 9. துத்திக்கீரையை சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் பசும்பாலோடு சேர்த்து சாப்பிட மூல நோய் குணமாகும். 10. மூலநோய் இரத்தம் வெளியேறுவது நிறுத்த மாதுளம் பழத் தோலை நீரில் ஊறவைத்து அந்த நீரை வெளியே போன பின் கால் கழுவ மூலத்தின் வாய் இந்நீரால் கழுவப்பட்டு புண் குணமாகி இரத்தப்போக்கு நின்று விடும். 11. கருணை கிழங்கு சிறுதுண்டுகளாக நறுக்கி துவரம்பருப்புடன் சேர்த்து சாம்பார் சாப்பிட்டு வர மூலம் குணமாகும் 12. அருகம்புல் வேர் சேர்த்து அரைத்து பசும்பாலில் சாப்பிட்டு வந்ததால் இரத்தமூலம் அகலும். மூலக்கடுப்பு உஷ்ணம் விலகும். 13. தும்பை வேர், வேலை இலை வெங்காயம் சேர்த்து அரைத்து கட்ட மூலம் பவுத்திரம் குணமாகும். 14. வாழை பூ சாறு, கடுக்காய் பொடி சேர்த்து சாப்பிட்டு வர மூல நோய் குணமாகும். 15. திப்பிலி, சுக்கு, எள் மூன்றையும் சம அளவு எடுத்து மைய இடித்து தூள் செய்து ஒரு நாளைக்கு மூன்று முறை தேனுடன் சாப்பிட்டு வர மூல நோய் குணமாகும். 16. புங்கம் பட்டையை கஷாயமாக்கி குடிக்க மூலம் குணமாகும். சிறந்தமருந்து. 17. பசும்பால் 400, பசு நெய் 50, வெங்காய சாறு 100 மில்லி, அதிமதுரம் 20 கிராம் பொடி, அடுப்பில் வைத்து காய்ச்சி நல்ல பதத்தில் இறக்கி வைத்து இதனை நாள்தோறும் ஒரு வேளை 1 கரண்டி வீதம் 10 தினங்கள் சாப்பிட வேண்டும். 18. சிவதை, கருமச்சிவாதை, திப்பிலி, நேபாளம் ஆகியவற்றை வறுத்து பட்டுபோல் பொடி செய்து ஆசனவாயில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும். 19. மணத்தக்காளி கீரையும், வெங்காயத்தையும் தினசரி உணவில் சேர்த்து வந்தால் மூலச் சூட்டைத் தணிக்கும். 20. காட்டாமணக்கு இலையை நீர் விட்டு மைய அரைத்து ஆசன வாயில் தடவ மூலம் சிறிது நாளில் உள் மூலம் குணமாகும்.
Laddu Muttai | 19-04-2020
1. முதலில் முகத்தில் இருக்கின்ற செபாஷியஸ் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் முகத்தோல் மீது சீபம்- என்னும் படிவதால் பலவிதமான கசிவு மாற்றங்களுக்கு உட்பட்டு அவை முகப்பருவாக மாறுகிறது. 2. முகப்பரு இருந்தால் உடனே கிள்ளி எறிந்து விட விரல்கள் முயற்சிக்கும். கிள்ளினால் பெரும் விளைவுகள் உண்டாகும். 3. முதலில் புதினா இலைகளை அரைத்து தடவுங்கள் வேப்பிலை பொடியுடன் மஞ்சள் தூள், சந்தனம் சேர்த்து நீர்விட்டு குழைத்து பருக்கள் மீது பூசி வரலாம். 4. வேப்பிலை பொடி, புதினா பொடி, துளசி பொடி இவைகளை தலா 10 கிராம் அளவு எடுத்துக் கொண்டு மிதமான சுடுதண்ணீரில் மேற்கண்ட பொடிகளை சந்தனம் போல் இழைத்து முகத்தில் தடவவும். கண்களுக்கு அடியில் கண்டிப்பாக தடவக் கூடாது. 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடவும். தொடர்ந்து 4 அல்லது 5 நாட்கள் செய்தால் பருக்கள் மறையும். 5. அருகம்புல் பொடி, குப்பை மேனி இலைப்பொடி இரண்டையும் சம அளவு பருக்களின் மேல் மருந்து போல் இரவில் போட்டு, காலை அலம்புங்கள். தொடர்ந்து 2, 3 நாட்கள் செய்தால் பரு மறையும். 6. அருகம்புல் சாற்றுடன் சிறிதளவு பன்னீர், பப்பாளிப்பழம் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி, உலர்ந்தவுடன் கழுவி வர வெயிலால் ஏற்பட்ட கருமை அகன்று முகம் பளபளப்பாகும்.மேற்படி கூறிய கலவையை அரைத்து வடிகட்டி பருகிவர சிறுநீரக நோய்கள் குணமாவதுடன், உடலும், முகமும் அழகு பெறும். 7. ஊமத்தம் பூவை கசக்கி பருக்களின் மீது பற்று போடலாம். எலுமிச்சம் இலைகளை மட்டும் அரைத்து பூசலாம். 8. ஜாதிக்காய், சந்தனம், மிளகு இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசினால் பருத்தொல்லை போகும். 9. தேன் மெழுகையும், சர்க்கரையும் சேர்த்து குழைத்து அதை முகப் பருக்கள் மீது இட்டுவர விரைவில் அவை மறைந்து விடும். 10. வாரம் ஒன்றிரண்டு நாட்கள் அகத்திக் கீரையை உணவில் சேர்த்து வந்தாலும், தினசரி ஒரு துண்டு பப்பாளி பழம் சாப்பிட்டாலும் முகம் வசீகரம் அடைந்து பரு தொல்லைகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். 11. துளசி 4 இலை, வேப்பந்தளிர், கடலை மாவு ஒரு தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு அரை தேக்கரண்டி கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை பருக்களின் மீது போட்டு 5 நிமிடம் கழித்து மிதமான சுடு தண்ணீரில் கழுவுங்கள். தோல் மிருதுவாகி பருக்கள் மறையும். 12. நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் நல்லெண்ணெய் சேர்த்து பருக்களின் மீது தடவலாம். 13. வெள்ளை பூண்டையும், துத்தி இலையையும் நறுக்கி நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி பத்திரப்படுத்தி கொள்ளவும். தினசரி பருமீது தடவி வரவும். முகப்பரு நீங்கும். 14. துத்தி இலையை அரைத்து காடியில் கரைத்து முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பரு நீங்கும். 15. புதினா இலையை மைபோல் அரைத்து தினமும் இரவு படுக்க போகும் போது முகத்தில் தடவி காலையில் முகம் கழுவ பருக்கள் நீங்கி விடும். 16. மஞ்சள், சந்தனம் வகை, புளியாரை செடி, நீரையும் சேர்த்து அரைத்து பூச முகப்பரு மறைந்து போகும். 17. மரப்பாய்ச்சியை நீர் விட்டு கல்லில் உடைத்து அதை பருவின் மீது தடவ முகப்பரு குணமாகும். 18. சாதிக்காய், சந்தனம், மிளகு இம்மூன்றையும் மைய அரைத்து தடவி வர முகப்பரு குணமாகும். 19. கடற்சங்கைக் கொண்டு வந்து பசும்பால் விட்டு மைய அரைத்து எடுத்து பருக்கள் மீது தடவ இரண்டு நாட்களில் பருக்கள் மறையும்.
Laddu Muttai | 19-04-2020
1. சப்பாத்திப்பூ இலையை சுத்தம் செய்து கட்டிகளின் மீது போட கட்டி உடைந்து குணமாகும். 2. கிரந்தி நாயகம் என்ற செடியின் இலையை அரைத்து கட்டியின் மீது கட்டி அல்லது பூசிவரும். கட்டி பழுத்து உடையும். 3. துத்தி இலையை நல்லெண்ணையில் தடவி வாட்டி பொறுக்கும் சூட்டில் கட்டி மேல் ஒட்டும்படி வைத்து கட்டவும். கட்டி பழுத்து உடையும். 4. சப்பாத்தி கள்ளி பூக்கள் இலையை நசுக்கி கட்டியின் மீது கட்டு போட உடைந்து விடும். 5. உடலில் கட்டிகள் உள்ள இடத்தில் எருக்கம்பாலை தடவி வந்தால் கட்டிகள் உடன் ஆறும். 6. சோப்பு, மஞ்சள், உப்பு இம்மூன்றையும் மைய அரைத்து கட்டிகள் மீது போட்டு ஒரு சிறிய துணி ஒன்றைச் சதுரமாகக் கிழித்து அதன் மீது போட்டு 8 மணி நேரம் கழித்து எடுத்தால் கட்டி உடைந்து விடும். 7. அந்தி மந்தாரை இலையின் மீது விளக்கெண்ணெய் தடவி அனலில் சூடுகாட்டி கட்டிகள் மீது வைத்து கட்ட கட்டி குணமாகும். 8. பச்சரிசி மாவை நீர்விட்டு அதனுடன் சிறிது மஞ்சளையும் போட்டு மைய அரைத்து சூடு ஏற்றி சூடு தாங்கும் அளவு எடுத்து கட்டிகளின் மீது வைத்துக் கட்ட கட்டிகள் குணமாகும். 9. எந்த வகையான கட்டியானாலும் பழுத்து உடைய எருக்கன் செடியின் பின்புறம் விளக்கெண்ணெய் தடவி தணலில் காப்பு கட்டி மேல் வைத்து கட்டினால், கட்டி பழுத்து உடையும்.
Laddu Muttai | 19-04-2020
1. கீழாநெல்லி செடி முழுவதும் அரைத்து மோரில் காலை, மாலை குடிக்க மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 2. தும்பை இலைகளை அரைத்து தலையில் பற்று போட்டு மோரில் கலந்து 3 நாட்கள் சாப்பிட மஞ்சள் காமாலை குணமாகும். 3. சுரைக்காய் பச்சடி செய்து சாப்பிட்டால் கண்குளிர்ச்சி பெறும். மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 4. கீழாநெல்லி, கரிசலாங்கன்னி இலை, தும்பை இலை சம அளவு கலந்து 10 நாள் சாப்பிட மஞ்சள் காமாலை குணமாகும். 5. வேப்பங்கொழுந்து இலையை நிழலில் உலர்த்தி, 1/2 பங்கு உப்பு, ஓமம் வறுத்து பொடி செய்து சேர்த்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும். 6. கையாந்தரை, தும்பை, அம்மான் பச்சரிசி, தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். 7. பழுத்த வாழைப்பழத்தின் தோல் மீது சுண்ணாம்பு தடவி இரவு முழுவதும் பனியில் வைத்து காலையில் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை 1 வாரத்தில் குணமாகும். 8. கீழாநெல்லி செடியை கழுவி சுத்தம் செய்து அப்படியே மைய அரைத்து மோருடன் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை 2 நாளில் குணமாகும். 9. கரிசலாங்கண்ணி இலை, 9 மிளகு சேர்த்து அரைத்து காலை, மாலை தேனில் கலந்து சாப்பிட குணமாகும்.
Laddu Muttai | 19-04-2020
1. தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும். 2. அத்தி பழத்தை ஒரு நாளைக்கு 5 பழம் வீதம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும். 3. மாதுளம் பழச்சாறு, தேன் கலந்து தொடர்ந்து 41 நாட்கள் உட்கொள்ள நரம்பு தளர்ச்சி சரியாகும். 4. நரம்பு தளர்ச்சி மிளகு, திப்பிலி, சுக்கு சம அளவு பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட நரம்பு தளர்ச்சி குணமாகும். 5. வெங்காயத்தை சிறுதுண்டுகளாக நறுக்கி சிறிது பனங்கல் கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி நீங்கும். 6. நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் அடிக்கடி நூல் கோவை சாப்பிட்டுவர நரம்பு தளர்ச்சி நீங்கும். 7. நெய்யில் வெள்ளை வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும். 8. அத்திப்பழத்தை சுத்தம் செய்து ஒரு நாளைக்கு இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும். 9. அடிக்கடி மாம்பழத்தைச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். 10. தக்காளி பழத்தை உணவில் அதிகம் வேர்த்து நரம்புத் தளர்ச்சி போக்கலாம். 11. வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி சிறு பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்புத்தளர்ச்சி நீங்கும்.
Laddu Muttai | 19-04-2020