Search for

மஞ்சள்-காமாலை

Awesome Image
1. கீழாநெல்லி செடி முழுவதும் அரைத்து மோரில் காலை, மாலை குடிக்க மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 2. தும்பை இலைகளை அரைத்து தலையில் பற்று போட்டு மோரில் கலந்து 3 நாட்கள் சாப்பிட மஞ்சள் காமாலை குணமாகும். 3. சுரைக்காய் பச்சடி செய்து சாப்பிட்டால் கண்குளிர்ச்சி பெறும். மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 4. கீழாநெல்லி, கரிசலாங்கன்னி இலை, தும்பை இலை சம அளவு கலந்து 10 நாள் சாப்பிட மஞ்சள் காமாலை குணமாகும். 5. வேப்பங்கொழுந்து இலையை நிழலில் உலர்த்தி, 1/2 பங்கு உப்பு, ஓமம் வறுத்து பொடி செய்து சேர்த்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும். 6. கையாந்தரை, தும்பை, அம்மான் பச்சரிசி, தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். 7. பழுத்த வாழைப்பழத்தின் தோல் மீது சுண்ணாம்பு தடவி இரவு முழுவதும் பனியில் வைத்து காலையில் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை 1 வாரத்தில் குணமாகும். 8. கீழாநெல்லி செடியை கழுவி சுத்தம் செய்து அப்படியே மைய அரைத்து மோருடன் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை 2 நாளில் குணமாகும். 9. கரிசலாங்கண்ணி இலை, 9 மிளகு சேர்த்து அரைத்து காலை, மாலை தேனில் கலந்து சாப்பிட குணமாகும்.
Laddu Muttai | 19-04-2020