Search for

முகப்பரு

Awesome Image
1. முதலில் முகத்தில் இருக்கின்ற செபாஷியஸ் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் முகத்தோல் மீது சீபம்- என்னும் படிவதால் பலவிதமான கசிவு மாற்றங்களுக்கு உட்பட்டு அவை முகப்பருவாக மாறுகிறது. 2. முகப்பரு இருந்தால் உடனே கிள்ளி எறிந்து விட விரல்கள் முயற்சிக்கும். கிள்ளினால் பெரும் விளைவுகள் உண்டாகும். 3. முதலில் புதினா இலைகளை அரைத்து தடவுங்கள் வேப்பிலை பொடியுடன் மஞ்சள் தூள், சந்தனம் சேர்த்து நீர்விட்டு குழைத்து பருக்கள் மீது பூசி வரலாம். 4. வேப்பிலை பொடி, புதினா பொடி, துளசி பொடி இவைகளை தலா 10 கிராம் அளவு எடுத்துக் கொண்டு மிதமான சுடுதண்ணீரில் மேற்கண்ட பொடிகளை சந்தனம் போல் இழைத்து முகத்தில் தடவவும். கண்களுக்கு அடியில் கண்டிப்பாக தடவக் கூடாது. 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடவும். தொடர்ந்து 4 அல்லது 5 நாட்கள் செய்தால் பருக்கள் மறையும். 5. அருகம்புல் பொடி, குப்பை மேனி இலைப்பொடி இரண்டையும் சம அளவு பருக்களின் மேல் மருந்து போல் இரவில் போட்டு, காலை அலம்புங்கள். தொடர்ந்து 2, 3 நாட்கள் செய்தால் பரு மறையும். 6. அருகம்புல் சாற்றுடன் சிறிதளவு பன்னீர், பப்பாளிப்பழம் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி, உலர்ந்தவுடன் கழுவி வர வெயிலால் ஏற்பட்ட கருமை அகன்று முகம் பளபளப்பாகும்.மேற்படி கூறிய கலவையை அரைத்து வடிகட்டி பருகிவர சிறுநீரக நோய்கள் குணமாவதுடன், உடலும், முகமும் அழகு பெறும். 7. ஊமத்தம் பூவை கசக்கி பருக்களின் மீது பற்று போடலாம். எலுமிச்சம் இலைகளை மட்டும் அரைத்து பூசலாம். 8. ஜாதிக்காய், சந்தனம், மிளகு இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசினால் பருத்தொல்லை போகும். 9. தேன் மெழுகையும், சர்க்கரையும் சேர்த்து குழைத்து அதை முகப் பருக்கள் மீது இட்டுவர விரைவில் அவை மறைந்து விடும். 10. வாரம் ஒன்றிரண்டு நாட்கள் அகத்திக் கீரையை உணவில் சேர்த்து வந்தாலும், தினசரி ஒரு துண்டு பப்பாளி பழம் சாப்பிட்டாலும் முகம் வசீகரம் அடைந்து பரு தொல்லைகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். 11. துளசி 4 இலை, வேப்பந்தளிர், கடலை மாவு ஒரு தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு அரை தேக்கரண்டி கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை பருக்களின் மீது போட்டு 5 நிமிடம் கழித்து மிதமான சுடு தண்ணீரில் கழுவுங்கள். தோல் மிருதுவாகி பருக்கள் மறையும். 12. நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் நல்லெண்ணெய் சேர்த்து பருக்களின் மீது தடவலாம். 13. வெள்ளை பூண்டையும், துத்தி இலையையும் நறுக்கி நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி பத்திரப்படுத்தி கொள்ளவும். தினசரி பருமீது தடவி வரவும். முகப்பரு நீங்கும். 14. துத்தி இலையை அரைத்து காடியில் கரைத்து முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பரு நீங்கும். 15. புதினா இலையை மைபோல் அரைத்து தினமும் இரவு படுக்க போகும் போது முகத்தில் தடவி காலையில் முகம் கழுவ பருக்கள் நீங்கி விடும். 16. மஞ்சள், சந்தனம் வகை, புளியாரை செடி, நீரையும் சேர்த்து அரைத்து பூச முகப்பரு மறைந்து போகும். 17. மரப்பாய்ச்சியை நீர் விட்டு கல்லில் உடைத்து அதை பருவின் மீது தடவ முகப்பரு குணமாகும். 18. சாதிக்காய், சந்தனம், மிளகு இம்மூன்றையும் மைய அரைத்து தடவி வர முகப்பரு குணமாகும். 19. கடற்சங்கைக் கொண்டு வந்து பசும்பால் விட்டு மைய அரைத்து எடுத்து பருக்கள் மீது தடவ இரண்டு நாட்களில் பருக்கள் மறையும்.
Laddu Muttai | 19-04-2020