Weight-loss | ஜலதோஷம் | இருமல் | காய்ச்சல் | சர்க்கரை-நோய் | சளி | சுளுக்கு | தலைசுற்றல் | தலைவலி | நரம்பு-தளர்ச்சி | மஞ்சள்-காமாலை | கட்டிகள் | முகப்பரு | மூலம் | ஞாபக-சக்தி | தாய்ப்பால் | தீப்புண் | வாந்தி | காது-வலி | பல்-வலி | பித்தம் | மலச்சிக்கல் | நெஞ்சுவலி | மாதவிடாய் | வாயுத்-தொல்லை | மாலைக்கண் | முடி | ஆண்மை | ஆஸ்துமா | இடுப்பு | வயிறு | இரத்த-சோகை | கல்லீரல் | குடல் | சீதபேதி | மூட்டு | விக்கல் | வியர்வை | வீக்கம் | Fruit-facts | pregnancy-care | skin-care | vegetable | moolam | first-aid | paati-vaithiyam | aanmai | plant-facts | | Tamil Best Beauty tips site | Laddu muttai
vellarikai-payangal-in-tamil

Tag : vegetable |

வெள்ளரிக்காயானது மனித உடம்பிற்கு குளிர்ச்சியும், புத்துணர்வும் அளிக்கக் கூடிய ஒன்றாகும். உடல் ஆரோக்கியம் பராமரிப்பதற்கு தேவையான அனைத்து மூலங்களும் வெள்ளரிக்காயில் உள்ளது.கேரட்டை போலவே வெள்ளரிக் காயையும் தோலை சீவாமல் தான் சாப்பிடவேண்டும். ஏனெனில் அதன் தோலுக்கு நெருக்கமாக தான் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. வெள்ளரிக்காய் ஆனது பொதுவாகவே மனித உடலில் ஏற்படும் பிணிகளுக்கு மருந்தாக உள்ளது. வெள்ளரியை எப்பொழுதும் சமைத்து சாப்பிடக்கூடாது சமைக்காமல் சாப்பிட்டால் தான் அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் கிடைக்கும். வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள் * மலச்சிக்கல் சரி செய்யும் * வயிற்றுக் கோளாறுகளைப் போக்கும் * கீல்வாதம் சரிசெய்யும் * சிறுநீர் உபாதைகளை போக்கும் * காலரா தாக வறட்சியைப் போக்கும் * சரும கொப்பளங்களை சரிசெய்யும் * அழகு சாதனமாக பயன்படும்
Laddu Muttai | 10-06-2020
carrot-nanmaigal-in-tamil

Tag : vegetable |

கேரட்டை எப்பொழுதும் தோல்சீவி உபயோகிக்க கூடாது ஏனென்றால் கேரட்டின் தோலுக்கு நெருக்கமாக தான் உடலுக்கு சத்து தரும் தாதுக்கள் உள்ளன.கண்பார்வைக்கு இன்றியமையாததாக இருக்கிறது மேலும் வறட்சியான சருமம், கடினமான சருமங்கள் இல்லாமல் இருக்க கேரட் பயன்படுகிறது. கேரட் ஆனது இரத்தத்தை சுத்தப்படுத்தி நமக்கு புத்துணர்வு ஊட்டும். உடம்பில் உள்ள காரம் மற்றும் இதர அமிலங்கள் சமமான நிலையில் இருப்பதற்கு இது உதவுகிறது. உடலில் எந்தப் பகுதியில் இருக்கும் சளிப் படலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க கேரட் முக்கியப் பங்காற்றுகிறது. கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள் * பற்சிதைவு * ஜீரணக் கோளாறு * மலச்சிக்கல் * வயிற்றுப்போக்கு
Laddu Muttai | 10-06-2020
muttaikos-nanmaigal-in-tamil

Tag : vegetable |

முட்டைக்கோஸ் சாப்பிடுவதன் மூலம் வயிறு மற்றும் குடல் பாதையை சுத்தப்படுத்தப்படும். முட்டைக்கோசை சமைத்து சாப்பிடாமல் பச்சையாகவோ அல்லது சாறுபிழிந்து சாப்பிடும்பொழுது மட்டுமே இது சாத்தியமாகும். இதை அதிகப்படியான எண்ணிக்கையில் சாப்பிடுவதால் குரல்வளையில் வீக்கம் ஏற்படும் அளவாக சாப்பிடும் பொழுது மட்டுமே மேற்கண்ட பலனை நமக்கு அளிக்கும். முட்டைக்கோஸ் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் * மலச்சிக்கல் * வயிற்றுப்புண் * உடல் பருமன் * சரும கோளாறுகள்
Laddu Muttai | 10-06-2020
paagarkai-nanmaigal-in-tamil

Tag : vegetable |

பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் உடம்பிற்கு குளிர்ச்சி தரும் .மேலும் பாகற்காய் ஆனது சிறந்த மலமிளக்கியாக செயல்படும் . எப்பொழுதும் பசியை தூண்டும் காரணியாக பாகற்காய் உள்ளது .பித்த உபாதைகளை அறவே நீக்கும். பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் * நீரிழிவு நோய் * மூலம் * ரத்தம் சம்பந்தமான கோளாறுகள் * சுவாச கோளாறுகள்
Laddu Muttai | 10-06-2020
beetroot-nanmaigal-in-tamil

Tag : vegetable |

ரத்தத்தை உற்பத்தி செய்யும் திறனானது பீட்ரூட்டிற்க்கு உண்டு. உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மற்றும் ரத்தசோகையைத் தடுக்க பீட்ரூட் பயன்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள அயர்ன் சத்து காரணமாக புதிதாக ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக உறுதுணையாக உள்ளது. மேலும் உடம்பிற்கு பிராணவாயு புதிதாக கிடைக்க பீட்ரூட் வழிவகை செய்கிறது. பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் மருத்துவ பயன்கள் * ஜீரணக் கோளாறு * இரத்தத்தை விருத்தி செய்தல் * மலச்சிக்கல் மற்றும் மூலம் * சிறுநீரக பித்தப்பை கோளாறுகள் * சரும கோளாறு * பொடுகு
Laddu Muttai | 10-06-2020
karpam-diet-plans
கர்ப்பகாலத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களை ஆதரிக்க உடல் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியத்தை கொண்டிருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் குழந்தைக்கும் தங்களுக்கு தேவையான கலோரி வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உட்கொள்ளுவதை அதிகரிக்க வேண்டும்.கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் முக்கியமான சத்துக்களில் ஒன்று இந்த இரும்புச்சத்து இவை குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் அதுமட்டுமல்லாமல் கர்ப்ப காலத்தில் ஏற்படுகின்ற உடல் மாற்றங்களை ஆதரிக்க உங்கள் உடல் தேவையான சத்துக்களை கொண்டிருக்க இவை உதவுகின்றன. இந்த இரும்பு சத்தை உணவின் மூலம் மட்டுமே நீங்க அதிகரிக்க முடியும். இது உடலில் ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. இந்த சத்து உடலில் குறைவாக உள்ள போது ரத்தசோகை ஏற்படுகிறது இதனால் உடல் களைப்பாக பலவீனமாகவும் கர்ப்பிணி பெண்ணிற்கு மாறிவிடுகிறது. இரும்புசத்து இல்லாத போது உடலுக்கு தேவையான பிராணவாயு உடலை சென்றடைவதில்லை இதனால் குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில்லை. மேலும் இந்த சத்து உடலில் இல்லாத போது குழந்தைக்கும் தாய்க்கும் ஆபத்தை ஏற்படுத்துவதோடு குறை பிரசவத்திற்கு ஆளாகி விடுகிறது குழந்தைக்கு சரியான உடல் எடை இருக்காது. குழந்தை ஆரோக்கியமாக பிறப்பதற்கும் வளர்வதற்கும் இரும்புசத்து உதவுகிறது. இந்த இரும்பு சத்து குழந்தைக்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்குகிறது உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க மிகவும் தேவைப்படுகிறது. இரும்பு சத்து உள்ள உணவுகள்.... * முட்டை *பீன்ஸ் *முளைத்த பயிர்கள் *பருப்பு *கோழி, மீன் ,இறைச்சி *ப்ராக்கோலி *ஓட்ஸ் *வெள்ளம் *கீரைகள் *எலுமிச்சை *ஆரஞ்சு *நெல்லிக்காய் *உலர் திராட்சை *அத்திப்பழம் *பேரீச்சம்பழம் *செவ்வாழை *ஆப்பிள் *மாதுளை மேலும் மருத்துவமனையில் தரும் இரும்பு சத்து மாத்திரைகள் நீங்கள் எடுத்துக்கொள்ளும் பொழுது காபி தேனீர் இவற்றை சாப்பிட கூடாது . உடலுக்கு தேவையான இரும்பு சத்து சென்றடைவதை இவை தடுக்கிறது இதனால் காபி தேநீர் அருந்துவதை தவிர்த்திடுங்கள்.
Laddu Muttai | 09-06-2020
ratham-surakka
கர்ப்பிணிப் பெண்களுக்கு உடம்பில் ரத்தம் (ஹீமோகுளோபின்) கம்மியாக இருப்பது இப்பொழுது சாதாரணமாகி வருகிறது. பிரசவிக்கும் நேரத்தில் இவ்வாறு இரத்தம் குறைவாக இருப்பது மிகவும் அபாயகரமானது. எனவே எந்தெந்த உணவுப் பொருட்களை எடுப்பதன் மூலம் ரத்தம் விரைவாக சுரக்கும் என்பதை காண்போம். முருங்கைக்கீரை: முருங்கைக்கீரை யானது சாதாரணமாக கிடைக்கக்கூடிய கீரை வகைகளுள் ஒன்று. இதில் அயன் சத்துக்கள் நிறைந்திருப்பதால் வாரம் மூன்று அல்லது நான்கு முறை கூட எடுத்துக் கொள்ளலாம். இதனால் ஹீமோகுளோபின் அளவு முன்பை விட அதிகமாக கண்டிப்பாக நிறைய வாய்ப்புகள் உண்டு. ஆட்டு ஈரல்: சுவரொட்டியை வாரம் 2 முறை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் ஹீமோகுளோபினின் அளவு விரைவாக அதிகரிக்கும். தேன் நெல்லி: தேனில் ஊறவைத்த பெரிய நெல்லிக்காய் ஆனது கர்ப்பிணிப் பெண்களுக்கு உடம்பில் ரத்தம் ஊருவதில் பெரும் பங்காற்றுகின்றது. பெரும்பாலும் நாட்டு மருந்து கடைகளில் இவை கிடைக்கும். மாதுளை: மாதுளை பழச்சாறு தினமும் அருந்துவதன் மூலமாக கர்ப்பிணி பெண்ணின் உடலில் ரத்தம் விரைவாக ஊரும். செவ்வாழைப்பழம்: தினமும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செவ்வாழை பழங்களை தாராளமாக கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம். இதனால் அவர்களின் உடம்பில் ரத்தம் அதிகரிக்கிறது. ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பது மிகவும் அபாயகரமானது எனவே தகுந்த உணவு பொருட்களின் மூலம் கர்ப்பிணிப் பெண்ணிற்கு சரியான வகையில் ரத்தம் கிடைத்திட ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே முனைப்புடன் இருக்க வேண்டும்.
Laddu Muttai | 05-06-2020