Search for

மூலம்

Awesome Image
1. வயிற்று கடுப்பு நீங்க அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்றுக் கடுப்பு குணமாகும். 2. பப்பாளிப் பழத்தை வெட்டி மாம்பழத்தையும் வெட்டி தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும். 3. பப்பாளி பழம் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கி மூலத்தை குணப்படுத்தும். 4. சுக்கு மிளகு, கடுக்காய், வெள்ளைப்பூண்டு, பிரண்டை கற்றாளை வேர், நீர்முள்ளி சமஅளவு எடுத்து அரைத்து புளித்த மோரில் குடித்தால் உள் மூலம் குணமாகும். 5. ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி அருகம்புல் வேர் எடுத்து உலர்த்தி பொடிசெய்து ஒரு ஸ்பூன் அளவு பசு நெய்யுடன் சாப்பிட்டு வர மூலம் குணமாகும். 6. மூலத்திற்கு பருப்புடன், துத்தி இலையும் வேக வைத்து சாப்பிட மூலம் குணமாகும். 7. மூலச்சூடு குறைய ரோஜா பூவை வைத்து சர்பத் தயாரித்து விற்கப்படுகின்றது. அதை நாம் குடித்து வர மூலச்சூடு நிவாரணம் கிடைக்கும். 8. காட்டுத் துளசியின் விதைகளை காய வைத்து இடித்து தூள் செய்து அரை டீஸ்பூன் தூளை பாலுடன் கலந்து குடித்தால் உள்புறம் உள்ள மூலம் குணமாகும். 9. துத்திக்கீரையை சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் பசும்பாலோடு சேர்த்து சாப்பிட மூல நோய் குணமாகும். 10. மூலநோய் இரத்தம் வெளியேறுவது நிறுத்த மாதுளம் பழத் தோலை நீரில் ஊறவைத்து அந்த நீரை வெளியே போன பின் கால் கழுவ மூலத்தின் வாய் இந்நீரால் கழுவப்பட்டு புண் குணமாகி இரத்தப்போக்கு நின்று விடும். 11. கருணை கிழங்கு சிறுதுண்டுகளாக நறுக்கி துவரம்பருப்புடன் சேர்த்து சாம்பார் சாப்பிட்டு வர மூலம் குணமாகும் 12. அருகம்புல் வேர் சேர்த்து அரைத்து பசும்பாலில் சாப்பிட்டு வந்ததால் இரத்தமூலம் அகலும். மூலக்கடுப்பு உஷ்ணம் விலகும். 13. தும்பை வேர், வேலை இலை வெங்காயம் சேர்த்து அரைத்து கட்ட மூலம் பவுத்திரம் குணமாகும். 14. வாழை பூ சாறு, கடுக்காய் பொடி சேர்த்து சாப்பிட்டு வர மூல நோய் குணமாகும். 15. திப்பிலி, சுக்கு, எள் மூன்றையும் சம அளவு எடுத்து மைய இடித்து தூள் செய்து ஒரு நாளைக்கு மூன்று முறை தேனுடன் சாப்பிட்டு வர மூல நோய் குணமாகும். 16. புங்கம் பட்டையை கஷாயமாக்கி குடிக்க மூலம் குணமாகும். சிறந்தமருந்து. 17. பசும்பால் 400, பசு நெய் 50, வெங்காய சாறு 100 மில்லி, அதிமதுரம் 20 கிராம் பொடி, அடுப்பில் வைத்து காய்ச்சி நல்ல பதத்தில் இறக்கி வைத்து இதனை நாள்தோறும் ஒரு வேளை 1 கரண்டி வீதம் 10 தினங்கள் சாப்பிட வேண்டும். 18. சிவதை, கருமச்சிவாதை, திப்பிலி, நேபாளம் ஆகியவற்றை வறுத்து பட்டுபோல் பொடி செய்து ஆசனவாயில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும். 19. மணத்தக்காளி கீரையும், வெங்காயத்தையும் தினசரி உணவில் சேர்த்து வந்தால் மூலச் சூட்டைத் தணிக்கும். 20. காட்டாமணக்கு இலையை நீர் விட்டு மைய அரைத்து ஆசன வாயில் தடவ மூலம் சிறிது நாளில் உள் மூலம் குணமாகும்.
Laddu Muttai | 19-04-2020