Weight-loss | ஜலதோஷம் | இருமல் | காய்ச்சல் | சர்க்கரை-நோய் | சளி | சுளுக்கு | தலைசுற்றல் | தலைவலி | நரம்பு-தளர்ச்சி | மஞ்சள்-காமாலை | கட்டிகள் | முகப்பரு | மூலம் | ஞாபக-சக்தி | தாய்ப்பால் | தீப்புண் | வாந்தி | காது-வலி | பல்-வலி | பித்தம் | மலச்சிக்கல் | நெஞ்சுவலி | மாதவிடாய் | வாயுத்-தொல்லை | மாலைக்கண் | முடி | ஆண்மை | ஆஸ்துமா | இடுப்பு | வயிறு | இரத்த-சோகை | கல்லீரல் | குடல் | சீதபேதி | மூட்டு | விக்கல் | வியர்வை | வீக்கம் | Fruit-facts | pregnancy-care | skin-care | vegetable | moolam | first-aid | paati-vaithiyam | aanmai | plant-facts | | Tamil Best Beauty tips site | Laddu muttai
1. நெஞ்சு வலி திமர் என ஏற்ப்பட்டால் கஸ்தூரியை ஒரு வெற்றிலையில் வைத்து மெல்லிச்செய்து சாப்பிட்டால் நெஞ்சு வலி நின்றுவிடும். 2. அத்திபழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திபழம் இருதயத்தை பலப்படுத்துகிறது. 3. இலந்தை பழம் சாப்பிட்டு வர நெஞ்சுவலி உள்ளவர்கள் குணம் பெறலாம். 4. விரலி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச நெஞ்சுவலி அகலும். 5. அகத்திக் கீரையை கழுவி சுத்தம் செய்து வெயிலில் உலர்த்தி மைய இடித்து சுத்தம் செய்து சலித்து எடுத்துக்கொண்டு 8 கிராம் அளவு தினசரி காலை மாலை என இருவேளை சுடுநீரில் சாப்பிட்டுவர குணமாகும்.
Laddu Muttai | 19-04-2020
1. அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 ஸ்பூன் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும். 2. முளைக்கீரை சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும். 3. சரக்கொன்றை மரபூ தேனில் ஊறவைத்து சாப்பிட்டு பால் சாப்பிட மலச்சிக்கல் வராது. 4. பேரிச்சம் பழத்தை இரவில் பாலில் ஊறவைத்து அதிகாலையில் எடுத்து பிசைந்து சாப்பிட மலம் சுலபமாக வெளியேறும். மலக்கட்டு நீங்கும். 5. வன்னி மரத்து பட்டை 10 கிராம் சேர்த்து உப்பு 2 கிராம் சேர்த்து அரைத்து காலை, மாலை ஒரு உருண்டை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. 6. செம்பருத்தி இலைகளை தூள் செய்து வைத்துக் கொள்ளவும். தினசரி இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும் 7. பார்லி அரிசி 20 கிராம், புளிய இலை 40 கிராம், காய்ச்சி கஷாயமாக்கி குடித்துவர மலச்சிக்கல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கி, மூலம் குணமாகும். 8. மலச்சிக்கல் போக்குவதில் நெல்லிக்காய்க்கு தனி சிறப்பு உண்டு. 9. பொன்னாவரைக் கீரையின் விதை மற்றும் இலைகளை மைய அரைத்து நுத விழுதை உண்டு சிறிது வெந்நீரையும் பருகினால் மலச்சிக்கல் உடனே குணமாகும். 10. மலச்சிக்கல் சிரமப்படுவர் இரவில் மாம்பழத்தைச் சாப்பிட்டு வர மலச்சிக்கல் சரியாகும்.
Laddu Muttai | 19-04-2020
1.கருவேப்பிலை துவையல் அல்லது கருவேப்பிலை பொடி தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர பைத்தியம் மாறும். பித்தம் தணியும். 2.காய்ந்த வேப்பம் பூவை சட்டியில் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு சிவக்க பொரிந்து சிறிது உப்பு போட்டு பிசைந்து 1 கரண்டி சாதத்தில் கலந்து சாப்பிட்டால் பித்தம் நீங்கும். 3.அரச மரத்தின் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும். 4.செங்கழுநீர் கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து இடித்து, சலித்து வைத்துக்கொண்டு சிறிது சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர உடல் சூடு, பித்தம் தணியும். 5.குறைய நல்ல பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்த சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டால் தாகம் பித்தம் குறையும். 6.தினசரி வாழைப்பழம் சாப்பிட்டு வர பித்தம் தணியும். 7.சிறுவெங்காயத்தைச் சிறிது வெல்லத்துடன் சேர்த்து நெய்விட்டு வதக்கிச் சாப்பிட பித்தம் குறையும். 8. அகத்தி கீரை சாப்பிடுவது பித்த கோளாறுகளை அகற்றும். உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். 9. செலவின்றி நிரந்தர தீர்வுக்காக தினமும் காலையில் வெறும் வயிற்றுடன், பல் துலக்கியவுடன் உடன் வாய் சுத்தம் செய்யும் போது விரல்களால் நாக்கின் அழுத்தித் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது உணவுக்குழாய் வழியே உள்ளே இருக்கும் பித்தநீர் முதலில் வெளியேறும். இந்த பித்த நீர் வெளியேற்றம் பல நோய்கள் உருவாவதைத் தவிர்க்கும். மேலும் சளியும் சிறிது சிறிதாக வெளியேறும். 10. சுக்கை தூள் பண்ணி எலுமிச்சம் பழச்சாறு கூட கலந்து குடித்து வரவும். 11. 100 கிராம் உலர்ந்த திராட்சை, 200 கிராம் கடுக்காயுடன் சேர்த்து அரைத்து தினசரி காலையில் 3 கிராம் அளவு சாப்பிட்டு வர, பித்தம், வாந்தி, வாய் கசப்பு தீரும். 12. சுக்கு, மிளகு, திப்பிலி, விளாமிச்சை வேர், கிராம்பு ஆகியவைகளை வகைக்கு 10 கிராம் வீதம் எடுத்து தூள் செய்து இந்த தூளை தினம் 2 வேளை 5 கிராம் வீதம் மூன்று அல்லது ஐந்து தினம் சாப்பிட்டு வர தலைச் சுற்றல் & பித்தம் குணமாகும். 13. திப்பிலி 5 கிராம், மிளகு 10 கிராம் எடுத்து தூளாக்கி அந்த தூள் விளாம்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பித்தம் மற்றும் தலை சுற்றல் குணமாகும்.
Laddu Muttai | 19-04-2020
1. துத்து இலை, அதன் வேரையும் கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர பல்வலி, பல் கூச்சம், பல் ஆட்டம் குணமாகும். 2. கோவை பழம் சாப்பிட பல்வலி குணமாகும். 3. செவ்வாழைப்பழம் இரவு சாப்பாட்டுக்கு பிறகு சாப்பிட்டு வந்தால் பல்வலி, பல் வீக்கம், பல்லில் ரத்தக்கசிவு, பல்சொத்தை எந்த நோயும் வராது. 4. துத்தி இலை வேர், சேர்த்து கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி, பல்கூச்சம், பல் ஆட்டம், பல் அரணை போன்ற குறைகள் அகன்று விடும். பல் உறுதிப்படும். 5. மகிழம் மரத்தின் பட்டையை பொடியாக்கி பல்துலக்கினால் எவ்வளவு கடுமையான பல்வலியும் பறந்து விடும். 6. வாகை மர பட்டையை கரியாக்கி பொடி செய்து, பல் தேய்த்து வர பல் ஆட்டம், ஈறு தேய்தல், பல்வலி குணமாகும். 7. சாதாரணமாக பல் வலிக்கு ஒரு சிறு துண்டு சுக்கை வாயில் போட்டு அடக்கிக் கொள்ள பல்வலி குறையும். 8. பல்வலியால் துன்பப்படுவோர் இலவங்கத் தைலத்தில் இருந்து இரண்டு, மூன்று சொட்டுக்கள் பல்வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி குணமாகும்.
Laddu Muttai | 19-04-2020
1. ஊமத்தன் பூவை பிழிந்து சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் காது வலி குணமாகும். 2. வாழை பட்டையை தீயில் காட்டி சூடேற்றி பிழிந்து காதில் விட காது வலி குணமாகும். 3. வெள்ளைச் செடிகளை பறித்து நசுக்கி சாறு எடுத்து காலை, மாலை 5 சொட்டு வீதம் காதில் விட்டு வர காது வலி குணமாகும். 4. எருக்கன் கொட்டை எடுத்து கசக்கி இரண்டு சொட்டு மூக்கில் விட காது வலி குணமாகும். 5. நல்லெண்ணெய், வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், கற்பூரம் போட்டு பசி தினசரி 3 வேளை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காது வலி குணமாகும். 6. பனை மரத்தின் மட்டையை வெட்டி நெருப்பில் வாட்டி சாறு பிழிந்து இரண்டு மூன்று சொட்டு விட காது வலி குணமாகும். 7. எருக்கம் மொட்டை கசக்கி சில சொட்டுக்கள் காதில் விட காது வலி குணமாகும். 8. மணத்தக்காளி கீரையும் துளசியின் இலையையும் சம அளவு எடுத்து இடித்துச்சாறு எடுத்து மூன்று துளிகள் காதில்விட காதுவலி குணமாகும். 9. வெற்றிலை சாறை காதில் விட்டால் காது வலி குணமாகும்.
Laddu Muttai | 19-04-2020
1. வாந்தியை நிறுத்த துளசி சாறு கல்கண்டு சேர்த்து சாப்பிட வாந்தி நிற்கும். 2. பித்த வாந்தியை நிறுத்த வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும். 3. துளசி சாறு, கல்கண்டு சேர்த்து காய்ச்சலின் போது கொடுக்க வாந்தி நிற்கும். 4. வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும். 5. எலும்மிச்சம் இலைகளை அரைத்து சாறு எடுத்து தண்ணீரும் சிறிது உப்பும் போட்டு பருகினால் வாந்தி உடனே நிற்கும். 6. பிரயாணத்தின் போது வாந்தி நிறுத்த பிரயாணத்தின் போது வாந்தி வருகிறதா நீங்கள் தினசரி ஒரு நெல்லிக்காய் சாப்பிட தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வர பிரயாணத்தின் போது வாந்தி வராது. 7. நார்த்தங்காய் இலையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர பித்தம் தணிந்து வாந்தி வருவது நின்று விடும். 8. புதினா இலையை வதக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து வெல்லம் கலந்து வடிகட்டி சாப்பிட செரியாமை, வாந்தி பேதி குணமாகும். 9. புதிய மண் சட்டியை அடுப்பில் வைத்து இரண்டு காய்ந்த மிளகாயை போட்டு கறுக்க வறுத்து மிளகாயை எடுத்து அந்தச் சட்டியில் 3 டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து அந்நீரை பருகி வர குணமாகும். 10. களாக்காயை சாப்பிட்டால் பித்த சம்பந்தமான நோய் நீங்குவதுடன் பித்த வாந்தியை நிறுத்தும். 11. வில்வ வேரை பறித்து வந்து சுத்தம் செய்து மைய அரைத்து பாலுடன் சாப்பிட்டு வர நீர்க்கடுப்பு, வாந்தி குணமாகும்.
Laddu Muttai | 19-04-2020
1. தீப்புண் வடு மாற வேப்பம் கொட்டையை நீர் விட்டு நன்றாகக் காய்ச்சி இறக்கி அந்நீரை மத்தை கொண்டு சிலிப்பினால் நுரை உண்டாகும். அந்த நுரையை திப்புண் மீது பூச வடு மறையும். 2. தீப்புண் ஆற வேப்பம் கொழுந்தை பசுமோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண்மீது பூச புண் ஆறும். 3. குப்பைமேனி இலை சாறு சமஅளவு தேன் கலந்து சேர்த்து புண் மேல் தடவி வர தீப்புண் குணமாகும் 4. வேப்பம் பட்டையை இடித்து கசாயமாக காய்ச்சி ஆறிய பிறகு பாட்டிலில் வைத்து குலுக்கி திப்புண் வடுமீது தடவி வர குணமாகும். 5. வாழைத்தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவி வர தீப்புண், சீழ் வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும். 6. புளிய மரத்து சொற சொறப்பு பட்டையை பட்டுபோல் பொடி செய்து புண் மேல் தூவி தேங்காய் எண்ணெய் விட்டு வர ஒரு வாரத்தில் புண் ஆறிவிடும். 7. அத்திபால் தடவ தீப்புண் ஆறும். 8. உடலில் தீக்காயம் ஏற்பட்டால் 30 மில்லி தேங்காய் எண்ணையுடன், 50 மில்லி சுண்ணாம்பில் ஊற்றிய தெளிந்த நீரை கலந்து தீப்புண் மீது தடவி வர குணமாகும். 9. வேப்பங்கொழுந்தை மோர்விட்டு அரைத்து தீப்பட்ட புண் மீது தடவ புண் குணமாகும். 10. வீட்டில் உள்ள காப்பி டிக்காஷனை தீப்புண் உள்ள இடத்தில் தடவி வர இப்புண் காயம் விரைவில் ஆறும். 11. மருக்கொழுந்து செடியினைப் பறித்து வேரை நீக்கி விட்டு சுத்தம் செய்து நல்லெண்ணெய் கலந்து வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொண்டு தீப்புண் மீது தடவி வர குணமாகும். 12. வீட்டில் காப்பி போடுவதற்கு என உள்ள டிக்காஷனை திப்புண் இட்ட இடத்தில் தடவி வர தீப்புண் குணமாகும்
Laddu Muttai | 19-04-2020