1. துத்து இலை, அதன் வேரையும் கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர பல்வலி, பல் கூச்சம், பல் ஆட்டம் குணமாகும்.
2. கோவை பழம் சாப்பிட பல்வலி குணமாகும்.
3. செவ்வாழைப்பழம் இரவு சாப்பாட்டுக்கு பிறகு சாப்பிட்டு வந்தால் பல்வலி, பல் வீக்கம், பல்லில் ரத்தக்கசிவு, பல்சொத்தை எந்த நோயும் வராது.
4. துத்தி இலை வேர், சேர்த்து கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி, பல்கூச்சம், பல் ஆட்டம், பல் அரணை போன்ற குறைகள் அகன்று விடும். பல் உறுதிப்படும்.
5. மகிழம் மரத்தின் பட்டையை பொடியாக்கி பல்துலக்கினால் எவ்வளவு கடுமையான பல்வலியும் பறந்து விடும்.
6. வாகை மர பட்டையை கரியாக்கி பொடி செய்து, பல் தேய்த்து வர பல் ஆட்டம், ஈறு தேய்தல், பல்வலி குணமாகும்.
7. சாதாரணமாக பல் வலிக்கு ஒரு சிறு துண்டு சுக்கை வாயில் போட்டு அடக்கிக் கொள்ள பல்வலி குறையும்.
8. பல்வலியால் துன்பப்படுவோர் இலவங்கத் தைலத்தில் இருந்து இரண்டு, மூன்று சொட்டுக்கள் பல்வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி குணமாகும்.