1. தாய்மார்கள் அன்றாடம் உணவு பதார்த்தத்துடன் பப்பாளி சேர்த்து சமைத்துச் சாபிட்டுவர தாய்ப்பால் அதிகம் சுரக்கும். 2. சீரகத்தை வறுத்து பொடியாக்கி சம அளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும். 3. முருங்கை கீரை சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும். 4. இளம்பிஞ்சு நூல்கோலை சமைத்து சாப்பிட பால் நன்றாக சுரக்கும். 5. அஸ்வகந்தா செடியின் இலைகளை கஷாயம் செய்து குடிக்க அதிகமான பால் கறக்கும். 6. குழந்தை பிறப்பதற்கு முன்னும், குழந்தை பிறந்த பின்னும் பேரிச்சம்பழம் சாப்பிட்டுவந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் குழந்தையும் நன்கு வளரும். 7. கேழ்வரகு மாவு, எள்ளு சிறிது வெல்லம் சேர்த்து இடித்து அடை செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு வேண்டிய தாய்ப்பால் சுரக்கும். 8. பாகற்காயின் இலையை அரைத்து, மார்பகங்களின் மேல் பற்று போட பால் சுரக்கும். 9. ஒரு லிட்டர் தண்ணீரில் சந்திரவள்ளிக்கிழங்கைப் போட்டு கொதிக்க வைத்து அந்த நீருடன் சுத்தமான பசும்பால் கலந்து சிறிது கற்கண்டையும் சேர்த்து சாப்பிட்டு வர தாய்ப்பால் அதிகரிக்கும். 10. அம்மான் பச்சரிசி கீரையின் பூக்களை 40 கிராம் எடுத்து சுத்தம் செய்து மைய அரைத்து பாலுடன் கலந்து குடித்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். 11. தாய்ப்பால் சுரக்க ஆலமரத்தின் விதையையும் ஆலமரத்தின் கொழுந்து இலையையும் அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட தாய்ப்பால் அதிகமாகும்.