1. வெள்ளை பூண்டு உப்பு சேர்த்து இடித்து சுளுக்கு பட்ட இடத்தில் தடவி வர சுளுக்கு குணமாகும். 2. புளிய இலையை அவித்து சூட்டுடன் சுளுக்கு உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும். அப்படியே கட்டவும். 3. மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு இம்மூன்றையும் வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடுசெய்து சுளுக்கு மீது பற்று போட சுளுக்கு உடல் குணமாகும். 4. புளி, உப்பு கரைத்து கொதிக்க வைத்து பின் இறக்கி ஆறிய உடன் பற்று போட வீக்கம், ரத்தக் கட்டு குணமாகும்.