1. எலுமிச்சம் பழச்சாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும். 2. கடுக்காய், சித்தரத்தை இரண்டையும் சிவக்க வறுத்து பொடி செய்து வாயில் போட்டு அடக்கி கொண்டால் வரட்டு இருமல் குணமாகும் . 3.கருவேல மரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குறையும். 4.மிளகு, திப்பிலி, சுக்கு சம அளவு, பொடி செய்து 2 கிராம் தேனில் கலந்து 3 வேளை சாப்பிட இருமல், தொண்டை வலி குணமாகும். 5.கடுக்காய் தோலை சுட்டு ஒரு துண்டை வாயில் அடக்கி கொண்டிருந்தால் வறட்டு இருமல் குணமாகும். 6.குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமல் குணமாக கண்டங்கத்திரி வேரை மைய அரைத்து வெள்ளாட்டுப் பாலில் காய்ச்சி கொடுக்க தொடர் இருமல் உடனே நிற்கும். 7. விஷ்ணு கிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இளைப்பு, இருமல் குணமாகும். 8. வெந்தயக்கீரையை வாங்கி சமைத்துச் சாப்பிட்டுவர இருமல் உடனே குறையும். 9. படிகாரத்தைப் பொடித்து அலுமினியப்பாத்திரத்தில் வைத்துக்கொண்டு தினசரி குன்றிமணி அளவு மூன்று முறை சாப்பிட்டு வர கக்குவான் இருமல் குணமாகும். 10. இருமல் நிற்க முற்றிய வெண்டைக்காய் சூப் செய்து குடித்துவந்தால் இருமல் உடனே நிற்கும். 11. கணை இருமல் இருக்கும் குழந்தைகளுக்கு துளசி இலையை இடித்து சாறு எடுத்து இரண்டு ஸ்பூன் கொடுத்தால் கணை இருமல் குணமாகும். 12. சோடா உப்பை தண்ணீரில் கலந்து குடிக்கக் கொடுத்தால் இருமல் வேகம் குறையும். 13. காலையில் ஏற்படும் இருமலுக்கு, கடுகை மைய இடித்து தூள் செய்து வைத்துக் கொண்டு இருமல் இருக்கும் போது ஒரு சிட்டிகைத் தூளுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட இருமல் குறைந்து நிவாரணம் கிடைக்கும். 14. மஞ்சள் தூளுடன் சிறிது மிளகை தூள் செய்து சேர்த்து இந்த இரண்டையும் காய்ச்சி பசும்பாலில் சேர்த்து இனிப்புக்கு பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட இருமல் குணமாகும்.