1. குப்பைமேனி சாறு தடவ தலைவலி குணமாகும். 2. அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவ தலைவலி குணமாகும். 3. முள்ளங்கி சாறு சாப்பிட தலைவலி, இருமல் குணமாகும். 4. திருநீற்று பச்சிலை சாறு, தும்பை சாறு இரண்டையும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து மூக்கில் உறிஞ்ச மண்டையடி தீரும். தலைவலி பாரம் குணமாகும். 5. வெற்றிலை காம்பு, லவங்கம், ஆலரிசி சமஅளவு பால் கலந்து அரைத்து சூடாக்கி நெற்றி பொட்டில் உச்சந்தலையில் தடவ தலைவலி குணமாகும். 6. விரலி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி அகலும். 7. எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணெய் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றை தலைவலி போகும். 8. தேத்தாங் கொட்டையுடன், பச்சை கற்பூரத்தையும் சேர்த்து தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்றுபோட ஒற்றை தலைவலி குணமாகும். 9. மருக்கொழுந்து செடியின் பூவை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி தலைவலி உள்ள இடத்தில் வைத்துக் கட்டுப்போட உடனே தலைவலி நிற்கும். 10. மருதாணி இலையைப் பறித்து சுத்தம் செய்து தாய்ப்பால் விட்டு மைய அரைத்து நெற்றியில் பற்றுப்போட தலைவலி உடனே குணமாகும். 11. மிளகை மைய தேய்த்து எடுத்து அதை எலுமிச்சம் பழச் சாற்றில் நெற்றியில் பற்று போட தலைவலி குறையும். 12. குங்குமப்பூ வாங்கி வந்து தாய்ப்பால் விட்டு மைய உரைத்து நெற்றியில் பற்றுப்போட தலைவலி உடனே நிற்கும். 13. முற்றிய வெற்றிலையின் நுனி பகுதியை சிறிது எடுத்து நெற்றிப்பொட்டின் இருபுறமும் ஒட்டினால் தலைவலி குணமாகும். 14. எட்டிக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணெய் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றைத் தலைவலி குணமாகும். 15. நாட்டு வெங்காயம் இரண்டு, மூன்று மட்டும் பச்சையாகவே உரித்து சாப்பிட்டால் , கொண்டைக் கடலையை லேசா வறுத்து மென்று சாப்பிட்ட பின் பால் அருந்தி வர, தலைவலி, தலைபாரம், இருமல் தீரும். 16. பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு மழை மற்றும் குளிர் காலங்களில் ஏற்படும் ஜலதோஷம் காய்ச்சல் மற்றும் தலைவலி தீரும் 17. துளசி இலையை அரைத்து விழுதை நெற்றியில் பற்றுபோட தலைவலி குணமாகும். 18. துளசி இலைசாறு, வில்வ இலை சாறு வகைக்கு 100 மிலி எடுத்து, அத்துடன் 200 மிலி தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ச்சி, சாறு சுண்டியபின் இறக்கி வடிகட்டி தினசரி தலைக்கு தேய்த்து வர சைனஸ் & தலைவலி தொல்லை தீரும். 19. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் பயப்படாமல் உண்ணலாம் என்ற பழமொழிக்கு இணங்க ஒரு டம்ளர் பசும்பாலில் 10 மிளகை உடைத்துப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, இதனை இரவில் தூங்கப் போகிறதுக்கு முன்பே மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தாலே இருமல், தலைவலி உடனே போய்விடும் 20. எளிமையான மருந்து மிளகு ஊசியால் குத்தி தீயில் கட்டு அதனுடைய புகையை மூக்கு மூலம் உள்ளுக்கு இழுத்தாலே ஜலதோஷம், தலைவலி போய்விடும். 21. இஞ்சிச் சாறு 50 கிராம், நல்லெண்ணெய் 50 கிராம் எடுத்து ஒன்று சேர்த்துக் காய்ச்சி, சீசாவில் பத்திரப் படுத்திக் கொள்ளுங்கள். இந்த தைலத்தை நன்றாகத் தேய்த்து 20 நிமிடம் ஊறியதும், பயத்தமாவு & அரப்புத் தூள் தேய்த்து வெந்நீரில் குளித்தால் தலைவலி இந்தத் தைலம் குணப்படுத்தும்.