1. கோரைக்கிழங்கை கழுவி சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி குடித்தால் கடுங்காய்ச்சல் குணமாகும். 2. வேப்பிலையை வறுத்து சூட்டோடு தலைக்கு வைத்து தூங்கினால் காய்ச்சல் நீங்கும். நிம்மதியான தூக்கம் வரும். 3. மிளகு, சீரகம் சேர்த்து சாப்பிட்டுவந்தால் மலேரியாகாய்ச்சல் நீங்கும். 4. இத்தங்காய் செடி இலைகளை கஷாயம் செய்து குடிக்க காய்ச்சல் குணமாகும். 5. மிளகு, திப்பிலி, சுக்கு சம அளவு பொடி தேனில் சாப்பிட காய்ச்சல் குணமாகும். 6. எலுமிச்சம் பழச்சாறு தேன் கலந்து 100 மில்லி சாப்பிட்டு வந்தால் மலேரியாகாய்ச்சல் குணமாகும். 7. வல்லாரை இலை, உத்தாமனி இலை, மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுக்க காய்ச்சல் குணமாகும். 8. வேலிபருத்தி செடியின் இலையை அரைத்து 2 தேக்கரண்டி சாறு எடுத்து சமஅளவு தேனுடன் கலந்து காய்ச்சல் வரும் போது கொடுக்க குளிர் காய்ச்சல் குணம் ஆகும். 9. கோரை கிழங்கை காய்ச்சி கஷாயம் குடித்தால் எப்படி பட்ட காய்ச்சலும் குணமாகும். 10. அரச இலை கொழுந்தை பசும் பாலில் போட்டு காய்ச்சி சர்க்கரை சேர்த்து குடிக்க காய்ச்சல் குணமாகும். 11. ஈர பசையுடன் உள்ள முற்றிய வேப்ப மரத்தின் போட்டு இடித்து 1/4 பங்கு குணமாகும். பட்டையை உரலில் சீரக பொடி கலந்து பசும்பாலில் சாப்பிட குணமாகும். 12. நாய்த்துளசி வேருடன் பிடுங்கி வந்து நீரில் போட்டு கஷாயமாக காய்ச்சி குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும். 13. நெய், தேன். வேப்ப இலை இம்மூன்றையும் எடுத்து ஒன்றாக கலந்து புகை மூட்டம் போட்டால் காய்ச்சல் உடனே நிற்கும். 14. தண்ணீரைக் கொதிக்க வைத்து வெண் நொச்சி இலைகளை போட்டு நீராவி பிடிக்க வியர்வை வெளியேறும். சிறிது நேரத்தில் காய்ச்சல் காய்ச்சல் நிற்கும். 15. வில்வ இலையை நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை குடித்தால் வாதக் காய்ச்சல் குணமாகும்.