சளி | | Tamil Best Beauty tips site | Laddu muttai சளி பிரச்சனைக்கு சித்த மற்றும் பாட்டி வைத்தியம்

சளி பிரச்சனைக்கு சித்த மற்றும் பாட்டி வைத்தியம்

1. சளி மூக்கடைப்பு தீர கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளி மூக்கடைப்பு குணமாகும். 2. மாதுளம் பழச் சாறு, எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் சளி தொல்லை குணமாகும். 3. முசுமுசுக்கை இலையை சாப்பிட்டு வர மழைக்காலங்களில் சளி இருமல் வராமல் தடுக்க முடியும். 4. கற்பூரவள்ளி இலையை சூடாக்கி நெற்றியில் பற்று போட்டால் சளி உடனே குணமாகும். 5. 1 கரண்டி இஞ்சிச்சாறு வெதுவெதுப்பான சூட்டில் குடித்தால் சளி வெளியாகி நுரையீரல் வலி குணமாகும். 6. அதிமதுரம் பொடி ஒரு கிராம் காலை, மாலை சர்க்கரை சேர்த்து உண்ண சளி, இருமல் தொண்டை வலி குணமாகும். 7. ஏலப்பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்பு சளி குணமாகும். 8. அருகம்புல் சாறு பருகி வர சளித்தொல்லை நீங்கும். 9. தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து சுடவைத்து நெஞ்சில் தடவ நெஞ்சு சளி குணமாகும். 10. சிறிது மிளகுத் தேனை சேர்த்து நெல்லிக்காய்ச்சாற்றில் சாப்பிட்டு வர சளி மற்றும் மூக்கடைப்பு நீங்கும். 11. புதிய ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கிவிடும். 12. நொச்சி இலையை தலையணைக்குள்ளே பரப்பி வைத்துத் தூங்கினாலே நிம்மதியான தூக்கம் வருவதுடன் தலைபாரம் இறங்கி, சளிப்பிரச்சனையும் விலகி விடும். 13. திப்பிலி ஒரு பங்கு & துளசி இலை 3 பங்கு என்ற அளவில் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட சளி அகலும் 14. மாசிக்காயை பொன் வறுவலாக வறுத்து, இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் ஒரு சிட்டிகை எடுத்து தேன் கலந்து சாப்பிட சளி அகலும். 15. தும்பை பூவுடன் மிளகு சேர்த்து தூளாக்கி காலை மாலை 2 நாட்கள் சாப்பிட சளி அகலும். 16. சூடான சுக்கு, மல்லி காப்பியில் சிறிது தேன் கலந்து குடிக்க சளி கரையும். 17. தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது 99 சதவீத தவறு. தயிரில் உள்ள "புரோபயோடிக் என்னும் சத்து குடலுக்கு மிக நல்லது. அலர்ஜி வராமல் தடுக்கும். 18. கற்பூரவள்ளி இலை சாறுடன் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி சாறு வற்றியதும் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மூக்கடைப்பு & (சைனஸ்) சளி தொந்தரவு அகலும். 19. தும்பை இலைச்சாற்றை மூக்கில் பிழிய சளி கரைந்து வெளிப்படும். உடலுக்கு ஊட்டம் தரும். 20. சூடான சுக்கு காப்பியில் சிறிது தேன் கலந்து குடித்தால் சளி முறிந்து மூக்கடைப்பு நீங்கும். 21. தூதுவளை 3 இலையை நெய் அல்லது வெண்ணெய் வதக்கி சாறு எடுத்து உள்ளுக்கு கொடுத்து வந்தால் நெஞ்சு சளி பட்டென்று விலகும். 22. சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம் சம அளவு எடுத்து பொன் வறுவலாக வறுத்து கரணம் பண்ணி அத்துடன் சரிரமமாக பனங்கற்கண்டு சேர்த்து காலை & மாலை 1 தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் சளி மற்றும் ஆஸ்துமா சரியாகம். 23. பசு நெய்யில் ஏலக்காயை உடைத்து போட்டு காய்ச்சி ஆறிய பிறகு மூக்கில் நீர் வடிதல் மற்றும் சளித் தொந்தரவு அகலும்.




image

Tag : சளி |

தண்ணிரில் சிறிதளவு பணங்கற்கண்டு,இஞ்சி,லவங்கம் சேர்த்து கொதிக்க விட்டு பிறகு ஏலக்காய்,12மிளகு,1ஸ்பூன் சிரகம்,இந்த மூன்றையும் அரைத்து எடுத்து கொதிக்கும் அந்த தண்ணிரில் சேர்த்து அதில் சேர்த்த அனைத்து பொருட்களும் நன்றாக ஒரு டமளர் வரும் வரை கொதிக்க விடவும்.பிறகு இதனை இரவில் குடித்து வந்தால் சளி காலையில் மலம் வழியாக வெளியேறும்.
Laddu Muttai | 29-05-2020