Search for

pregnancy-care

Awesome Image
கர்ப்ப காலத்தில் பெண்கள் அவதிப்படும் வேதனைகளில் இதுவும் ஒன்று தோல் அரிப்பு.உடலில் ஹார்மோன் மாறுபாடு ஏற்படுவதனால் இந்த மாதிரி அரிப்பு ஏற்படுவது சகஜமாகும். தோல் அரிப்பு என்றால் இடுப்பு பகுதியை சுற்றி மட்டும் இல்லாமல் உடம்பு முழுவதும் அரிப்பு ஏற்படும், காரணம் குழந்தை வளர வளர கர்ப்ப காலத்திற்கு ஏற்ப நமது உடலானது மாற்றமடையும். இடுப்பில் உள்ள எலும்புகள் விரிவடையும் உடலில் ஏற்படும் மாற்றங்களால் தோல்கள் விரிவடைய தொடங்கும் குழந்தை வளர வளர வயிறானது விரிவடைய தொடங்கும்போது அரிப்பு ஏற்படும் பிறகு அந்த இடமானது வெள்ளைத் தழும்புகளாக மாறும். கர்ப்பிணி பெண்களுக்கு இது பொதுவான பிரச்சினைகள் தான் இதற்கு ஒரு சரியான வழி கற்றாலையில் உள்ள ஜெல்லை எடுத்து அரிப்பு ஏற்படும் இடத்தில் மசாஜ் போன்று செய்வதனால் அரிப்பு நீங்கும். கற்றாழை பயன்படுத்துவதற்கு முன் கற்றாழையில் உள்ள முட்களை நீக்கி உள்ளே உள்ள வெள்ளை நிற ஜெல்லை மட்டும் எடுத்து உடம்பில் தேய்க்கவும். அரிப்பு ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே செய்யப்படும் வழிகள்: இரவு கர்ப்பிணி பெண்கள் தூங்கு செல்லும்முன் வயிற்றின் மேற்பரப்பில் விளக்கெண்ணையை ஊற்றி சிறிது மசாஜ் செய்வதினால் வயிறு விரிவடைய ஏற்படும் அரிப்பையும் தழும்பையும் தடுக்கலாம்.
Laddu Muttai | 26-03-2021
Awesome Image
சுகப்பிரசவம் ஆக என்ன செய்ய வேண்டும்: சுகப்பிரசவம் இந்த காலத்துல சுகப்பிரசவம் என்பது ஒரு அரிதான விஷயமா பார்க்கப்படுகிறது யாரை கேட்டாலும் சிசேரியன் அப்படினு மட்டும் தான் சொல்றாங்க சுகப்பிரசவம் ஆகறது இந்த காலத்துல ரொம்ப கடினமான ஒரு விஷயம் ஆச்சு காரணம் அந்த காலத்துல அரைப்பதற்கு மிக்ஸி இல்லாம வீட்டில் இருக்கின்ற அம்மி ஆட்டங்கள் துணி கையிலேயே துவைக்கிறது இதெல்லாம் குழந்தைகள் பிறப்பதற்கு சுகப்பிரசவம் ஆகவும் மிகச் சுலபமாகவும் இருந்தது. சுகப்பிரசவம் என்பது இந்த காலத்தில் ஒரு பெண்ணுக்கு வரம் தான். சிசேரியன் செய்யும்போது ஒரு பெண்ணுக்கு அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தான் வலி இல்லாமல் இருக்கும்.பிரசவத்திற்குப் பிறகு காலம் முழுவதும் அந்த பெண்ணிற்கு வலியும் வேதனையும் மட்டும் தான் மீதி இருக்கும் காரணம் சிசேரியன் செய்யும் பெண்களுக்கு அதிகம் முதுகுவலி எதையும் செய்ய முடியாத அளவிற்கு உடலின் உபாதைகள் ஏற்படும். சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு பெண்ணிற்கு சுகப்பிரசவம் ஆகாமல் சிசேரியன் என்றால் அதற்கு காரணம் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே ஏற்படுகிறது.சிசேரியன் ஆகாமல் சுகப்பிரசவம் ஆக என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம். தண்ணீர் : ஒரு பெண் கர்ப்ப காலத்தில் ஆரம்பத்தின் முதல் கர்ப்பகால இறுதிவரை உடலுக்குத் தேவையான குழந்தைக்கு தேவையான தண்ணீரை நன்றாக பருக வேண்டும். வாந்தி மயக்கம் இருக்கும் பெண்கள் தண்ணீர் அதிகமாக எடுத்துக்கொள்ள முடியாமல் இருக்கும்.அவர்கள் பழச்சாறு, இளநீர், மோர் இந்த வகையில் பெண்கள் குடிப்பதனால் உடலில் மற்றும் கருப்பையில் உள்ள பனிக்குட நீர் குறையாமல் பார்த்துக்கொள்ளலாம். இந்த மாதிரி நிறைய தண்ணீர் பழச்சாறு மோர் இதனால் குடிப்பதினால் சுகப்பிரசவம் மிகவும் எளிமையானதாக ஒரு பெண்ணிற்கு இருக்கும். நடைப்பயிற்சி: கர்ப்பகாலத்தின் ஆரம்பகாலத்தில் நடைப்பயிற்சி செய்யாமல் இருந்தாலும் ஒரு பெண்ணின் ஆறு மாத காலத்தில் இருந்து அல்லது ஏழாவது மாத கர்ப்ப காலத்தில் இருந்து காலையில் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்தாள் குழந்தை தலைகீழாக கர்ப்பவாய் நோக்கி நகரத் தொடங்கி சுகப்பிரசவம் ஆவதற்காக இடுப்பு எலும்புகள் தானாக தயாராகி ஒரு பெண்ணிற்கு எளிமையாக சுகப்பிரசவம் ஆக இந்த நடைபயிற்சி மிகவும் உதவியாக இருக்கும். நடை பயிற்சி செய்யும் பொழுது அருகில் உங்கள் துணையும் அல்லது பெற்றோரும் நண்பரும் உடன் இருக்கையில் மட்டுமே நடைப்பயிற்சி செய்ய வேண்டும் காரணம் வாந்தி மயக்கம் இருப்பவர்கள் இதனை அருகில் ஒருத்தர் இருக்கும் போது மட்டும் நடக்க வேண்டும். கர்ப்ப காலத்தின் இறுதி காலத்தில் அதாவது பத்தாவது மாதத்தில் நடை பயிற்சி செய்யும் பொழுது அருகில் ஒரு துணையோடு மட்டுமே நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள் உணவு உண்டபின் பத்து நிமிடங்கள் அல்லது 20 நிமிடங்கள் கழித்து நடை பயிற்சியோ அல்லது உடற்பயிற்சியோ செய்யலாம் நடை பயிற்சி செய்யும் பொழுது தண்ணீர் குடிக்கலாம் அதனை கையில் எடுத்துச் செல்வது நலம். உடற்பயிற்சி: சில மருத்துவமனைகளில் சுகப்பிரசவம் ஆவதற்கு உடற்பயிற்சி கற்றுக் கொடுப்பார்கள் அதை தினமும் தவறாமல் செய்யும் பொழுது இடுப்பு எலும்புகள் சுகப்பிரசவத்துக்கு தயாராகி மிக எளிமையாக சுகப்பிரசவமாகும் அந்த உடற்பயிற்சியை தவறாமல் காலையில் மற்றும் மாலையில் செய்ய வேண்டும் . மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அந்த உடற்பயிற்சி செய்யக் கூடாது குழந்தையின் நிலை மற்றும் உங்கள் உடலின் நிலையை மருத்துவர் அறிந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றால் மட்டுமே செய்ய வேண்டும். மன அமைதி: கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று கர்ப்பகாலத்தில் மன அமைதியும் சந்தோஷமும். மன அமைதியும் மகிழ்ச்சியும் இருந்தாலே கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் இதுவும் சுகப்பிரசவத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயம்: கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் நாள் நெருங்க நெருங்க மனதில் ஒரு பயம் இருந்தே இருக்கும் அந்த பயத்தை முழுவதுமாக மனதிலிருந்து அகற்றி விடுங்கள் காரணம் அந்த பயமே உங்களை சுகப் பிரசவத்தில் இருந்து சிசேரியனுக்கு மனதை மாற்றி விடும். உங்கள் குழந்தையை இந்த உலகத்திற்கு வர வைக்கப் போகிறோம் நாம் பார்க்க போகிறோம் அப்படிங்கிற ஒரு எண்ணத்தோடு மட்டுமே காத்துக் கொண்டு இருங்கள். ஒரு பெண்ணிற்கு பிரசவம் என்பது மறு ஜென்மம் என்பது உண்மைதான் அதற்காக பயப்படத் தேவையில்லை எல்லா பெண்களும் வாழ்விழும் இதை கடந்து தான் வருகிறார்கள். சிலபேர் அவர்களுடைய கர்ப்ப காலத்தில் நடந்த பிரசவ காலத்தில் நடந்த சில விஷயங்களை கூறும் போது கர்ப்பிணி பெண்களுக்கு பயத்தை ஏற்படுகிறது கேட்டு மட்டும் தெரிந்து கொள்ளலாம் அது தங்களுக்கு நடந்துவிடுமோ என்று பயப்படாமல் இருங்கள். ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு ஒரு மாதிரிதான் பிரசவகாலத்தில் உடல்நலம் பிரசவம் எல்லாம் ஏற்படுகிறது இதனால் எதுவும் பயப்படத் தேவையில்லை. பிரசவ வலி வந்து விட்டாலோ அல்லது பிரசவத்திற்கு முன்னரோ பயப்படாமல் குழந்தை பிறப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் நம்மால் என்ன செய்ய முடிகிறது என்பதை கவனத்துடன் மனம் சிதறாமல் பயப்படாமல் செய்தாலே சுகப்பிரசவமாகும் எளிதாக அமையும். மருத்துவர்கள் பிரசவத்தின் போது என்ன சொல்கிறார்களோ அதை காதில் வாங்கிகொண்டு சரியாக செய்தாலே சுகப்பிரசவமாகும் அந்த நேரத்தில் வரும் வலியை தாங்கிக்கொண்டு காலம் முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம். வேலைகள்: கர்ப்பிணி பெண்கள் சில சின்னசின்ன வேலைகளை செய்யலாம் ஏழாவது மாதத்தில் குனிந்து வீட்டைக் கூட்டுவது பாத்திரம் விளக்குவது இது சுகப்பிரசவத்திற்கு மிகவும் உதவும்.வீட்டைக் கூட்டுவது என்றால் குனிந்து மட்டுமே கூட்ட வேண்டும் நின்ன வாக்கில் கூட்டக் கூடாது. பெரியவர்கள் நிறைய பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் கர்ப்பிணி பெண்கள் குனிந்து நிமிர்ந்து வேலை செய்தால் மட்டுமே சுகப்பிரசவம் ஆகும் என்பது இது முற்றிலும் உண்மைதான் வீட்டை பெருக்கும் போது பாத்திரத்தைத் துலக்கும் போதும் உங்கள் உடல் மற்றும் இடுப்பில் ஏற்படுகின்ற மாற்றத்தை உணர்வீர்கள் இதுநாள் தோறும் செய்வது சுகப்பிரசவத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். குழந்தை தலை கீழாக கர்ப்பப்பை வாயை நோக்கி மிகவும் சுலபமாக குழந்தையின் தலை திரும்பும். பிரசவ காலம் நெருங்கும் பொழுது அதிகமாக அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும் இது சுகப்பிரசவத்தை கடினமாகும். கர்ப்பிணி பெண்கள் வீட்டில் உள்ள அனைத்து துணிகளும் துவக்க தேவை இல்லை உங்களது உடைகளை தினமும் துவைத்தால் அதுவே உங்களுக்கு சரியான உடற்பயிற்சி ஆகும் இதுவும் உங்களது சுக பிரசவத்திற்கு வழி வகுக்கும். கர்ப்ப காலத்தில் உடலுறவு: கர்ப்பிணி பெண்கள் அவர்கள் துணையோடு கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்வதாள் சுகப்பிரசவம் ஆகுவதற்கு இதுவும் ஒரு வழியாகும். கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் அதனை முதல் மூன்று மாதத்திற்கு செய்யக்கூடாது மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பிறகு கணவன் மனைவி உடலுறவு கொள்ள வேண்டும். எந்த மாதத்தில் இருந்து உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என மருத்துவர் சொன்ன பின்பே உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் காரணம் கர்ப்பப்பை வாய் திறந்து இருந்திருந்தாலோ அல்லது கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் உபாதைகள் இருந்தாலும் மருத்துவர் இதனை செய்ய வேண்டாம் என்பார்கள் அதனால் அப்பொழுது செய்யக்கூடாது. சுடு தண்ணீர் மற்றும் எண்ணெய்: ஆறுவது மாதத்தில் இருந்து கர்ப்பிணி பெண்கள் இரவு தூளோங்க செல்லும் முன் வயிறின் முன் பகுதியில் விளக்கு எண்ணையை தொப்புளை சுற்றி ஒரு சிறிய மசாஜ் செய்யுது பத்து நிமிடங்கள் களித்து வெது வெது பான சுடுநீரில் குளிக்கவும்.இதனால் இரவில் நன்றாக உறங்க முடியும்.வயிறில் தழும்புகள் வராமல் இருப்பதோடு சுகப்பிரசவத்திற்கு வயிற்று தசைகள் விரிவடையும். இடுப்பு எலும்புகள் விரிவடைய சுகம் பிரசவம் எளிமையாக்க காலை மற்றும் மாலையில் நன்றாக காய வாய்த்த சுடுநீரை இடுப்பு பகுதில் ஊற்றவும்.வயிற்றின் முன் பகுதில் ஊற்ற கூடாது. மேலே கூறிய அனைத்தும் ஒரு கர்ப்பிணிப் பெண் செய்யும்பொழுது சுகப்பிரசவம் என்பது அந்தப் பெண்ணிற்கு ஒரு வரமாக அமையும்.
Laddu Muttai | 08-03-2021
Awesome Image
தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பில் வலி ஏற்படுகிறதா அதற்கு காரணங்களும் தீர்வுகளும் பிரசவம் முடிந்த பின் பல தாய்மார்கள் அவதிப்படும் வலிகளில் ஒன்று மார்பு வலி இதற்கு காரணம் அதிக அளவில் பால் சுரப்பதே ஆகும். பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் அனுபவிக்கும் வேதனைகளை வார்த்தையால் சொல்லிவிட முடியாது. மார்பு வலி இதனை சரி செய்ய சரியான காரணத்தை அறிந்து மார்பு வலியை சரிப்படுத்தலாம். சில தாய்மார்கள் தங்கள் அழகு போய்விடும் என்று தாய்ப்பால் குழந்தைக்கு கொடுப்பதில்லை தாய் பால் அதிக அளவில்சுரந்து மார்புகளில் இருக்கும்பொழுது அவை மார்பு வலியை ஏற்படுத்துகிறது.சில தாய்மாருக்கு மார்பு காம்புகளில் அடைப்பு மற்றும் அழுக்கு இருந்தால் பால் வெளியே வராமல் இவைகளால் தடுத்து நிறுத்தப்படுகிறது இதனால் பால் மார்புகளில் தங்கி அதிக வலியை ஏற்படுத்துகிறது. மார்பில் வலி: மார்பில் கல் மாதிரி வீக்கமாக இருந்தால் பால் அதிக அளவு சுரந்து கட்டி ஆகி இருக்கிறது என்று அர்த்தம் இதனை சரிசெய்ய குழந்தைக்கு தொடர்ந்து பாலை கொடுக்கவேண்டும் குழந்தை நன்றாக சப்பி குடிக்கும் பொழுது வலி குறைய தொடங்கும். மார்பை பிசைவது மசாஜ் போன்று கொடுப்பதோ பால் உற்பத்தி அதிகரிக்கும் இதனை செய்யவேண்டாம் செய்யாமல் இருக்கும் பொழுது பால் உற்பத்தி குறைந்து வலி ஏற்படாமல் தடுக்கலாம். <h2 class="backlink">மார்புக்காம்பில் வலி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்</h2> <p class="patthi">மார்புக்காம்பில் வலி இதற்கு காரணம் மார்புக்காம்பில் ஏற்படும் பூஞ்சை தொற்று ஆகும். காம்புகளில் வீக்கம் அல்லது வலி ஏற்படும் பொழுது சிறிது வெந்நீர் ஒத்தடம் அல்லது குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து பின்பு குழந்தைக்கு பால் கொடுக்கலாம். மார்பு காம்புகளில் புண் இருந்தால் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டாம் இதனால் குழந்தைக்கு தொற்று ஏற்படும்.இதனை சரி செய்த பிறகு பால் கொடுக்கலாம். இறுக்கமான ஆடைகளை பால் கொடுக்கும் தாய்மார்கள் அணியாமல் இருப்பது நலம்.இதனால் மார்பிலும் காம்புகளிலும் வலி அதிக அளவில் ஏற்படும்.</p> <h4 class="backlink" style="font-size: 16px;">குறிப்பு:</h4> <p class="patthi">குழந்தை சரியாகப் பால் குடிக்கவில்லை என்றாலும் பால் அதிக அளவு உற்பத்தியாகி மார்புகளில் வலி ஏற்படுகிறது என்றாலும் இதற்கு சிறந்த வழி முடிந்த அளவில் தாய்மார்கள் பாலை பீச்சி எடுத்து குழந்தைக்கு கொடுக்கலாம் இதனால் வலி வீக்கம் குறைகிறது மேலும் குறைந்த அளவு பால் குடிக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் இப்படி கொடுப்பதால் அதிக அளவு ஊட்டச்சத்து குழந்தைக்கு சென்றடையும்.</p>
Laddu Muttai | 06-03-2021
Awesome Image
கர்ப்பகாலத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களை ஆதரிக்க உடல் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியத்தை கொண்டிருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் குழந்தைக்கும் தங்களுக்கு தேவையான கலோரி வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உட்கொள்ளுவதை அதிகரிக்க வேண்டும்.கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் முக்கியமான சத்துக்களில் ஒன்று இந்த இரும்புச்சத்து இவை குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் அதுமட்டுமல்லாமல் கர்ப்ப காலத்தில் ஏற்படுகின்ற உடல் மாற்றங்களை ஆதரிக்க உங்கள் உடல் தேவையான சத்துக்களை கொண்டிருக்க இவை உதவுகின்றன. இந்த இரும்பு சத்தை உணவின் மூலம் மட்டுமே நீங்க அதிகரிக்க முடியும். இது உடலில் ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. இந்த சத்து உடலில் குறைவாக உள்ள போது ரத்தசோகை ஏற்படுகிறது இதனால் உடல் களைப்பாக பலவீனமாகவும் கர்ப்பிணி பெண்ணிற்கு மாறிவிடுகிறது. இரும்புசத்து இல்லாத போது உடலுக்கு தேவையான பிராணவாயு உடலை சென்றடைவதில்லை இதனால் குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில்லை. மேலும் இந்த சத்து உடலில் இல்லாத போது குழந்தைக்கும் தாய்க்கும் ஆபத்தை ஏற்படுத்துவதோடு குறை பிரசவத்திற்கு ஆளாகி விடுகிறது குழந்தைக்கு சரியான உடல் எடை இருக்காது. குழந்தை ஆரோக்கியமாக பிறப்பதற்கும் வளர்வதற்கும் இரும்புசத்து உதவுகிறது. இந்த இரும்பு சத்து குழந்தைக்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்குகிறது உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க மிகவும் தேவைப்படுகிறது. இரும்பு சத்து உள்ள உணவுகள்.... * முட்டை *பீன்ஸ் *முளைத்த பயிர்கள் *பருப்பு *கோழி, மீன் ,இறைச்சி *ப்ராக்கோலி *ஓட்ஸ் *வெள்ளம் *கீரைகள் *எலுமிச்சை *ஆரஞ்சு *நெல்லிக்காய் *உலர் திராட்சை *அத்திப்பழம் *பேரீச்சம்பழம் *செவ்வாழை *ஆப்பிள் *மாதுளை மேலும் மருத்துவமனையில் தரும் இரும்பு சத்து மாத்திரைகள் நீங்கள் எடுத்துக்கொள்ளும் பொழுது காபி தேனீர் இவற்றை சாப்பிட கூடாது . உடலுக்கு தேவையான இரும்பு சத்து சென்றடைவதை இவை தடுக்கிறது இதனால் காபி தேநீர் அருந்துவதை தவிர்த்திடுங்கள்.
Laddu Muttai | 09-06-2020
Awesome Image
கர்ப்பிணிப் பெண்களுக்கு உடம்பில் ரத்தம் (ஹீமோகுளோபின்) கம்மியாக இருப்பது இப்பொழுது சாதாரணமாகி வருகிறது. பிரசவிக்கும் நேரத்தில் இவ்வாறு இரத்தம் குறைவாக இருப்பது மிகவும் அபாயகரமானது. எனவே எந்தெந்த உணவுப் பொருட்களை எடுப்பதன் மூலம் ரத்தம் விரைவாக சுரக்கும் என்பதை காண்போம். முருங்கைக்கீரை: முருங்கைக்கீரை யானது சாதாரணமாக கிடைக்கக்கூடிய கீரை வகைகளுள் ஒன்று. இதில் அயன் சத்துக்கள் நிறைந்திருப்பதால் வாரம் மூன்று அல்லது நான்கு முறை கூட எடுத்துக் கொள்ளலாம். இதனால் ஹீமோகுளோபின் அளவு முன்பை விட அதிகமாக கண்டிப்பாக நிறைய வாய்ப்புகள் உண்டு. ஆட்டு ஈரல்: சுவரொட்டியை வாரம் 2 முறை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் ஹீமோகுளோபினின் அளவு விரைவாக அதிகரிக்கும். தேன் நெல்லி: தேனில் ஊறவைத்த பெரிய நெல்லிக்காய் ஆனது கர்ப்பிணிப் பெண்களுக்கு உடம்பில் ரத்தம் ஊருவதில் பெரும் பங்காற்றுகின்றது. பெரும்பாலும் நாட்டு மருந்து கடைகளில் இவை கிடைக்கும். மாதுளை: மாதுளை பழச்சாறு தினமும் அருந்துவதன் மூலமாக கர்ப்பிணி பெண்ணின் உடலில் ரத்தம் விரைவாக ஊரும். செவ்வாழைப்பழம்: தினமும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செவ்வாழை பழங்களை தாராளமாக கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம். இதனால் அவர்களின் உடம்பில் ரத்தம் அதிகரிக்கிறது. ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பது மிகவும் அபாயகரமானது எனவே தகுந்த உணவு பொருட்களின் மூலம் கர்ப்பிணிப் பெண்ணிற்கு சரியான வகையில் ரத்தம் கிடைத்திட ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே முனைப்புடன் இருக்க வேண்டும்.
Laddu Muttai | 05-06-2020
Awesome Image
"முதல் மூன்று மாதங்கள்" கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் பப்பாளி பழம், பழைய மற்றும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்த அசைவ உணவுகள், கத்திரிக்காய் அண்ணாச்சி பழம், அதிக காரம் மசாலா போன்ற உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது, இனிப்பு பண்டங்கள் எண்ணெயில் பொரித்த பண்டங்கள் தவிர்ப்பது நல்லது, அதிக சூடான பொருட்கள் மற்றும் குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது, மெர்குரி சத்துள்ள மீன் வகைகளை தவிர்ப்பது நல்லது மெர்குரி உள்ள மீன் மற்றும் கடல் உணவு குழந்தையின் மூளை வளர்ச்சியை சேதப்படுத்தும், அதிகமான கொழுப்பு சத்துள்ள உணவுப்பொருட்கள் மற்றும் அதிக புளிப்பு சுவையுடைய உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது. வேகவைக்காத பச்சை முட்டை கர்ப்ப காலத்தில் தவிர்ப்பது நல்லது -முட்டையை நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும்.பால் நன்றாக காய வைத்து குடிக்க வேண்டும் அதனை பச்சையாக குடிக்கக்கூடாது. இறைச்சியை சாப்பிடும் போது பாதியாக வேக வைத்து சாப்பிடக்கூடாது நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும் , இறைச்சிகளில் ஈரல் எனப்படும் கல்லீரல் கர்ப்ப காலத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இதைத் தவிர்ப்பது நல்லது கல்லீரலில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால் இது குழந்தையை அதிக பாதிப்பை ஏற்படுத்தும், எண்ணெய் பண்டங்கள் கொழுப்பு உணவுகள் கர்ப்பகாலத்தில் புறக்கணிப்பது நல்லது. ஃபாஸ்ட் ஃபுட். பாய்லர் கோழி இவற்றை அறவே தவிர்க்க வேண்டும்,, தேநீர் மற்றும் காபி கர்ப்ப காலத்தில் பெண்கள் இதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்,, பதப்படுத்தப்படாத பால் பழச்சாறு போன்றவற்றில் கிருமிகள் அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளதால் இதனை உட்கொள்ளும் போது ஃபுட் பாய்சன் ஏற்பட ஏற்பட வாய்ப்புள்ளது இதனை தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணி பெண்கள் முக்கியமாக ஆல்கஹால் உள்ள பொருட்களை தவிர்க்க வேண்டும் இது கருச்சிதைவை ஏற்படுத்தும். நல்லெண்ணெய் இதில் கர்ப்பிணி பெண்கள் உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் (கருச்சிதைவை ஏற்படுத்தும்). கத்திரிக்காய் இதில் உள்ள பைட்டோ ஹார்மோன்கள் மாதவிடாயை தூண்டுகின்றன கர்ப்பிணிகளுக்கு செரிமான பிரச்சனையை தூண்டுகிறது அதிக கத்திரிக்காய் உட்கொள்வதால் கருப்பை சுருங்குவதற்கு கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது கர்ப்ப காலத்தில் முக்கியமாக ஆரம்ப மூன்று மாதங்களில் கத்தரிக்காயை தவிர்ப்பது மிகவும் நல்லது. மைதா மாவில் செய்யப்பட்ட உணவான பரோட்டா சமோசா பேக்கரி உணவுகள் இவை கர்ப்பிணி பெண்கள் உட்கொள்வதால் மலச்சிக்கலை ஏற்படுத்தும் மற்றும் செரிமான கோளாறு துண்டும் இதனைத் தவிர்ப்பது நல்லது மற்றொன்று மைதா மாவில் செய்யப்பட்ட சாக்லேட் பிஸ்கட் கேக் மற்றும் பாக்கெட்களில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் முற்றிலுமாக சாப்பிடவே வேண்டாம் செரிமான பிரச்சினை உண்டாக்குவதோடு கர்ப்பிணிப் பெண்களுக்கு தூக்கமின்மை உடல் சோர்வு மலச்சிக்கல் உடல் எடை அதிகரிக்கும். முக்கிய குறிப்பு: கருவுற்ற பெண்மணிகள் இறுக்கமான உடைகளை தவிர்ப்பது நல்லது குறிப்பாக மார்பு பகுதி மற்றும் இடுப்பு பகுதிகளில் இருக்கமான ஆடைகளில் அணிவதை தவிர்க்கவும் , அதிக பளுவுள்ள பொருட்களைத் தூக்குவதை தவிர்க்கவும்.
Laddu Muttai | 05-06-2020
Awesome Image
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மேல் வயிற்று வலி ஏற்படுவது என்பது சாதாரணமாக நிகழக் கூடிய ஒன்று.... இதனால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆறுமாதம் கடந்த கர்ப்பிணிகளுக்கு மேல் வயிற்றுவலி ஏற்படும் அல்சர் மற்றும் வாய்வு சேர்தல் உடல் சூடு போன்ற காரணங்களினால் இவை ஏற்படுகிறது தீர்வு: ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து சிறிது ஆறிய பின் குடித்தால் அஜீரணக் கோளாறு சரியாகும் ஒருவேளை அல்சரினால் வயிற்றில் புண் ஏற்படாமல் இருந்தால் ஒரு டம்ளர் பாலில் இரண்டு மூன்று பற்கள் பூண்டு போட்டு கொதிக்க வைத்து அதனை பூண்டோடு சேர்த்து சாப்பிட வேண்டும் இதனால் வாய்வு பிரச்சனையானது அடுத்த 30 நிமிடங்களுக்குள் சரியாகி மேல் வயிற்று வலியில் இருந்து முற்றிலுமாக நிவாரணம் தரும். ஒருவேளை அல்சரினால் வயிற்றில் காயங்கள் இருந்தால் இதை சாப்பிட கூடாது ஏனென்றால் பூண்டில் உள்ள காரத்தன்மை மேலும் புண்ணாக்கி தீராத வயிற்று வலியை உண்டுபண்ணும். உடல் சூட்டினால் ஏற்பட்ட வயிற்று வலியாக இருப்பின் வயிற்றில் விளக்கெண்ணெய் தேய்ப்பதன் மூலம் சரியாகும் காரமான உணவுகளை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது சிறந்தது.
Laddu Muttai | 05-06-2020