"முதல் மூன்று மாதங்கள்" கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் பப்பாளி பழம், பழைய மற்றும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்த அசைவ உணவுகள், கத்திரிக்காய் அண்ணாச்சி பழம், அதிக காரம் மசாலா போன்ற உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது, இனிப்பு பண்டங்கள் எண்ணெயில் பொரித்த பண்டங்கள் தவிர்ப்பது நல்லது, அதிக சூடான பொருட்கள் மற்றும் குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது, மெர்குரி சத்துள்ள மீன் வகைகளை தவிர்ப்பது நல்லது மெர்குரி உள்ள மீன் மற்றும் கடல் உணவு குழந்தையின் மூளை வளர்ச்சியை சேதப்படுத்தும், அதிகமான கொழுப்பு சத்துள்ள உணவுப்பொருட்கள் மற்றும் அதிக புளிப்பு சுவையுடைய உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது. வேகவைக்காத பச்சை முட்டை கர்ப்ப காலத்தில் தவிர்ப்பது நல்லது -முட்டையை நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும்.பால் நன்றாக காய வைத்து குடிக்க வேண்டும் அதனை பச்சையாக குடிக்கக்கூடாது. இறைச்சியை சாப்பிடும் போது பாதியாக வேக வைத்து சாப்பிடக்கூடாது நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும் , இறைச்சிகளில் ஈரல் எனப்படும் கல்லீரல் கர்ப்ப காலத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இதைத் தவிர்ப்பது நல்லது கல்லீரலில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால் இது குழந்தையை அதிக பாதிப்பை ஏற்படுத்தும், எண்ணெய் பண்டங்கள் கொழுப்பு உணவுகள் கர்ப்பகாலத்தில் புறக்கணிப்பது நல்லது. ஃபாஸ்ட் ஃபுட். பாய்லர் கோழி இவற்றை அறவே தவிர்க்க வேண்டும்,, தேநீர் மற்றும் காபி கர்ப்ப காலத்தில் பெண்கள் இதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்,, பதப்படுத்தப்படாத பால் பழச்சாறு போன்றவற்றில் கிருமிகள் அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளதால் இதனை உட்கொள்ளும் போது ஃபுட் பாய்சன் ஏற்பட ஏற்பட வாய்ப்புள்ளது இதனை தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணி பெண்கள் முக்கியமாக ஆல்கஹால் உள்ள பொருட்களை தவிர்க்க வேண்டும் இது கருச்சிதைவை ஏற்படுத்தும். நல்லெண்ணெய் இதில் கர்ப்பிணி பெண்கள் உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் (கருச்சிதைவை ஏற்படுத்தும்). கத்திரிக்காய் இதில் உள்ள பைட்டோ ஹார்மோன்கள் மாதவிடாயை தூண்டுகின்றன கர்ப்பிணிகளுக்கு செரிமான பிரச்சனையை தூண்டுகிறது அதிக கத்திரிக்காய் உட்கொள்வதால் கருப்பை சுருங்குவதற்கு கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது கர்ப்ப காலத்தில் முக்கியமாக ஆரம்ப மூன்று மாதங்களில் கத்தரிக்காயை தவிர்ப்பது மிகவும் நல்லது. மைதா மாவில் செய்யப்பட்ட உணவான பரோட்டா சமோசா பேக்கரி உணவுகள் இவை கர்ப்பிணி பெண்கள் உட்கொள்வதால் மலச்சிக்கலை ஏற்படுத்தும் மற்றும் செரிமான கோளாறு துண்டும் இதனைத் தவிர்ப்பது நல்லது மற்றொன்று மைதா மாவில் செய்யப்பட்ட சாக்லேட் பிஸ்கட் கேக் மற்றும் பாக்கெட்களில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் முற்றிலுமாக சாப்பிடவே வேண்டாம் செரிமான பிரச்சினை உண்டாக்குவதோடு கர்ப்பிணிப் பெண்களுக்கு தூக்கமின்மை உடல் சோர்வு மலச்சிக்கல் உடல் எடை அதிகரிக்கும். முக்கிய குறிப்பு: கருவுற்ற பெண்மணிகள் இறுக்கமான உடைகளை தவிர்ப்பது நல்லது குறிப்பாக மார்பு பகுதி மற்றும் இடுப்பு பகுதிகளில் இருக்கமான ஆடைகளில் அணிவதை தவிர்க்கவும் , அதிக பளுவுள்ள பொருட்களைத் தூக்குவதை தவிர்க்கவும்.