கர்ப்பிணி பெண்களுக்கு ரத்தம் குறைவாக இருந்தால் குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் மேலும் குறை பிரசவம் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.மருந்து மாத்திரை சாப்பிடும் ரத்தம் அதிகரிக்க வில்லையென்றால் அப்பொழுது இதை விடாமல் சாப்பிட்டு வந்தால் தாய் சேய் நலமாக இருப்பார்கள். சீக்கிரமாக உடம்பில் ஒரே வாரத்தில் இரத்தம் அதிகரிக்க முருங்கைக்கீரை சூப் சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்: 1.சின்ன வெங்காயம் 7 2.சீரகம் -1 தேக்கரண்டி 3.பூண்டு -5 பற்கள் 4.மஞ்சள்தூள்- தேவையான அளவு 5.முருங்கைக்கீரை -4.5 கொத்து 6.தக்காளி-1 7.மிளகுத்தூள்- கால் தேக்கரண்டி 8.அரிசி தண்ணீர் முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்துக் கொள்ளவும்.பிறகு அரிசி ஊற வைத்து இரண்டாவதாக கழுவி எடுத்து தண்ணீரை ஊற்றவும். அதில் மஞ்சள் தூள் மிளகுத்தூள் போடவும். சீரகத்தை லேசாக வறுத்து அதை மிளகுத் தூளுக்கு பிறகு சேர்க்கவும்.ஒரு தக்காளியை எடுத்து நான்காக நறுக்கி இந்த சூப்பில் சேர்க்கவும் பின்பு தோலுரித்து சிறு வெங்காயத்தை வெட்டாமல் அப்படியே சூப்பில் சேர்க்கவும். பிறகு பூண்டு தோல் உரித்து நசுக்கிப் சேர்க்கவும். கடைசியாக முருங்கைக்கீரையை சேர்க்கவும் தேவையான அளவு உப்பை போட்டு நன்கு கொதித்த உடன் இறக்கி வைக்கவும். இந்த சூப்பை வாரத்தில் 4 முறை குடிப்பதால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் இதை குடிப்பது அவசியம் அவர்களுக்கும் குழந்தைக்கும் ரத்தம் அதிகரிக்க முருங்கைக்கீரை சூப் மிகவும் உதவியாக இருக்கும்.