கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப கால வாரம் மற்றும் மாதம் கணக்கிடும் முறை கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய கற்ப காலத்தில் மாதம் வாரம் எப்படி அறிந்து கொள்வது என்பது தெரியாது. கர்ப்பிணிப் பெண்கள் தங்களுடைய கடைசி மாதவிடாய் நாட்களை அதாவது கடைசியாக மாதவிடாய் அடைந்த முதல் தேதியை அந்த மாதத்தையும் சேர்த்து கர்ப்பகாலம் எத்தனாவது மாதம் என்பதை கணக்கிடலாம். அவங்களுக்கு மாதவிடாய் தொடங்கி 14 நாட்களுக்குள் கரு முட்டை முழுமையாக வளர்ச்சி அடைந்து வரும். அதுவே உங்களது முதல் மற்றும் இரண்டாவது வாரம் ஆகும். நீங்கள் கர்ப்பமானது முதல் எப்பொழுது கடைசியாக மாதவிடாய் அடைந்தீர்களோ அந்த மாதமே உங்களது முதல் மாதம். கர்ப்பிணி பெண்களுக்கு கற்பகாலம் 280 நாட்கள் ஆகும் ஒன்பது மாதம் பத்தாவது மாதம் தொடங்கிய ஒரு வாரத்தில் பிரசவம் நடந்துவிடும். கர்ப்ப கால அட்டவணை இது உங்களது வாரம் மாதம் பிரித்து பார்க்க எளிமையாக இருக்கும். கர்ப்ப காலத்தை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம் 1st ட்ரிம்ஸ்ட்டர் (trimester)- month(1,2,3) 2nd ட்ரிம்ஸ்ட்டர் (trimester)- month(4,5,6) 3rd ட்ரிம்ஸ்ட்டர் (trimester)- month(7,8,9) ட்ரிம்ஸ்ட்டர் என்பது ஒரு ஆண்டை மும்மூன்று மாதங்களாக பிரித்துக் காட்டுவது. ட்ரிம்ஸ்ட்டர் அர்த்தம் மூன்று மாதங்கள். 1st ட்ரிம்ஸ்ட்டர்: மாதம்(1,2,3) வாரம்(1-13) முதல் மாதம் (1st month) = வாரம் 1-4 இரண்டாவது மாதம்(2nd month) = வாரம் 5-8 மூன்றாவது மாதம்(3rd month) = வாரம் 9-13 2nd ட்ரிம்ஸ்ட்டர்: மாதம்(4,5,6) வாரம் (14-26) நான்காவது மாதம் (4th month) = வாரம் 14-17 ஐந்தாவது மாதம் (5th month) = வாரம் 18-21 ஆறாவது மாதம் (6th month) = வாரம் 22-26 3rd ட்ரிம்ஸ்ட்டர்: மாதம் (7,8,9) வாரம்(27-40) ஏழாவது மாதம் (7 month) = வாரம் 27-30 எட்டாவது மாதம் (8 month) = வாரம் 31-35 ஒன்பதாவது மாதம் (9 month) = வாரம் 36-40 முதல் மூன்று மாத கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் முக்கியமான காலமாகும் இதில் கரு வளர்ந்து 1.0g எடை மற்றும் உயரத்தைக் கொண்டிருக்கும் முதல் மூன்று மாதம் முடியும்போது ஒரு எலுமிச்சம்பழம் அளவில் மட்டுமே குழந்தை வயிற்றில் இருக்கும். சில கர்ப்பிணி பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போகும் ஒரு மாதம் இரண்டு மாதம் தள்ளிப் போகும் அப்படி ஆகும் பெண்களுக்கு சரியாக கர்ப்ப காலத்தை கணக்கிடுவது கடினம் ஆகும் அவர்கள் வயிற்றினுள் இருக்கும் குழந்தைக்கு முதன்முதலில் செய்யும் ஸ்கேனில் அவர்களுக்கு எத்தனாவது வாரம் மாதம் பிரசவ தேதி அனைத்தும் பரிந்துரைக்கப்படும். அதுவே அவர்களின் பிரசவ தேதியும் ஆகும்.