கர்ப்ப காலத்தில் பெண்கள் அவதிப்படும் வேதனைகளில் இதுவும் ஒன்று தோல் அரிப்பு.உடலில் ஹார்மோன் மாறுபாடு ஏற்படுவதனால் இந்த மாதிரி அரிப்பு ஏற்படுவது சகஜமாகும். தோல் அரிப்பு என்றால் இடுப்பு பகுதியை சுற்றி மட்டும் இல்லாமல் உடம்பு முழுவதும் அரிப்பு ஏற்படும், காரணம் குழந்தை வளர வளர கர்ப்ப காலத்திற்கு ஏற்ப நமது உடலானது மாற்றமடையும். இடுப்பில் உள்ள எலும்புகள் விரிவடையும் உடலில் ஏற்படும் மாற்றங்களால் தோல்கள் விரிவடைய தொடங்கும் குழந்தை வளர வளர வயிறானது விரிவடைய தொடங்கும்போது அரிப்பு ஏற்படும் பிறகு அந்த இடமானது வெள்ளைத் தழும்புகளாக மாறும். கர்ப்பிணி பெண்களுக்கு இது பொதுவான பிரச்சினைகள் தான் இதற்கு ஒரு சரியான வழி கற்றாலையில் உள்ள ஜெல்லை எடுத்து அரிப்பு ஏற்படும் இடத்தில் மசாஜ் போன்று செய்வதனால் அரிப்பு நீங்கும். கற்றாழை பயன்படுத்துவதற்கு முன் கற்றாழையில் உள்ள முட்களை நீக்கி உள்ளே உள்ள வெள்ளை நிற ஜெல்லை மட்டும் எடுத்து உடம்பில் தேய்க்கவும். அரிப்பு ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே செய்யப்படும் வழிகள்: இரவு கர்ப்பிணி பெண்கள் தூங்கு செல்லும்முன் வயிற்றின் மேற்பரப்பில் விளக்கெண்ணையை ஊற்றி சிறிது மசாஜ் செய்வதினால் வயிறு விரிவடைய ஏற்படும் அரிப்பையும் தழும்பையும் தடுக்கலாம்.