தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பில் வலி ஏற்படுகிறதா அதற்கு காரணங்களும் தீர்வுகளும் பிரசவம் முடிந்த பின் பல தாய்மார்கள் அவதிப்படும் வலிகளில் ஒன்று மார்பு வலி இதற்கு காரணம் அதிக அளவில் பால் சுரப்பதே ஆகும். பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் அனுபவிக்கும் வேதனைகளை வார்த்தையால் சொல்லிவிட முடியாது. மார்பு வலி இதனை சரி செய்ய சரியான காரணத்தை அறிந்து மார்பு வலியை சரிப்படுத்தலாம். சில தாய்மார்கள் தங்கள் அழகு போய்விடும் என்று தாய்ப்பால் குழந்தைக்கு கொடுப்பதில்லை தாய் பால் அதிக அளவில்சுரந்து மார்புகளில் இருக்கும்பொழுது அவை மார்பு வலியை ஏற்படுத்துகிறது.சில தாய்மாருக்கு மார்பு காம்புகளில் அடைப்பு மற்றும் அழுக்கு இருந்தால் பால் வெளியே வராமல் இவைகளால் தடுத்து நிறுத்தப்படுகிறது இதனால் பால் மார்புகளில் தங்கி அதிக வலியை ஏற்படுத்துகிறது. மார்பில் வலி: மார்பில் கல் மாதிரி வீக்கமாக இருந்தால் பால் அதிக அளவு சுரந்து கட்டி ஆகி இருக்கிறது என்று அர்த்தம் இதனை சரிசெய்ய குழந்தைக்கு தொடர்ந்து பாலை கொடுக்கவேண்டும் குழந்தை நன்றாக சப்பி குடிக்கும் பொழுது வலி குறைய தொடங்கும். மார்பை பிசைவது மசாஜ் போன்று கொடுப்பதோ பால் உற்பத்தி அதிகரிக்கும் இதனை செய்யவேண்டாம் செய்யாமல் இருக்கும் பொழுது பால் உற்பத்தி குறைந்து வலி ஏற்படாமல் தடுக்கலாம்.
மார்புக்காம்பில் வலி இதற்கு காரணம் மார்புக்காம்பில் ஏற்படும் பூஞ்சை தொற்று ஆகும். காம்புகளில் வீக்கம் அல்லது வலி ஏற்படும் பொழுது சிறிது வெந்நீர் ஒத்தடம் அல்லது குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து பின்பு குழந்தைக்கு பால் கொடுக்கலாம். மார்பு காம்புகளில் புண் இருந்தால் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டாம் இதனால் குழந்தைக்கு தொற்று ஏற்படும்.இதனை சரி செய்த பிறகு பால் கொடுக்கலாம். இறுக்கமான ஆடைகளை பால் கொடுக்கும் தாய்மார்கள் அணியாமல் இருப்பது நலம்.இதனால் மார்பிலும் காம்புகளிலும் வலி அதிக அளவில் ஏற்படும்.
குழந்தை சரியாகப் பால் குடிக்கவில்லை என்றாலும் பால் அதிக அளவு உற்பத்தியாகி மார்புகளில் வலி ஏற்படுகிறது என்றாலும் இதற்கு சிறந்த வழி முடிந்த அளவில் தாய்மார்கள் பாலை பீச்சி எடுத்து குழந்தைக்கு கொடுக்கலாம் இதனால் வலி வீக்கம் குறைகிறது மேலும் குறைந்த அளவு பால் குடிக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் இப்படி கொடுப்பதால் அதிக அளவு ஊட்டச்சத்து குழந்தைக்கு சென்றடையும்.