சுகப்பிரசவம் ஆக என்ன செய்ய வேண்டும்: சுகப்பிரசவம் இந்த காலத்துல சுகப்பிரசவம் என்பது ஒரு அரிதான விஷயமா பார்க்கப்படுகிறது யாரை கேட்டாலும் சிசேரியன் அப்படினு மட்டும் தான் சொல்றாங்க சுகப்பிரசவம் ஆகறது இந்த காலத்துல ரொம்ப கடினமான ஒரு விஷயம் ஆச்சு காரணம் அந்த காலத்துல அரைப்பதற்கு மிக்ஸி இல்லாம வீட்டில் இருக்கின்ற அம்மி ஆட்டங்கள் துணி கையிலேயே துவைக்கிறது இதெல்லாம் குழந்தைகள் பிறப்பதற்கு சுகப்பிரசவம் ஆகவும் மிகச் சுலபமாகவும் இருந்தது. சுகப்பிரசவம் என்பது இந்த காலத்தில் ஒரு பெண்ணுக்கு வரம் தான். சிசேரியன் செய்யும்போது ஒரு பெண்ணுக்கு அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தான் வலி இல்லாமல் இருக்கும்.பிரசவத்திற்குப் பிறகு காலம் முழுவதும் அந்த பெண்ணிற்கு வலியும் வேதனையும் மட்டும் தான் மீதி இருக்கும் காரணம் சிசேரியன் செய்யும் பெண்களுக்கு அதிகம் முதுகுவலி எதையும் செய்ய முடியாத அளவிற்கு உடலின் உபாதைகள் ஏற்படும். சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு பெண்ணிற்கு சுகப்பிரசவம் ஆகாமல் சிசேரியன் என்றால் அதற்கு காரணம் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே ஏற்படுகிறது.சிசேரியன் ஆகாமல் சுகப்பிரசவம் ஆக என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம். தண்ணீர் : ஒரு பெண் கர்ப்ப காலத்தில் ஆரம்பத்தின் முதல் கர்ப்பகால இறுதிவரை உடலுக்குத் தேவையான குழந்தைக்கு தேவையான தண்ணீரை நன்றாக பருக வேண்டும். வாந்தி மயக்கம் இருக்கும் பெண்கள் தண்ணீர் அதிகமாக எடுத்துக்கொள்ள முடியாமல் இருக்கும்.அவர்கள் பழச்சாறு, இளநீர், மோர் இந்த வகையில் பெண்கள் குடிப்பதனால் உடலில் மற்றும் கருப்பையில் உள்ள பனிக்குட நீர் குறையாமல் பார்த்துக்கொள்ளலாம். இந்த மாதிரி நிறைய தண்ணீர் பழச்சாறு மோர் இதனால் குடிப்பதினால் சுகப்பிரசவம் மிகவும் எளிமையானதாக ஒரு பெண்ணிற்கு இருக்கும். நடைப்பயிற்சி: கர்ப்பகாலத்தின் ஆரம்பகாலத்தில் நடைப்பயிற்சி செய்யாமல் இருந்தாலும் ஒரு பெண்ணின் ஆறு மாத காலத்தில் இருந்து அல்லது ஏழாவது மாத கர்ப்ப காலத்தில் இருந்து காலையில் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்தாள் குழந்தை தலைகீழாக கர்ப்பவாய் நோக்கி நகரத் தொடங்கி சுகப்பிரசவம் ஆவதற்காக இடுப்பு எலும்புகள் தானாக தயாராகி ஒரு பெண்ணிற்கு எளிமையாக சுகப்பிரசவம் ஆக இந்த நடைபயிற்சி மிகவும் உதவியாக இருக்கும். நடை பயிற்சி செய்யும் பொழுது அருகில் உங்கள் துணையும் அல்லது பெற்றோரும் நண்பரும் உடன் இருக்கையில் மட்டுமே நடைப்பயிற்சி செய்ய வேண்டும் காரணம் வாந்தி மயக்கம் இருப்பவர்கள் இதனை அருகில் ஒருத்தர் இருக்கும் போது மட்டும் நடக்க வேண்டும். கர்ப்ப காலத்தின் இறுதி காலத்தில் அதாவது பத்தாவது மாதத்தில் நடை பயிற்சி செய்யும் பொழுது அருகில் ஒரு துணையோடு மட்டுமே நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள் உணவு உண்டபின் பத்து நிமிடங்கள் அல்லது 20 நிமிடங்கள் கழித்து நடை பயிற்சியோ அல்லது உடற்பயிற்சியோ செய்யலாம் நடை பயிற்சி செய்யும் பொழுது தண்ணீர் குடிக்கலாம் அதனை கையில் எடுத்துச் செல்வது நலம். உடற்பயிற்சி: சில மருத்துவமனைகளில் சுகப்பிரசவம் ஆவதற்கு உடற்பயிற்சி கற்றுக் கொடுப்பார்கள் அதை தினமும் தவறாமல் செய்யும் பொழுது இடுப்பு எலும்புகள் சுகப்பிரசவத்துக்கு தயாராகி மிக எளிமையாக சுகப்பிரசவமாகும் அந்த உடற்பயிற்சியை தவறாமல் காலையில் மற்றும் மாலையில் செய்ய வேண்டும் . மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அந்த உடற்பயிற்சி செய்யக் கூடாது குழந்தையின் நிலை மற்றும் உங்கள் உடலின் நிலையை மருத்துவர் அறிந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றால் மட்டுமே செய்ய வேண்டும். மன அமைதி: கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று கர்ப்பகாலத்தில் மன அமைதியும் சந்தோஷமும். மன அமைதியும் மகிழ்ச்சியும் இருந்தாலே கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் இதுவும் சுகப்பிரசவத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயம்: கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் நாள் நெருங்க நெருங்க மனதில் ஒரு பயம் இருந்தே இருக்கும் அந்த பயத்தை முழுவதுமாக மனதிலிருந்து அகற்றி விடுங்கள் காரணம் அந்த பயமே உங்களை சுகப் பிரசவத்தில் இருந்து சிசேரியனுக்கு மனதை மாற்றி விடும். உங்கள் குழந்தையை இந்த உலகத்திற்கு வர வைக்கப் போகிறோம் நாம் பார்க்க போகிறோம் அப்படிங்கிற ஒரு எண்ணத்தோடு மட்டுமே காத்துக் கொண்டு இருங்கள். ஒரு பெண்ணிற்கு பிரசவம் என்பது மறு ஜென்மம் என்பது உண்மைதான் அதற்காக பயப்படத் தேவையில்லை எல்லா பெண்களும் வாழ்விழும் இதை கடந்து தான் வருகிறார்கள். சிலபேர் அவர்களுடைய கர்ப்ப காலத்தில் நடந்த பிரசவ காலத்தில் நடந்த சில விஷயங்களை கூறும் போது கர்ப்பிணி பெண்களுக்கு பயத்தை ஏற்படுகிறது கேட்டு மட்டும் தெரிந்து கொள்ளலாம் அது தங்களுக்கு நடந்துவிடுமோ என்று பயப்படாமல் இருங்கள். ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு ஒரு மாதிரிதான் பிரசவகாலத்தில் உடல்நலம் பிரசவம் எல்லாம் ஏற்படுகிறது இதனால் எதுவும் பயப்படத் தேவையில்லை. பிரசவ வலி வந்து விட்டாலோ அல்லது பிரசவத்திற்கு முன்னரோ பயப்படாமல் குழந்தை பிறப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் நம்மால் என்ன செய்ய முடிகிறது என்பதை கவனத்துடன் மனம் சிதறாமல் பயப்படாமல் செய்தாலே சுகப்பிரசவமாகும் எளிதாக அமையும். மருத்துவர்கள் பிரசவத்தின் போது என்ன சொல்கிறார்களோ அதை காதில் வாங்கிகொண்டு சரியாக செய்தாலே சுகப்பிரசவமாகும் அந்த நேரத்தில் வரும் வலியை தாங்கிக்கொண்டு காலம் முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம். வேலைகள்: கர்ப்பிணி பெண்கள் சில சின்னசின்ன வேலைகளை செய்யலாம் ஏழாவது மாதத்தில் குனிந்து வீட்டைக் கூட்டுவது பாத்திரம் விளக்குவது இது சுகப்பிரசவத்திற்கு மிகவும் உதவும்.வீட்டைக் கூட்டுவது என்றால் குனிந்து மட்டுமே கூட்ட வேண்டும் நின்ன வாக்கில் கூட்டக் கூடாது. பெரியவர்கள் நிறைய பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் கர்ப்பிணி பெண்கள் குனிந்து நிமிர்ந்து வேலை செய்தால் மட்டுமே சுகப்பிரசவம் ஆகும் என்பது இது முற்றிலும் உண்மைதான் வீட்டை பெருக்கும் போது பாத்திரத்தைத் துலக்கும் போதும் உங்கள் உடல் மற்றும் இடுப்பில் ஏற்படுகின்ற மாற்றத்தை உணர்வீர்கள் இதுநாள் தோறும் செய்வது சுகப்பிரசவத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். குழந்தை தலை கீழாக கர்ப்பப்பை வாயை நோக்கி மிகவும் சுலபமாக குழந்தையின் தலை திரும்பும். பிரசவ காலம் நெருங்கும் பொழுது அதிகமாக அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும் இது சுகப்பிரசவத்தை கடினமாகும். கர்ப்பிணி பெண்கள் வீட்டில் உள்ள அனைத்து துணிகளும் துவக்க தேவை இல்லை உங்களது உடைகளை தினமும் துவைத்தால் அதுவே உங்களுக்கு சரியான உடற்பயிற்சி ஆகும் இதுவும் உங்களது சுக பிரசவத்திற்கு வழி வகுக்கும். கர்ப்ப காலத்தில் உடலுறவு: கர்ப்பிணி பெண்கள் அவர்கள் துணையோடு கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்வதாள் சுகப்பிரசவம் ஆகுவதற்கு இதுவும் ஒரு வழியாகும். கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் அதனை முதல் மூன்று மாதத்திற்கு செய்யக்கூடாது மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பிறகு கணவன் மனைவி உடலுறவு கொள்ள வேண்டும். எந்த மாதத்தில் இருந்து உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என மருத்துவர் சொன்ன பின்பே உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் காரணம் கர்ப்பப்பை வாய் திறந்து இருந்திருந்தாலோ அல்லது கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் உபாதைகள் இருந்தாலும் மருத்துவர் இதனை செய்ய வேண்டாம் என்பார்கள் அதனால் அப்பொழுது செய்யக்கூடாது. சுடு தண்ணீர் மற்றும் எண்ணெய்: ஆறுவது மாதத்தில் இருந்து கர்ப்பிணி பெண்கள் இரவு தூளோங்க செல்லும் முன் வயிறின் முன் பகுதியில் விளக்கு எண்ணையை தொப்புளை சுற்றி ஒரு சிறிய மசாஜ் செய்யுது பத்து நிமிடங்கள் களித்து வெது வெது பான சுடுநீரில் குளிக்கவும்.இதனால் இரவில் நன்றாக உறங்க முடியும்.வயிறில் தழும்புகள் வராமல் இருப்பதோடு சுகப்பிரசவத்திற்கு வயிற்று தசைகள் விரிவடையும். இடுப்பு எலும்புகள் விரிவடைய சுகம் பிரசவம் எளிமையாக்க காலை மற்றும் மாலையில் நன்றாக காய வாய்த்த சுடுநீரை இடுப்பு பகுதில் ஊற்றவும்.வயிற்றின் முன் பகுதில் ஊற்ற கூடாது. மேலே கூறிய அனைத்தும் ஒரு கர்ப்பிணிப் பெண் செய்யும்பொழுது சுகப்பிரசவம் என்பது அந்தப் பெண்ணிற்கு ஒரு வரமாக அமையும்.