கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று மாதம் உறங்கும் முறை.
முதல் மூன்று மாதம் கர்ப்பிணிப்பெண்கள் மல்லாந்து படுக்கலாம். எந்த நிலையிலும் கவிழ்ந்து படுக்கக்கூடாது. கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று மாதத்தில் இருந்து இடது பக்கம் ஒரு பக்கமாக சாய்ந்து படுக்க பழகிக்கொள்ளவேண்டும். இடது பக்கம் படுப்பதே குழந்தைக்கும் தாய்க்கும் ஆரோக்கியமானது. இடது பக்கம் தாய் படுப்பதால் குழந்தைக்கு தேவையான ரத்த ஓட்டம் செல்லும். கர்ப்ப காலம் செல்ல செல்ல இடதுபக்கம் படுப்பதால் குழந்தைக்கு தேவையான ஆரோக்கியம் மற்றும் குழந்தை கர்ப்பப் பையில் ஓடியாடி விளையாட தேவையான இடம் கிடைக்கும். இதனால் குழந்தையின் மனா மற்றும் உடல் வளர்ச்சி சீராக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் பெண்களின் மார்பு பகுதியில் இருந்து பால் போன்ற பிசுபிசுப்பான திரவம் வெளிப்படுவது இயற்கையானதே பால் சுரப்பிகள் அதிகம் உற்பத்தியாவதால் இத்தகைய நிலை ஏற்படுகிறது. எனவே இதை கண்டு பயப்பட வேண்டாம் இது முற்றிலும் குழந்தை நன்றாக இருப்பதற்கான மற்றும் உடல் நன்றாக இருப்பதற்கான அறிகுறி மட்டுமே.
இருந்தாலும் அதிகமாக அப்படி பட்டுக்கொண்டே இருந்தால் உங்கள் உடல் பலவீனமாக ஆகும் வாய்ப்பு உள்ளது . எனவே நீங்கள் சோர்வாக உணர்ந்தீர்கள் என்றால் அதற்க்கு தகுந்தாற்போல உங்களுக்கு தேவையான உணவுகளை நீங்கள் எடுத்து கொள்ளுங்கள் . அதையும் தாண்டி உங்களுக்கு சோர்வாக இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
கருவுற்ற ஒவ்வொரு பெண்ணுக்கும் முதல் மூன்று மாதம் என்பது மிக முக்கிய காலமாக கருதப்படுகிறது. ஏனென்றால் குழந்தையின் தண்டுவட வளர்ச்சி மூளை வளர்ச்சி குழந்தையின் முழு உடல் வளர்ச்சியும் உருவாகக்கூடிய காலமாக இருப்பதால் இந்த காலத்தில்தான் பெண்களின் உடலில் நடக்கக்கூடிய ஹார்மோன் சென்சஸ் காரணமாக வாந்தி, மயக்கம், பசியின்மை போன்ற பிரச்சினைகளை சந்திப்பார்கள்.
இதன் காரணமாக எக்காரணத்தைக் கொண்டும் உணவை நாம் தடை செய்யக்கூடாது கண்டிப்பாக மிகக்குறைவாக சாப்பிட்டாலும் கூட முறையாக உணவு அருந்த வேண்டும்.
உணவு சத்தானதாகவும் ஆரோக்கியமானதாகவும் வயிற்றில் வளரக்கூடிய குழந்தையின் வளர்ச்சிக்கு தகுந்தாற் போலவும் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியமான சத்துக்கள்,
1. புரதம்
2. இரும்புச்சத்து
3. கால்சியம்
4. போலிக் அமிலம்
5. வைட்டமின் பி12
இந்த சத்துக்கள் குழந்தையின் ஆரம்பகால வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாக கருதப்படுகிறது.இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து உண்ணுதல் வேண்டும்.
அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்,
1. புரதம்
முட்டையில் வெள்ளைக்கருவில் முழுமையாக புரதச்சத்து நிறைந்துள்ளது. நல்ல கொழுப்பு மற்றும் போலிக் அமிலம் கால்சியம் வைட்டமின் பி போன்ற சத்துக்களும் உள்ளன.
காய்கறிகளில் உள்ள புரோட்டீன் சத்துக்கள்:
பன்னீர், காளான், சோயா பீன்ஸ், பருப்பு வகைகள், பச்சை பட்டாணி, கருப்பு உளுந்து இந்த வகையான உணவுகளில் புரதச்சத்து நிறைந்துள்ளது.
இந்த வகையான உணவுகளை தினசரி ஒரு உணவை சமைத்து சாப்பிடுவது நல்லது.
2. இரும்புச்சத்து
காய்கறிகளில் முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
ஹீமோகுளோபின் அதிகமாக உற்பத்தி செய்ய இந்த முருங்கைக்கீரை உதவுகிறது.
ரத்த அளவை அதிகரிக்கச் செய்யவும் கருவில் உள்ள குழந்தையின் ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.
இரும்புச்சத்து மற்றொரு உணவு,
ஈரல், சிக்கன் ஈரல் மட்டன் ஈரல் இதில் எதுவானாலும் நன்றாக சமைத்து எடுத்துக்கொள்வதன் மூலம் இரும்புச் சத்து நமக்கு கிடைக்கின்றது. 5 முதல் 100 கிராம் வரை அருந்தலாம்.
கர்ப்ப காலங்களில் ரத்த சோகை என்னும் அனிமியா வினால் பல பெண்கள் அவதிப்படுவார்கள் இதனால் பல பிரச்சனைகளும் ஏற்படும். புதிய இரத்தம் அதிகமாக உருவாகவும் நமக்கு தேவைப்படுவது இரும்புச்சத்துக்கள் தான்.
ஈரல் வகைகளில் ஏதாவது ஒரு ஈரல் வகைகளை நன்றாக சமைத்து நாம் எடுத்துக் கொள்வதன் மூலம் கற்ப காலங்களில் வரும் அனிமியா பிரச்சனைகளை தடுக்கலாம். வாரம் மூன்று முறை இதனை சாப்பிடலாம்.
3. கால்சியம்
ஒரு கப் பாலில் 300 கிராம் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இது குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு அவசியமாக உள்ளது. தினசரி ஒன்று அல்லது இரண்டு டம்ளர் பால் குடிப்பது நல்லது.
காய்கறிகளில் உள்ள கால்சியம் சத்துக்கள் :
காலிஃப்ளவர், வெண்டைக்காய், முட்டைக்கோஸ்.
இதனை தினசரி ஒரு காய்கறிகளை சமைத்து சாப்பிடுவது நல்லது.
தண்ணீர்:
கர்ப்ப காலங்களில் தினசரி 3 லிட்டரிலிருந்து 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.
குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குடத்தில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதற்கும் தண்ணீர் மிக அவசியம். அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும்.
கேரட் , பீட்ரூட் குழந்தையின் கண் வளர்ச்சிக்கு நல்லது.
மாதுளை பழத்தை வெறும் வயிற்றில் ஜூஸ் செய்து குடிப்பதனால் ரத்த அளவை உற்பத்தி செய்ய உதவுகிறது. விதை உள்ள மாதுளையை சாப்பிடுவது நல்லது.
சாத்துக்கொடி ஆரஞ்சு நெல்லிக்காய் திராட்சை கொய்யா பழம் போன்ற பழங்களை சாப்பிடுவது நல்லது.
இளநீர்
இளநீர் நீர்ச்சத்து குறையாமல் இருக்க உதவுகிறது. வாந்தி பசியின்மை சோர்வு இதனை குணமாக்க இளநீர் பயன்படுகிறது.
நட்ஸ்:(வைட்டமின் சத்துக்கள்)
பாதாம், முந்திரி, வேர்க்கடலை இவைகளில் வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது.
எல்லா காய்கறிகளையும் சூப் வைத்து குடிப்பது நல்லது இரவில் டீ அல்லது காபி க்கு பதிலாக இதனை அருந்தி வருவது நல்லது.