கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மேல் வயிற்று வலி ஏற்படுவது என்பது சாதாரணமாக நிகழக் கூடிய ஒன்று.... இதனால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆறுமாதம் கடந்த கர்ப்பிணிகளுக்கு மேல் வயிற்றுவலி ஏற்படும் அல்சர் மற்றும் வாய்வு சேர்தல் உடல் சூடு போன்ற காரணங்களினால் இவை ஏற்படுகிறது தீர்வு: ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து சிறிது ஆறிய பின் குடித்தால் அஜீரணக் கோளாறு சரியாகும் ஒருவேளை அல்சரினால் வயிற்றில் புண் ஏற்படாமல் இருந்தால் ஒரு டம்ளர் பாலில் இரண்டு மூன்று பற்கள் பூண்டு போட்டு கொதிக்க வைத்து அதனை பூண்டோடு சேர்த்து சாப்பிட வேண்டும் இதனால் வாய்வு பிரச்சனையானது அடுத்த 30 நிமிடங்களுக்குள் சரியாகி மேல் வயிற்று வலியில் இருந்து முற்றிலுமாக நிவாரணம் தரும். ஒருவேளை அல்சரினால் வயிற்றில் காயங்கள் இருந்தால் இதை சாப்பிட கூடாது ஏனென்றால் பூண்டில் உள்ள காரத்தன்மை மேலும் புண்ணாக்கி தீராத வயிற்று வலியை உண்டுபண்ணும். உடல் சூட்டினால் ஏற்பட்ட வயிற்று வலியாக இருப்பின் வயிற்றில் விளக்கெண்ணெய் தேய்ப்பதன் மூலம் சரியாகும் காரமான உணவுகளை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது சிறந்தது.