1. குட்டை ரக புடலங்காய் சாப்பிட்டு வந்தால் உடம்பிற்கு உபாதைகளை மட்டுமே கொடுக்கும் அதனால் அதனை சாப்பிடக்கூடாது. புடலங்காயை அன்றாடம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர உடலுக்கு மிகுந்த வலிமை தரும். 2. புடலங்காய் ஆனது பித்தத்தையும் கபத்தையும் அதிகரிக்கச் செய்யும். ஆதலால் பித்தம் கபம் உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது. 3. ஆனால் வாதத்தை நீக்கும் பசியுணர்வைத் தூண்டும் காரணியாக புடலங்காய் செயல்படுகிறது மேலும் மலமிளக்கியாகவும் செயல்படும். 4. ஆண்களுக்கு விந்து விருத்திக்கு புடலங்காய் பெரும்பங்காற்றுகிறது. மேலும் வயிற்றில் உள்ள குடல்களில் சுத்தப்படுத்தும் தன்மையானது புடலங்காய்க்கு உண்டு.